அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி * - மொழிபெயர்ப்பு அட்டவணை

XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு வசனம்: (154) அத்தியாயம்: ஸூரா ஆலஇம்ரான்
ثُمَّ اَنْزَلَ عَلَیْكُمْ مِّنْ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا یَّغْشٰی طَآىِٕفَةً مِّنْكُمْ ۙ— وَطَآىِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ یَظُنُّوْنَ بِاللّٰهِ غَیْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِیَّةِ ؕ— یَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَیْءٍ ؕ— قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِ ؕ— یُخْفُوْنَ فِیْۤ اَنْفُسِهِمْ مَّا لَا یُبْدُوْنَ لَكَ ؕ— یَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَیْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ؕ— قُلْ لَّوْ كُنْتُمْ فِیْ بُیُوْتِكُمْ لَبَرَزَ الَّذِیْنَ كُتِبَ عَلَیْهِمُ الْقَتْلُ اِلٰی مَضَاجِعِهِمْ ۚ— وَلِیَبْتَلِیَ اللّٰهُ مَا فِیْ صُدُوْرِكُمْ وَلِیُمَحِّصَ مَا فِیْ قُلُوْبِكُمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
154. (நம்பிக்கையாளர்களே!) இத் துயரத்திற்குப் பின்னர் (அல்லாஹ்) உங்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய நித்திரையை இறக்கிவைத்தான். உங்களில் ஒரு கூட்டத்தினரை அது சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினருக்கோ அவர்களுடைய கவலையே பெரிதாகி மடையர்கள் எண்ணுவதைப்போல அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாதவற்றை எல்லாம் (தவறாக) எண்ண ஆரம்பித்து ‘‘நம்மிடம் (இதற்குப் பரிகாரம் செய்ய) அதிகாரம் ஏதும் உண்டா?'' என்று கேட்டனர். (இதற்கு,) ‘‘எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுடையதே!'' என்று (நபியே! பதில்) கூறுவீராக. (இவையன்றி) அவர்கள் உங்களுக்கு வெளியாக்காத பல விஷயங்களையும் தங்கள் மனதில் மறைத்துக் கொண்டு ‘‘நம்மிடம் ஏதும் அதிகாரம் இருந்திருந்தால், இங்கு வந்து (இவ்வாறு) நாம் வெட்டப்பட்டிருக்க மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர். (இதற்கு நபியே! அந்நயவஞ்சகர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் உங்கள் வீட்டில் (தங்கி) இருந்தபோதிலும் எவர்கள் மீது வெட்டப்பட்டே இறக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள் தாங்கள் வெட்டப்படவேண்டிய இடங்களுக்கு(த் தாமாக) வந்தே தீருவார்கள்'' என்றும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) அல்லாஹ் உங்கள் மனதிலுள்ளதைப் பரிசோதனை செய்வதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்குவதற்காகவும் (இவ்வாறு சம்பவிக்கும்படிச் செய்தான் என்றும் கூறுவீராக. உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான்.
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு வசனம்: (154) அத்தியாயம்: ஸூரா ஆலஇம்ரான்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி - மொழிபெயர்ப்பு அட்டவணை

புனித அல் குர்ஆனுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு- அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் பாகவி மூலம் மொழிபெயர்க்கப்பட்டது

மூடுக