Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி * - மொழிபெயர்ப்பு அட்டவணை

XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு அத்தியாயம்: புஸ்ஸிலத்   வசனம்:
اِنَّ الَّذِیْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَیْهِمُ الْمَلٰٓىِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَنَّةِ الَّتِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟
30. எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக வானவர்கள் வந்து (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்றும்,
அரபு விரிவுரைகள்:
نَحْنُ اَوْلِیٰٓؤُكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ۚ— وَلَكُمْ فِیْهَا مَا تَشْتَهِیْۤ اَنْفُسُكُمْ وَلَكُمْ فِیْهَا مَا تَدَّعُوْنَ ۟ؕ
31. ‘‘நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு நண்பர்களாக இருந்தோம்; மறுமையிலும் (நாங்கள் உங்களுக்கு நண்பர்களே). சொர்க்கத்தில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்''
அரபு விரிவுரைகள்:
نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِیْمٍ ۟۠
32. ‘‘பாவங்களை மன்னித்து மகா கருணை செய்பவனின் விருந்தாளியாக (அதில் தங்கி) இருங்கள்'' என்றும் (வானவர்கள்) கூறுவார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَی اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் ஒருவன்'' என்றும் கூறுகிறாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்?
அரபு விரிவுரைகள்:
وَلَا تَسْتَوِی الْحَسَنَةُ وَلَا السَّیِّئَةُ ؕ— اِدْفَعْ بِالَّتِیْ هِیَ اَحْسَنُ فَاِذَا الَّذِیْ بَیْنَكَ وَبَیْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِیٌّ حَمِیْمٌ ۟
34. நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீர் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக. அவ்வாறாயின், உமது கொடிய எதிரியை அதே சமயத்தில் உமது உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர்.
அரபு விரிவுரைகள்:
وَمَا یُلَقّٰىهَاۤ اِلَّا الَّذِیْنَ صَبَرُوْا ۚ— وَمَا یُلَقّٰىهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِیْمٍ ۟
35. பொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதை அடைய மாட்டார்கள். மேலும், பெரும் பாக்கியமுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதை அடைய மாட்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَاِمَّا یَنْزَغَنَّكَ مِنَ الشَّیْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ— اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
36. (நபியே!) ஷைத்தானுடைய ஓர் ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உம்மைத் தூண்டும் சமயத்தில் (உம்மை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ்விடத்தில் நீர் கோருவீராக! நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன். (ஆதலால், அவன் உம்மை பாதுகாத்துக் கொள்வான்.)
அரபு விரிவுரைகள்:
وَمِنْ اٰیٰتِهِ الَّیْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ ؕ— لَا تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوْا لِلّٰهِ الَّذِیْ خَلَقَهُنَّ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟
37. ‘‘இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவனுடைய (வல்லமையை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளில் உள்ளவை. ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும் (சிரம் பணியாதீர்கள்;) சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவற்றை படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்'' (என்று நபியே! கூறுவீராக.)
அரபு விரிவுரைகள்:
فَاِنِ اسْتَكْبَرُوْا فَالَّذِیْنَ عِنْدَ رَبِّكَ یُسَبِّحُوْنَ لَهٗ بِالَّیْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا یَسْـَٔمُوْنَ ۟
38. ஆகவே (நபியே!) இவர்கள் கர்வம் (கொண்டு இறைவனை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், (அதனால் அவனுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.) உங்கள் இறைவனிடத்தில் உள்ளவர்(களாகிய வானவர்)கள் இரவும் பகலும் அவனைத் துதி செய்து புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். (இதில்) அவர்கள் சோர்வடைவதே இல்லை.
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: புஸ்ஸிலத்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி - மொழிபெயர்ப்பு அட்டவணை

அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் பாகவி மூலம் மொழிபெயர்க்கப்பட்டது.

மூடுக