Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி * - மொழிபெயர்ப்பு அட்டவணை

XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்அன்ஆம்   வசனம்:

அல்அன்ஆம்

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَجَعَلَ الظُّلُمٰتِ وَالنُّوْرَ ؕ۬— ثُمَّ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ یَعْدِلُوْنَ ۟
1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியதே! அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். மேலும், இருள்களையும், ஒளியையும் உண்டாக்கினான். இவ்வாறிருந்தும் நிராகரிப்பவர்கள் (அல்லாஹ்வாகிய) தங்கள் இறைவனுக்கு (பொய்யான தெய்வங்களை) சமமாக்குகின்றனர்.
அரபு விரிவுரைகள்:
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ طِیْنٍ ثُمَّ قَضٰۤی اَجَلًا ؕ— وَاَجَلٌ مُّسَمًّی عِنْدَهٗ ثُمَّ اَنْتُمْ تَمْتَرُوْنَ ۟
2. அவன்தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) வாழ்நாளைக் (குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் (உங்கள் விசாரணைக்காகவும்) ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. இவ்வாறிருந்தும் நீங்கள் (அவனுடைய இறைத்தன்மையை) சந்தேகிக்கிறீர்கள்.
அரபு விரிவுரைகள்:
وَهُوَ اللّٰهُ فِی السَّمٰوٰتِ وَفِی الْاَرْضِ ؕ— یَعْلَمُ سِرَّكُمْ وَجَهْرَكُمْ وَیَعْلَمُ مَا تَكْسِبُوْنَ ۟
3. வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ், அவன்தான். அவன் உங்கள் இரகசியத்தையும் வெளிப்படையானதையும் நன்கறிவான். (நன்மையோ, தீமையோ) நீங்கள் செய்யும் அனைத்தையும் நன்கறிவான்.
அரபு விரிவுரைகள்:
وَمَا تَاْتِیْهِمْ مِّنْ اٰیَةٍ مِّنْ اٰیٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِیْنَ ۟
4. (இவ்வாறிருந்தும், நிராகரிப்பவர்களோ) தங்கள் இறைவனின் வசனங்களில் எது வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
அரபு விரிவுரைகள்:
فَقَدْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَآءَهُمْ ؕ— فَسَوْفَ یَاْتِیْهِمْ اَنْۢبٰٓؤُا مَا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
5. ஆகவே, அவர்களிடம் வந்திருக்கும் இந்த சத்திய (வேத)த்தையும் அவர்கள் பொய்யாக்குகின்றனர். ஆனால், எவ்விஷயங்கள் பற்றி (அவை பொய்யானவை என) அவர்கள் பரிகசித்து கொண்டிருக்கின்றனரோ அவை (உண்மையாகவே) அவர்களிடம் வந்தே தீரும்.
அரபு விரிவுரைகள்:
اَلَمْ یَرَوْا كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ مَّكَّنّٰهُمْ فِی الْاَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَّكُمْ وَاَرْسَلْنَا السَّمَآءَ عَلَیْهِمْ مِّدْرَارًا ۪— وَّجَعَلْنَا الْاَنْهٰرَ تَجْرِیْ مِنْ تَحْتِهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَنْشَاْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِیْنَ ۟
6. அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்கு நாம் செய்து தந்திருந்தோம். வானத்திலிருந்து தாரை தாரையாக மழை பெய்யும்படிச் செய்து, அவர்களின் (ஆதிக்கத்தின்) கீழ் நீரருவிகளும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்படி செய்தோம். (எனினும் அவர்கள் பாவத்திலேயே ஆழ்ந்து விட்டனர்.) ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை அழித்துவிட்டோம். அவர்களுக்குப் பின்னர் மற்றொரு கூட்டத்தாரை நாம் உற்பத்தி செய்தோம்.
அரபு விரிவுரைகள்:
وَلَوْ نَزَّلْنَا عَلَیْكَ كِتٰبًا فِیْ قِرْطَاسٍ فَلَمَسُوْهُ بِاَیْدِیْهِمْ لَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
7. கடிதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதத்தையே நாம் உம்மீது இறக்கிவைத்து அதை அவர்கள் தங்கள் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும் ‘‘இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் நிச்சயம் கூறுவார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَقَالُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ مَلَكٌ ؕ— وَلَوْ اَنْزَلْنَا مَلَكًا لَّقُضِیَ الْاَمْرُ ثُمَّ لَا یُنْظَرُوْنَ ۟
8. (‘‘இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சி சொல்வதற்கு) அவருக்காக ஒரு வானவர் அனுப்பப்பட வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்கள் விரும்புகிறபடி) நாம் ஒரு வானவரை அனுப்பி வைத்திருந்தால், (அவர்களின்) காரியம் முடிவு பெற்றிருக்கும். பிறகு, (அதில்) அவர்களுக்கு அவகாசம் கிடைத்திருக்காது. (உடனே அவர்கள் அழிந்திருப்பார்கள்.)
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்அன்ஆம்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி - மொழிபெயர்ப்பு அட்டவணை

அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் பாகவி மூலம் மொழிபெயர்க்கப்பட்டது.

மூடுக