அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி * - மொழிபெயர்ப்பு அட்டவணை

XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு வசனம்: (20) அத்தியாயம்: ஸூரா அல்முஸ்ஸம்மில்
اِنَّ رَبَّكَ یَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰی مِنْ  الَّیْلِ وَنِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآىِٕفَةٌ مِّنَ الَّذِیْنَ مَعَكَ ؕ— وَاللّٰهُ یُقَدِّرُ الَّیْلَ وَالنَّهَارَ ؕ— عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَیْكُمْ فَاقْرَءُوْا مَا تَیَسَّرَ مِنَ الْقُرْاٰنِ ؕ— عَلِمَ اَنْ سَیَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰی ۙ— وَاٰخَرُوْنَ یَضْرِبُوْنَ فِی الْاَرْضِ یَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِ ۙ— وَاٰخَرُوْنَ یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۖؗ— فَاقْرَءُوْا مَا تَیَسَّرَ مِنْهُ ۙ— وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا ؕ— وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَیْرًا وَّاَعْظَمَ اَجْرًا ؕ— وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
20. (நபியே!) நிச்சயமாக நீரும், உம்மோடு இருப்பவர்களில் ஒரு கூட்டத்தினரும், சற்றேறக்குறைய இரவில் மூன்றில் இரண்டு பாகம் அல்லது பாதி அல்லது மூன்றில் ஒரு பாக நேரம் (தொழுகையில்) நின்று வருகிறீர்கள் என்பதை நிச்சயமாக உமது இறைவன் அறிவான். இரவு பகலைக் கணக்கிட அல்லாஹ்வால்தான் முடியும். நீங்கள் அதைச் சரிவரக் கணக்கிட முடியாதென்பதை அவன் அறிந்து (இருப்பதனால்தான், இரவில் இன்ன நேரத்தில், இவ்வளவு தொழவேண்டுமெனக் குறிப்பிட்டுக் கூறாது,) உங்களை அவன் மன்னித்து விட்டான். ஆகவே, (இரவில் நீங்கள் தொழுதால்) குர்ஆனில் உங்களுக்குச் சாத்தியமான அளவு ஓதுங்கள். ஏனென்றால், உங்களில் நோயாளிகள் இருக்கக்கூடுமென்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வின் அரு(ளாகிய பொரு)ளைத் தேடி, பூமியின் பல பாகங்களிலும் செல்ல வேண்டியதிருக்கும் என்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியச் செல்ல வேண்டியதிருக்குமென்பதையும் அவன் நன்கறிவான். ஆதலால், (உங்கள் அவகாசத்திற்குத் தக்கவாறு கூட்டியோ குறைத்தோ) உங்களுக்குச் சௌகரியமான அளவே ஓதுங்கள். (ஆயினும்) தொழுகையை (தவறவிடாது) சரியாக நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். (ஏழைகளுக்கு உதவுவதன் மூலம்) அல்லாஹ்வுக்கு அழகான முறையில் கடனும் கொடுங்கள். நன்மையான காரியங்களில் எவற்றை நீங்கள் உங்களுக்காக, (உங்கள் மரணத்திற்கு முன்னதாகவே) செய்து வைத்துக் கொண்டீர்களோ அவற்றையே, மேலான நன்மைகளாகவும் மகத்தான கூலியாகவும் நீங்கள் அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு வசனம்: (20) அத்தியாயம்: ஸூரா அல்முஸ்ஸம்மில்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - அப்துல் ஹமீத் பாகவி - மொழிபெயர்ப்பு அட்டவணை

புனித அல் குர்ஆனுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு- அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் பாகவி மூலம் மொழிபெயர்க்கப்பட்டது

மூடுக