Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு அத்தியாயம்: யூனுஸ்   வசனம்:
اِنَّ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا وَرَضُوْا بِالْحَیٰوةِ الدُّنْیَا وَاطْمَاَنُّوْا بِهَا وَالَّذِیْنَ هُمْ عَنْ اٰیٰتِنَا غٰفِلُوْنَ ۟ۙ
10.7. அல்லாஹ்வை அஞ்சவோ ஆசை வைக்கவோ அவனது சந்திப்பை எதிர்பார்க்காத, நிரந்தரமான மறுமை வாழ்க்கைக்குப் பகரமாக அழியக் கூடிய இவ்வுலக இன்பங்களை விரும்பி அவற்றின் மூலம் மகிழ்வடைந்து உள்ளங்கள் அதன்பக்கம் சாய்ந்துவிட்ட நிராகரிப்பாளர்களும், அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும் சான்றுகளையும் புறக்கணித்தவர்களும்
அரபு விரிவுரைகள்:
اُولٰٓىِٕكَ مَاْوٰىهُمُ النَّارُ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
10.8. மறுமையை பொய்பித்து, மறுத்ததன் காரணமாக இப்பண்புகளை உடையவர்களின் தங்குமிடம் நரகமாகும்.
அரபு விரிவுரைகள்:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ یَهْدِیْهِمْ رَبُّهُمْ بِاِیْمَانِهِمْ ۚ— تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
10.9. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிந்தவர்களுக்கு அவர்களின் நம்பிக்கையினால் தன் திருப்தியைப் பெற்றுத்தரக்கூடிய செயல்களின்பால் வழிகாட்டுவான். பின்னர் மறுமை நாளில் நிரந்தரமான இன்பங்களுடைய சுவனங்களில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான். அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்.
அரபு விரிவுரைகள்:
دَعْوٰىهُمْ فِیْهَا سُبْحٰنَكَ اللّٰهُمَّ وَتَحِیَّتُهُمْ فِیْهَا سَلٰمٌ ۚ— وَاٰخِرُ دَعْوٰىهُمْ اَنِ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
10.10. சுவனத்தில் அவர்களின் பிரார்த்தனை, அல்லாஹ்வைத் துதிப்பதும் புனிதப்படுத்துவதுமேயாகும். அல்லாஹ், வானவர்கள் ஆகியோரின் முகமனும் அவர்கள் தமக்கு மத்தியில் பரிமாறிக் கொள்ளும் முகமனும் சலாம் (சாந்தி) என்பதாகும். படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்பதே அவர்களின் பிரார்த்தனையின் முடிவாக இருக்கும்.
அரபு விரிவுரைகள்:
وَلَوْ یُعَجِّلُ اللّٰهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالْخَیْرِ لَقُضِیَ اِلَیْهِمْ اَجَلُهُمْ ؕ— فَنَذَرُ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
10.11. மனிதர்கள் செய்யும் நன்மையான பிரார்த்தனைகளை அல்லாஹ் உடனுக்குடன் ஏற்றுக் கொள்வதைப் போல அவர்கள் கோபத்தின் போது தங்களுக்கோ தங்கள் பிள்ளைகளுக்கோ செல்வங்களுக்கோ எதிராக செய்யும் பிரார்த்தனையும் அவன் உடனுக்குடன் ஏற்றுக்கொண்டால் அவர்கள் அழிந்து விடுவார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறான். தன் சந்திப்பை நம்பாதவர்களை அவன் விட்டு விடுகிறான். ஏனெனில் அவர்கள் தண்டனையை அஞ்சுவதுமில்லை, நன்மையை எதிர்பார்ப்பதுமில்லை. கணக்கு தீர்க்கப்படும் நாளில் சந்தேகம் கொண்டு தடுமாறித்திரிபவர்களாக அவர்களை விட்டுவிடுகிறான்.
அரபு விரிவுரைகள்:
وَاِذَا مَسَّ الْاِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْۢبِهٖۤ اَوْ قَاعِدًا اَوْ قَآىِٕمًا ۚ— فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهٗ مَرَّ كَاَنْ لَّمْ یَدْعُنَاۤ اِلٰی ضُرٍّ مَّسَّهٗ ؕ— كَذٰلِكَ زُیِّنَ لِلْمُسْرِفِیْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
10.12. தன் மீதே அநீதியிழைக்கும் மனிதனுக்கு ஏதேனும் நோயோ தீங்கோ ஏற்பட்டு விட்டால் பணிவாக ஒருக்களித்துப் படுத்தவனாக அல்லது அமர்ந்தவனாக அல்லது நின்றவனாக தனக்கு ஏற்பட்ட தீங்கை அகற்றும்படி நம்மிடம் மன்றாடுகிறான். நாம் அவனது பிரார்த்தனைக்குப் பதிலளித்து அவனுக்கு ஏற்பட்ட தீங்கை அகற்றி விட்டால் தனக்கு ஏற்பட்ட தீங்கை அகற்றுவதற்கு நம்மை அழைக்காதவனைப் போன்று தனது பழைய நிலைக்கே சென்று விடுகிறான். புறக்கணிக்கும் இவனுக்கு தனது வழிகேட்டில் நிலைத்திருப்பது அழகாக்கப்பட்டதைப் போன்றே அல்லாஹ்வின் வரம்புகளை மீறக்கூடியவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த நிராகரிப்பு மற்றும் பாவங்கள் அழகாக்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் அதனை விடமாட்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ اَهْلَكْنَا الْقُرُوْنَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوْا ۙ— وَجَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ وَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا ؕ— كَذٰلِكَ نَجْزِی الْقَوْمَ الْمُجْرِمِیْنَ ۟
10.13. -இணைவைப்பாளர்களே!- உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்கள் இறைத் தூதர்களை நிராகரித்து பாவங்கள் புரிந்ததனால் நாம் அவர்களை அழித்துவிட்டோம். அவர்களிடம் நாம் அனுப்பிய தூதர்கள் தமது இறைவனிடமிருந்து கொண்டுவந்தவற்றில் தாம் உண்மையாளர்களே என்பதை நிருபிக்கக்கூடிய தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் நம்பிக்கைகொள்ளத் தயாராக இல்லாததால் அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லை. எனவே அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழிகாட்டாமல் கைவிட்டு விட்டான். அக்கிரமக்கார அந்த சமூகங்களை தண்டித்தது போலவே நாம் ஒவ்வொரு கால கட்டத்திலும், இடத்திலும் அவர்களைப் போன்றவர்களைத் தண்டிக்கிறோம்.
அரபு விரிவுரைகள்:
ثُمَّ جَعَلْنٰكُمْ خَلٰٓىِٕفَ فِی الْاَرْضِ مِنْ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَیْفَ تَعْمَلُوْنَ ۟
10.14. அதன் பின்னர், -மனிதர்களே!- நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள், நன்மை செய்து கூலியைப் பெறுகிறீர்களா? தீமை செய்து தண்டனையைப் பெறுகிறீர்களா? என்று பார்ப்பதற்காக நாம் அழித்த நிராகரித்த சமூகங்களுக்குப் பிறகு உங்களை வழித்தோன்றல்களாக ஆக்கினோம்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• لطف الله عز وجل بعباده في عدم إجابة دعائهم على أنفسهم وأولادهم بالشر.
1. மனிதர்கள் தங்களுக்கு எதிராகவோ தங்கள் குடும்பத்தாருக்கு எதிராகவோ செய்யும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை. இது அடியார்கள் மீது அவன் புரிந்த கருணையின் வெளிப்பாடாகும்.

• بيان حال الإنسان بالدعاء في الضراء والإعراض عند الرخاء والتحذير من الاتصاف بذلك.
2. துன்பத்தில் பிரார்த்திக்கும் இன்பத்தில் புறக்கணிக்கும் மனிதனின் நிலை விபரிக்கப்பட்டு அதனை விட்டும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

• هلاك الأمم السابقة كان سببه ارتكابهم المعاصي والظلم.
3. முன்னைய சமுதாயங்களின் அழிவுக்குக் காரணம் அவர்கள் பாவங்களிலும் அநியாயத்திலும் ஈடுபட்டதாகும்.

 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: யூனுஸ்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக