Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு அத்தியாயம்: யூனுஸ்   வசனம்:
وَمِنْهُمْ مَّنْ یَّنْظُرُ اِلَیْكَ ؕ— اَفَاَنْتَ تَهْدِی الْعُمْیَ وَلَوْ كَانُوْا لَا یُبْصِرُوْنَ ۟
10.43. -தூதரே!- இணைவைப்பாளர்களில் சிலர் வெளிப்படையான பார்வையால் உம்மைப் பார்க்கிறார்கள். அவர்கள் அகப் பார்வையால் உம்மைப் பார்ப்பதில்லை. உம்மால் பார்வைகள் பறிக்கப்பட்டவனைப் பார்க்க வைக்க முடியுமா என்ன? நிச்சயமாக அது உம்மால் முடியாது. அது போன்று அகப் பார்வையை இழந்தவர்களுக்கு உம்மால் நேர்வழிகாட்ட முடியாது.
அரபு விரிவுரைகள்:
اِنَّ اللّٰهَ لَا یَظْلِمُ النَّاسَ شَیْـًٔا وَّلٰكِنَّ النَّاسَ اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
10.44. அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநீதியிழைப்பதை விட்டும் தூய்மையானவன். அணுவளவு கூட அவன் அவர்களுக்கு அநீதியிழைக்க மாட்டான். ஆயினும் அவர்கள் தாம் அசத்தியத்தில் உள்ள பிடிவாதத்தினால் அழிவிற்கான காரணிகளைத் தேடி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَیَوْمَ یَحْشُرُهُمْ كَاَنْ لَّمْ یَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ یَتَعَارَفُوْنَ بَیْنَهُمْ ؕ— قَدْ خَسِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟
10.45. மனிதர்களை விசாரணை செய்வதற்காக அல்லாஹ் அவர்களை ஒன்று திரட்டும் மறுமை நாளில் இந்த உலக வாழ்விலும் மண்ணறை வாழ்விலும் பகலின் சில பொழுதே தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வார்கள். பின்னர் மறுமை நாளில் பயங்கரமான காட்சிகளைக் கண்டதனால் அவர்களது அறிமுகம் அறுபட்டுப் போகும். மறுமை நாளில் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரித்தவர்கள் நஷ்டமடைந்துவிட்டார்கள். அவர்கள் இழப்பிலிருந்து தப்பிப்பதற்கு உலக வாழ்வில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் நாளை நம்பிக்கைகொள்பவர்களாக இருக்கவில்லை.
அரபு விரிவுரைகள்:
وَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللّٰهُ شَهِیْدٌ عَلٰی مَا یَفْعَلُوْنَ ۟
10.46. -தூதரே!- நீர் மரணிப்பதற்கு முன்பே நாம் அவர்களுக்கு வாக்களித்த வேதனையில் சிலவற்றை உமக்குக் காட்டுவோம். அல்லது அதற்கு முன்பே உம்மை மரணிக்கச் செய்வோம். இந்த இரண்டு நிலைமைகளும் எவ்வாறு இருந்தாலும் மறுமை நாளில் அவர்கள் நம் பக்கமே திரும்ப வேண்டும். பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களை அல்லாஹ் கவனித்தவனாகவே உள்ளான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
அரபு விரிவுரைகள்:
وَلِكُلِّ اُمَّةٍ رَّسُوْلٌ ۚ— فَاِذَا جَآءَ رَسُوْلُهُمْ قُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
10.47. முந்தைய ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு தூதர் அனுப்பப்பட்டார். அவருக்கு ஏவப்பட்டதை அவர் நிறைவேற்றிய பிறகு அவர்கள் அவரை நிராகரித்துவிட்டால் அவருக்கும் அவர்களுக்குமிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்பட்டு விடும். அல்லாஹ் தன் அருளால் அவரைக் காப்பாற்றுவான். தன் நீதியால் அவர்களை அழிப்பான். அவர்களின் செயல்களுக்கான கூலியில் அவர்கள் சிறிதும் அநீதி இழைக்கப்படவில்லை.
அரபு விரிவுரைகள்:
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
10.48. இந்த நிராகரிப்பாளர்கள் பிடிவாதமாகவும் சவால் விடுத்தவர்களாவும் கேட்கிறார்கள்: ”நீங்கள் கூறும் விஷயத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் எங்களை எச்சரித்த வேதனை எப்போது வரும்?”
அரபு விரிவுரைகள்:
قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِیْ ضَرًّا وَّلَا نَفْعًا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ— لِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ؕ— اِذَا جَآءَ اَجَلُهُمْ فَلَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟
10.49. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “எனக்கு நானே தீங்கிழைக்கவோ அதனைத் தடுக்கவோ சக்திபெற மாட்டேன் எனும் போது எவ்வாறு மற்றவர்களுக்கு என்னால் பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ முடியும்? ஆயினும் அல்லாஹ் நாடியதைத் தவிர. நான் எவ்வாறு அவன் மறைவாக வைத்திருக்கும் விஷயங்களை அறிய முடியும்? அல்லாஹ் அழிப்பதாக எச்சரித்த ஒவ்வொரு சமூகத்திற்கும் அழிவதற்கான குறிப்பிட்ட நேரம் உண்டு. அதனை அல்லாஹ் மட்டுமே அறிவான். அழியும் நேரம் வந்துவிட்டால் அது சிறிது நேரம் கூட முந்தவோ பிந்தவோ செய்யாது.
அரபு விரிவுரைகள்:
قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُهٗ بَیَاتًا اَوْ نَهَارًا مَّاذَا یَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُوْنَ ۟
10.50. -தூதரே!- வேதனைக்காக அவசரப்படும் இவர்களிடம் நீர் கேட்பீராக: “அல்லாஹ்வின் வேதனை இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உங்களிடம் வந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்பதைக் கூறுங்கள். இந்த வேதனையிலிருந்து எதனை அவசரமாக எதிர்பார்க்கிறீர்கள்?
அரபு விரிவுரைகள்:
اَثُمَّ اِذَا مَا وَقَعَ اٰمَنْتُمْ بِهٖ ؕ— آٰلْـٰٔنَ وَقَدْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ۟
10.51. உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட வேதனை உங்களிடம் வந்த பிறகு இதற்கு முன்பு நம்பிக்கை கொள்ளாமல், நம்பிக்கை பயனளிக்காத சமயத்தில்தான் நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்களா? இப்பொழுதுதான் நீங்கள் நம்பிக்கைகொள்கிறீர்களா? வேதனையை நிராகரிக்கும் வண்ணம் இதற்கு முன்னர் அதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களே!
அரபு விரிவுரைகள்:
ثُمَّ قِیْلَ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ ۚ— هَلْ تُجْزَوْنَ اِلَّا بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟
10.52. பின்னர் அவர்களை வேதனையில் ஆழ்த்திய பிறகு அதிலிருந்து வெளியேற விரும்பும் அவர்களிடம் கூறப்படும்: “மறுமையில் நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள். நீங்கள் செய்த நிராகரிப்பு மற்றும் பாவங்களுக்கே தவிர கூலி கொடுக்கப்படவில்லை.
அரபு விரிவுரைகள்:
وَیَسْتَنْۢبِـُٔوْنَكَ اَحَقٌّ هُوَ ؔؕ— قُلْ اِیْ وَرَبِّیْۤ اِنَّهٗ لَحَقٌّ ؔؕ— وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ ۟۠
10.53. -தூதரே!- இணைவைப்பாளர்கள், “எங்களுக்கு வாக்களிப்படும் வேதனை உண்மையானதா?” என்று உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “ஆம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது உண்மையாகும். நீங்கள் அதிலிருந்து தப்பமுடியாது.”
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• الإنسان هو الذي يورد نفسه موارد الهلاك، فالله مُنَزَّه عن الظلم.
1. மனிதன்தான் தனக்குத் தானே அழிவிற்கான காரணிகளைத் தேடிக் கொள்கிறான். அநியாயம் செய்வதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.

• مهمة الرسول هي التبليغ للمرسل إليهم، والله يتولى حسابهم وعقابهم بحكمته، فقد يعجله في حياة الرسول أو يؤخره بعد وفاته.
2. தூதரின் பணி, தான் அனுப்பப்பட்டோருக்கு எடுத்துரைப்பது மட்டுமே. அல்லாஹ் தனது ஞானத்திற்கேற்றவாறு அவர்களிடம் கணக்குத் தீர்த்து அவர்களைத் தண்டிக்கிறான். சிலவேலை தூதர் வாழும் போதே அதனை அவசரப்படுத்துவான். அல்லது அவரது மரணத்தின் பின் வரை அதனை தாமதப்படுத்துவான்.

• النفع والضر بيد الله عز وجل، فلا أحد من الخلق يملك لنفسه أو لغيره ضرًّا ولا نفعًا.
3. நலவும் தீமையும் அல்லாஹ்வின் கைவசமே உண்டு. எந்தவொரு படைப்பினமும் தனக்கோ ஏனையவர்களுக்கோ நலவு மற்றும் தீங்கு செய்யும் அதிகாரத்தைப் பெறவில்லை.

• لا ينفع الإيمان صاحبه عند معاينة الموت.
4. மரணத்தைக் காணும் போது நம்பிக்கை கொள்வது பயனளிக்காது.

 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: யூனுஸ்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக