அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (30) அத்தியாயம்: ஸூரா அல்பகரா
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ جَاعِلٌ فِی الْاَرْضِ خَلِیْفَةً ؕ— قَالُوْۤا اَتَجْعَلُ فِیْهَا مَنْ یُّفْسِدُ فِیْهَا وَیَسْفِكُ الدِّمَآءَ ۚ— وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ؕ— قَالَ اِنِّیْۤ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ ۟
2.30. வானவர்களிடம் பின்வருமாறு உரையாடியதை அல்லாஹ் அறிவிக்கிறான்: நான் பூமியில் மனிதர்களை ஏற்படுத்தப் போகின்றேன். அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து பூமியை வாளப்படுத்துவதற்கு அவர்கள் தங்களுக்குள் தொன்றுதொட்டு உருவாகும் தலைமுறைகளாக இருப்பார்கள்.வானவர்கள் தங்கள் இறைவனிடம், பூமியில் ஆதமுடைய மக்களை வழித்தோன்றல்களாக ஆக்குவதின் காரணம் என்ன? அவர்கள் பூமியில் குழப்பம் விளைவித்து அநியாயமாக இரத்தம் சிந்துவார்களே? என்று அறியாதவர்களாக, தெளிவடைய வேண்டி கேட்ட அவர்கள், நாங்கள் உனக்குக் கீழ்ப்படிகின்றோம்; உனது தூய்மையைப் பறைசாற்றி உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம். இதில் நாங்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டோம்; உனது கண்ணியத்தையும், பரிபூரணத்தையும் ஏற்றுக் கொள்கின்றோம் என்றும் கூறினார்கள். அதற்கு அல்லாஹ், அவர்களைப் படைப்பதன், வழித்தோன்றல்களாக ஆக்குவதன் நோக்கங்கள் குறித்து நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று கூறினான்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• الواجب على المؤمن إذا خفيت عليه حكمة الله في بعض خلقه وأَمْرِهِ أن يسلِّم لله في خلقه وأَمْرِهِ.
1. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர் அவனுடைய படைப்புகளில், கட்டளைகளில் சிலவற்றின் நோக்கத்தை அறியாமல் இருந்தாலும் அவற்றில் அவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவது கட்டாயமாகும்.

• رَفَعَ القرآن الكريم منزلة العلم، وجعله سببًا للتفضيل بين الخلق.
2. குர்ஆன் கல்வியின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது. அதனை படைப்பினங்களுக்கு இடையிலுள்ள ஏற்றத்தாழ்வுக்கான காரணியாக ஆக்கியுள்ளது.

• الكِبْرُ هو رأس المعاصي، وأساس كل بلاء ينزل بالخلق، وهو أول معصية عُصِيَ الله بها.
3. கர்வம் பாவங்களில் தலையாயதாகும். படைப்புகளுக்கு வரக்கூடிய துன்பங்களுக்கு கர்வமே அடிப்படையாக இருக்கின்றது. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செய்யப்பட்ட முதல் பாவம் இதுதான்.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (30) அத்தியாயம்: ஸூரா அல்பகரா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - மொழிபெயர்ப்பு அட்டவணை

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

மூடுக