அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (97) அத்தியாயம்: ஸூரா ஆலஇம்ரான்
فِیْهِ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِیْمَ ۚ۬— وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ؕ— وَلِلّٰهِ عَلَی النَّاسِ حِجُّ الْبَیْتِ مَنِ اسْتَطَاعَ اِلَیْهِ سَبِیْلًا ؕ— وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنِ الْعٰلَمِیْنَ ۟
3.97. இந்த ஆலயத்தில் அதன் சிறப்பினை எடுத்துரைக்கும் புனிதச் சின்னங்கள் வழிபாட்டுத் தளங்கள் போன்ற வெளிப்படையான அடையாளங்கள் இருக்கின்றன. இப்ராஹீம் கஃபாவின் சுவரை உயர்த்த நாடியபோது நின்ற கல்லும் அந்த அடையாளங்களில் உள்ளவையாகும். அவற்றுள், அங்கு நுழைந்தவர் அச்சம்கொள்ளமாட்டார், அவருக்கு எந்த நோவினையும் கொடுக்கப்படமாட்டாது என்பதும் உள்ளடங்கும். மனிதர்களில் அந்த ஆலயத்திற்குச் சென்றுவர சக்திபெற்றவர்மீது ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றுவதற்கு அங்கு செல்வது அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமையாகும். ஹஜ் கடமையை மறுத்தவர் அல்லாஹ்வை நிராகரித்துவிட்டார். இத்தகைய நிராகரிப்பாளர்களை விட்டும், உலகத்தார் அனைவரையும் விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• كَذِبُ اليهود على الله تعالى وأنبيائه، ومن كذبهم زعمهم أن تحريم يعقوب عليه السلام لبعض الأطعمة نزلت به التوراة.
1. யூதர்கள் அல்லாஹ்வின் மீதும்அவனுடைய தூதர்களின் மீதும் ஏராளமான பொய்களைப் புனைந்துள்ளார்கள். சில உணவுகளை யஃகூப் (அலை) அவர்கள் தமக்குத்தாமே விலக்கிக்கொண்டதும் தவ்ராத்தில் இறங்கியதே எனக் கூறியதும் அந்தப்பொய்களில் ஒன்றே.

• أعظم أماكن العبادة وأشرفها البيت الحرام، فهو أول بيت وضع لعبادة الله، وفيه من الخصائص ما ليس في سواه.
2. வழிபாட்டுத்தளங்களில் மிக முக்கியமானதும் மிகச் சிறந்ததும் மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராமாகும். இதுதான் அல்லாஹ்வை வணங்குவதற்காக பூமியில் கட்டப்பட்ட முதல் ஆலயமாகும். இங்கு ஏனைய பள்ளிவாயில்களில் இல்லாத பல சிறப்பம்சங்கள் உள்ளன.

• ذَكَرَ الله وجوب الحج بأوكد ألفاظ الوجوب تأكيدًا لوجوبه.
3. ஹஜ்ஜின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக அது கடமை என்பதை மிக உறுதியான வார்த்தைகளினால் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (97) அத்தியாயம்: ஸூரா ஆலஇம்ரான்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - மொழிபெயர்ப்பு அட்டவணை

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

மூடுக