அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (111) அத்தியாயம்: ஸூரா அல்மாயிதா
وَاِذْ اَوْحَیْتُ اِلَی الْحَوَارِیّٖنَ اَنْ اٰمِنُوْا بِیْ وَبِرَسُوْلِیْ ۚ— قَالُوْۤا اٰمَنَّا وَاشْهَدْ بِاَنَّنَا مُسْلِمُوْنَ ۟
5.111. நாம் உமக்கு அளித்த பின்வரும் அருட்கொடையையும் நினைத்துப் பார்ப்பீராக: நாம் உமக்கு உதவியாளர்களை ஏற்படுத்தினோம். அவர்களின் உள்ளத்தில் என்மீதும் உம்மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள் என்று உள்ளுதிப்பை ஏற்படுத்தினோம். எனவே அவர்கள் கட்டுப்பட்டார்கள். உம்முடைய அழைப்புக்கு செவிசாய்த்தார்கள். “நாங்கள் நம்பிக்கைகொண்டோம். எங்கள் இறைவா, நாங்கள் உனக்குக் கட்டுப்பட்டவர்கள், அடிபணிந்தவர்கள் என்பதற்கு நீயே சாட்சியாக இருப்பீராக” என்று கூறினார்கள்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• إثبات جمع الله للخلق يوم القيامة جليلهم وحقيرهم.
1. மறுமை நாளில் அல்லாஹ் சிறிய பெரிய அனைத்துப் படைப்பினங்களையும் ஒன்றுதிரட்டுவான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

• إثبات بشرية المسيح عليه السلام وإثبات آياته الحسية من إحياء الموتى وإبراء الأكمه والأبرص التي أجراها الله على يديه.
2. ஈஸா(அலை) ஒரு மனிதர்தாம் என்பதையும் இறந்தவர்களை உயிர்ப்பித்தமை, பிறவிக் குருடனையையும் தொழுநோயாளியையும் குணப்படுத்தியமை ஆகிய வெளிரங்கமானஅத்தாட்சிகளை அல்லாஹ் அவர் மூலம் நிகழ்த்திக்காட்டினான் என்பதையும் நிரூபித்தல்

• بيان أن آيات الأنبياء تهدف لتثبيت الأتباع وإفحام المخالفين، وأنها ليست من تلقاء أنفسهم، بل تأتي بإذن الله تعالى.
3. இறைத்தூதர்களின் அற்புதங்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களை உறுதிப்படுத்தவும் நிராகரிப்பவர்களை வாயடைப்பதற்காக வருபவையே அன்றி அவர்களின் புறத்திலிருந்து வருபவையல்ல. மாறாக அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரமே நடைபெறுகின்றன.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (111) அத்தியாயம்: ஸூரா அல்மாயிதா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - மொழிபெயர்ப்பு அட்டவணை

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

மூடுக