Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (11) அத்தியாயம்: அல்மும்தஹினா
وَاِنْ فَاتَكُمْ شَیْءٌ مِّنْ اَزْوَاجِكُمْ اِلَی الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَاٰتُوا الَّذِیْنَ ذَهَبَتْ اَزْوَاجُهُمْ مِّثْلَ مَاۤ اَنْفَقُوْا ؕ— وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
60.11. ஒரு வேளை உங்களின் பெண்கள் இஸ்லாத்தைவிட்டு வெளியேறி நிராகரிப்பாளர்களிடம் சென்றுவிட்டால், நீங்கள் அந்த நிராகரிப்பாளர்களிடம் அவர்களுக்கு செலவழித்த மணக்கொடைகளைக் கேட்டும் அவர்கள் உங்களுக்கு கொடுக்கவில்லையெனில் நீங்கள் நிராகரிப்பாளர்களிடமிருந்து போர்ச் செல்வங்களைக் கைப்பற்றினால் உங்களில் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிய பெண்களின் கணவர்களுக்கு அவர்கள் செலவழித்த மணக்கொடைகளை அளித்துவிடுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• في تصريف الله القلب من العداوة إلى المودة، ومن الكفر إلى الإيمان إشارة إلى أن قلوب العباد بين إصبعين من أصابعه سبحانه، فليطلب العبد منه الثبات على الإيمان.
1. அல்லாஹ் உள்ளங்களை பகைமையிலிருந்து நட்பிற்கும் நிராகரிப்பிலிருந்து நம்பிக்கையை நோக்கியும் திருப்பிவிடுவது, உள்ளங்கள் அவனின் இரு விரல்களுக்கிடையில் இருக்கின்றன என்பதையே குறிக்கின்றது. எனவே அடியான் அல்லாஹ்விடமே நம்பிக்கையில் உறுதியைக் கோர வேண்டும்.

• التفريق في الحكم بين الكفار المحاربين والمسالمين.
2. போரிடக்கூடிய நிராகரிப்பாளர்களுக்கும் சமாதானம் பேணக்கூடிய நிராகரிப்பாளர்களுக்குமிடையே சட்டத்தில் வேறுபாடு உள்ளது.

• حرمة الزواج بالكافرة غير الكتابية ابتداءً ودوامًا، وحرمة زواج المسلمة من كافر ابتداءً ودوامًا.
3. வேதக்காரர்களல்லாத நிராகரித்த பெண்களை மணமுடிப்பதும் (அவர்களுடன் வாழ்வை) தொடர்வதும் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். முஸ்லிமான் பெண் ஒரு காபிரை திருமணம் செய்வதும் அதேபோன்று அதில் தொடர்ந்து இருப்பதும் தடைசெய்யப்பட்டதாகும்.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (11) அத்தியாயம்: அல்மும்தஹினா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக