Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (14) அத்தியாயம்: அஸ்ஸப்
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ لِلْحَوَارِیّٖنَ مَنْ اَنْصَارِیْۤ اِلَی اللّٰهِ ؕ— قَالَ الْحَوَارِیُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ فَاٰمَنَتْ طَّآىِٕفَةٌ مِّنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَكَفَرَتْ طَّآىِٕفَةٌ ۚ— فَاَیَّدْنَا الَّذِیْنَ اٰمَنُوْا عَلٰی عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِیْنَ ۟۠
61.14. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! ஹவாரியீன்கள் (ஈஸாவின் தோழர்கள்) உதவி செய்ததை போன்று உங்களின் தூதர் கொண்டுவந்த அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவிசெய்து அவனுடைய உதவியாளர்களாக ஆகிவிடுங்கள். ஈஸா அவர்களிடம் கேட்டார்: “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” அவர்கள் விரைந்து பதிலளித்தார்கள்: “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம், என்று.” இஸ்ராயீலின் மக்களில் ஒரு பிரிவினர் ஈஸாவின்மீது நம்பிக்கைகொண்டார்கள். மற்றொரு பிரிவினர் நிராகரித்தார்கள். நாம் ஈஸாவின்மீது நம்பிக்கைகொண்டவர்களை அவரை நிராகரித்தோருக்கு எதிராக வலுப்படுத்தினோம். அவர்களே மேலோங்கியவர்களாக மாறினார்கள்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• تبشير الرسالات السابقة بنبينا صلى الله عليه وسلم دلالة على صدق نبوته.
1. முன்சென்ற தூதுகள் நமது நபியவர்களைப் பற்றித் நன்மாராயம் கூறியிருப்பது அவரது நபித்துவத்தின் நம்பகத்தன்மைக்கான ஆதாரமாகும்.

• التمكين للدين سُنَّة إلهية.
2. மார்க்கத்தை மேலோங்கச் செய்வது இறைவனின் நியதியாகும்.

• الإيمان والجهاد في سبيل الله من أسباب دخول الجنة.
3. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய பாதையில் ஜிஹாது செய்வது சுவனத்தில் பிரவேசிக்கச் செய்யும் காரணிகளில் ஒன்றாகும்.

• قد يعجل الله جزاء المؤمن في الدنيا، وقد يدخره له في الآخرة لكنه لا يُضَيِّعه - سبحانه -.
4. நம்பிக்கையாளனுடைய கூலியை சில வேளை அல்லாஹ் உலகிலேயே விரைவாக வழங்குவான். சில வேளை மறுமையிலே வழங்குவதற்காக அதனை சேகரித்துவைத்திருப்பான். ஆனால் அதனை ஒரு போதும் வீணாக்கிவிடமாட்டான்.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (14) அத்தியாயம்: அஸ்ஸப்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக