அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (3) அத்தியாயம்: ஸூரா அத்தலாக்
وَّیَرْزُقْهُ مِنْ حَیْثُ لَا یَحْتَسِبُ ؕ— وَمَنْ یَّتَوَكَّلْ عَلَی اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ— اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ ؕ— قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَیْءٍ قَدْرًا ۟
65.3. அவர் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து அவருக்கு கணக்கில்லாமல் அவன் வாழ்வாதாரம் வழங்குவான். யார் தன்னுடைய எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் விஷயத்தை நிறைவேற்றியே தீருவான். எதுவும் அவனுக்கு இயலாதது அல்ல. எதுவும் அவனிடமிருந்து தப்பிவிட முடியாது. அவன் ஒவ்வொரு விஷயமும் முடிவதற்கான ஒரு அளவை நிர்ணயித்துள்ளான். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் ஓர் எல்லை உண்டு. இரண்டில் எதுவும் மனிதனுக்கு நிரந்தரமானது அல்ல.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• خطاب النبي صلى الله عليه وسلم خطاب لأمته ما لم تثبت له الخصوصية.
1. தூதரை விளித்து உரையாடுவது, அவருக்கு மட்டுமே உரித்தானது என்பது உறுதியாகாதவரை அவரது சமூகத்தை விளித்து உரையாடப்பட்டதாகவே கருதப்படும்.

• وجوب السكنى والنفقة للمطلقة الرجعية.
2. திரும்ப அழைத்துக்கொள்ளத்தக்க விவாகரத்து வழங்கப்பட்ட பெண்களுக்கு தங்குமிடமும் செலவீனமும் வழங்குவது கணவன்மீது கட்டாயக் கடமையாகும்.

• النَّدْب إلى الإشهاد حسمًا لمادة الخلاف.
3. முரண்பாட்டைத் தவிர்ப்பதற்காக சாட்சிகளை ஏற்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

• كثرة فوائد التقوى وعظمها.
4. இறையச்சத்தின் அதிக பயன்களும் மகிமைகளும்.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (3) அத்தியாயம்: ஸூரா அத்தலாக்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - மொழிபெயர்ப்பு அட்டவணை

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

மூடுக