அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (21) அத்தியாயம்: ஸூரா அல்காஷியா
فَذَكِّرْ ۫— اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ ۟ؕ
88.21. தூதரே! இவர்களுக்கு அறிவுரை வழங்குவீராக. அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எச்சரிக்கை செய்வீராக. நீர் அறிவுரை வழங்கக்கூடியவர்தாம். அதைத்தவிர உம்மீது எந்தப் பொறுப்பும் இல்லை. நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• أهمية تطهير النفس من الخبائث الظاهرة والباطنة.
1. வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான அழுக்குகளைவிட்டும் மனதைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம் தெளிவாகிறது.

• الاستدلال بالمخلوقات على وجود الخالق وعظمته.
2. படைப்பினங்கள் படைப்பாளனின் இருப்பிற்கும் வல்லமைக்குமான சான்றுகளாகும்.

• مهمة الداعية الدعوة، لا حمل الناس على الهداية؛ لأن الهداية بيد الله.
3. அழைப்பாளனின் கடமை எடுத்துரைப்பது மட்டுமே. மக்களை நேர்வழியில் செலுத்துவது அவன்மீதுள்ள கடமையல்ல. ஏனெனில் நிச்சயமாக நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (21) அத்தியாயம்: ஸூரா அல்காஷியா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - மொழிபெயர்ப்பு அட்டவணை

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

மூடுக