Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் * - மொழிபெயர்ப்பு அட்டவணை

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு அத்தியாயம்: யூனுஸ்   வசனம்:
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیَاتُنَا بَیِّنٰتٍ ۙ— قَالَ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا ائْتِ بِقُرْاٰنٍ غَیْرِ هٰذَاۤ اَوْ بَدِّلْهُ ؕ— قُلْ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اُبَدِّلَهٗ مِنْ تِلْقَآئِ نَفْسِیْ ۚ— اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ ۚ— اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
இன்னும், (நபியே!) இவர்களுக்கு முன்னர் நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால், நம் சந்திப்பை பயப்படாதவர்கள் - “இது அல்லாத (வேறு) ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரீர்; அல்லது, (எங்கள் விருப்பத்திற்கு ஏற்ப) நீர் அதை மாற்றுவீராக” என்று கூறுகிறார்கள். “என் புறத்திலிருந்து அதை நான் மாற்றுவது என்னால் முடியாது. எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்ற மாட்டேன். என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான (மறுமை) நாளி(ல் நரகத்தி)ன் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று (நபியே!) கூறுவீராக.
அரபு விரிவுரைகள்:
قُلْ لَّوْ شَآءَ اللّٰهُ مَا تَلَوْتُهٗ عَلَیْكُمْ وَلَاۤ اَدْرٰىكُمْ بِهٖ ۖؗۗ— فَقَدْ لَبِثْتُ فِیْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
(மேலும்) கூறுவீராக: “(இதை நான் உங்களுக்கு ஓதிக் காட்டக் கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், நான் இதை உங்களுக்கு ஓதி காண்பித்திருக்கவும் மாட்டேன்; இன்னும், அவன் உங்களுக்கு இதை அறிவித்திருக்கவும் மாட்டான். ஆக, இதற்கு முன்னர் ஒரு (நீண்ட) காலம் உங்களுடன் வசித்துள்ளேன். ஆகவே, நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?”
அரபு விரிவுரைகள்:
فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ— اِنَّهٗ لَا یُفْلِحُ الْمُجْرِمُوْنَ ۟
ஆக, அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனைவிட; அல்லது, அவனுடைய வசனங்களைப் பொய்ப்பித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? நிச்சயமாக குற்றவாளிகள் வெற்றிபெற மாட்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ وَیَقُوْلُوْنَ هٰۤؤُلَآءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِ ؕ— قُلْ اَتُنَبِّـُٔوْنَ اللّٰهَ بِمَا لَا یَعْلَمُ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ ؕ— سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
எது அவர்களுக்கு தீங்கிழைக்காதோ; இன்னும், அவர்களுக்கு பலனளிக்காதோ அதைத்தான் அவர்கள் அல்லாஹ்வை அன்றி வணங்குகிறார்கள். இன்னும், “இவை அல்லாஹ்விடம் எங்களுடைய பரிந்துரையாளர்கள்” என்று கூறுகிறார்கள். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி,) “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்விற்கு அவன் அறியாதவற்றை நீங்கள் அறிவிக்கிறீர்களா? அவன் மிகப் பரிசுத்தமானவன்; இன்னும், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் (தகுதியால்) மிக உயர்ந்தவனாக இருக்கிறான்” என்று கூறுவீராக.
அரபு விரிவுரைகள்:
وَمَا كَانَ النَّاسُ اِلَّاۤ اُمَّةً وَّاحِدَةً فَاخْتَلَفُوْا ؕ— وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ فِیْمَا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
மனிதர்கள் (அனைவரும் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே ஒரு சமுதாயமாகவே தவிர இருக்கவில்லை. பிறகு, (பொறாமையினால் தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொண்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில்தான் என்ற) உம் இறைவனின் விதி முந்தி இருக்க வில்லையெனில், (அவர்கள்) கருத்து வேறுபாடு கொள்கின்றவற்றில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்!
அரபு விரிவுரைகள்:
وَیَقُوْلُوْنَ لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ۚ— فَقُلْ اِنَّمَا الْغَیْبُ لِلّٰهِ فَانْتَظِرُوْا ۚ— اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟۠
இன்னும், “ஓர் அத்தாட்சி அவர் மீது அவருடைய இறைவனிடமிருந்து இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?” என்று அவர்கள் கூறுகிறார்கள். (அதற்கு நபியே!) கூறுவீராக! “மறைவானவை எல்லாம் அல்லாஹ்விற்குரியனவே. ஆகவே, நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் (அல்லாஹ்வின் தீர்ப்பை) எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்.”
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: யூனுஸ்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் - மொழிபெயர்ப்பு அட்டவணை

அஷ்ஷெய்க் உமர் ஷரீப் அப்துல் சலாம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.

மூடுக