Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் * - மொழிபெயர்ப்பு அட்டவணை

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு அத்தியாயம்: யூனுஸ்   வசனம்:
قَالَ قَدْ اُجِیْبَتْ دَّعْوَتُكُمَا فَاسْتَقِیْمَا وَلَا تَتَّبِعٰٓنِّ سَبِیْلَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟
(அல்லாஹ்) கூறினான்: “(மூஸாவே! ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டு விட்டது. நீங்கள் இருவரும் (மார்க்கத்திலும் அதன் பக்கம் அழைப்பதிலும்) உறுதியாக இருங்கள்; இன்னும், அறியாதவர்களின் பாதையை நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள்.”
அரபு விரிவுரைகள்:
وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْیًا وَّعَدْوًا ؕ— حَتّٰۤی اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِیْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِیْلَ وَاَنَا مِنَ الْمُسْلِمِیْنَ ۟
இன்னும், இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி செய்தோம். ஆக, ஃபிர்அவ்னும் அவனுடைய இராணுவங்களும் அழிச்சாட்டியமாகவும் (அநியாயம் செய்வதில்) எல்லை மீறியும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்தனர். இறுதியாக, (கடலில்) அவன் மூழ்கியபோது, “நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்ட (இறை)வனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை என்று நான் நம்பிக்கை கொண்டேன்; இன்னும், நான் முஸ்லிம்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்” என்று (ஃபிர்அவன்) கூறினான்.
அரபு விரிவுரைகள்:
آٰلْـٰٔنَ وَقَدْ عَصَیْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِیْنَ ۟
“இப்போது தானா (நம்பிக்கை கொள்கிறாய்? இதற்கு) முன்னரோ (அல்லாஹ்விற்கு) மாறு செய்பவனாக இருந்தாய். இன்னும், நீ விஷமிகளில் (ஒருவனாக) இருந்தாய்.
அரபு விரிவுரைகள்:
فَالْیَوْمَ نُنَجِّیْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰیَةً ؕ— وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰیٰتِنَا لَغٰفِلُوْنَ ۟۠
ஆக, உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு நீ ஓர் அத்தாட்சியாக ஆகுவதற்காக உன் உடலை நாம் உயர(மான இட)த்தில் வைப்போம்.” நிச்சயமாக மக்களில் அதிகமானவர்கள் நம் அத்தாட்சிகளை அறியாதவர்கள்தான்.
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ بَوَّاْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ مُبَوَّاَ صِدْقٍ وَّرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ ۚ— فَمَا اخْتَلَفُوْا حَتّٰی جَآءَهُمُ الْعِلْمُ ؕ— اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
திட்டவட்டமாக, இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (வசிப்பதற்கு தகுதியான சிறப்பான) மிக நல்ல இடத்தை அமைத்து கொடுத்தோம்; இன்னும், நல்ல பொருள்களிலிருந்து அவர்களுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும்) வழங்கினோம். ஆக, (வேதத்தின்) ஞானம் அவர்களிடம் வரும் வரை அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்களோ அதில் அவர்களுக்கு மத்தியில் மறுமை நாளில் நிச்சயமாக உம் இறைவன் தீர்ப்பளிப்பான்.
அரபு விரிவுரைகள்:
فَاِنْ كُنْتَ فِیْ شَكٍّ مِّمَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ فَسْـَٔلِ الَّذِیْنَ یَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ ۚ— لَقَدْ جَآءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟ۙ
ஆக, (நபியே!) நாம் உமக்கு இறக்கிய (வேதத்)தில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்னர் (கொடுக்கப்பட்ட) வேதத்தை படிக்கின்றவர்களிடம் கேட்பீராக! உம் இறைவனிடமிருந்து உண்மை உமக்கு திட்டவட்டமாக வந்துவிட்டது. ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீர் அறவே ஆகிவிடாதீர்!
அரபு விரிவுரைகள்:
وَلَا تَكُوْنَنَّ مِنَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ فَتَكُوْنَ مِنَ الْخٰسِرِیْنَ ۟
இன்னும், அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களில் அறவே நீர் ஆகிவிடாதீர்! அப்படி செய்தால் நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்.
அரபு விரிவுரைகள்:
اِنَّ الَّذِیْنَ حَقَّتْ عَلَیْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ
நிச்சயமாக எவர்கள் (நிராகரிப்பில் இறப்பார்கள் என்று அவர்கள் மீது) உம் இறைவனின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَلَوْ جَآءَتْهُمْ كُلُّ اٰیَةٍ حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟
அத்தாட்சிகள் எல்லாம் அவர்களிடம் வந்தாலும் துன்புறுத்தக்கூடிய தண்டனையை அவர்கள் காணும் வரை (அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்).
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: யூனுஸ்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் - மொழிபெயர்ப்பு அட்டவணை

அஷ்ஷெய்க் உமர் ஷரீப் அப்துல் சலாம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.

மூடுக