Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் * - மொழிபெயர்ப்பு அட்டவணை

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்பகரா   வசனம்:
فَلَمَّا فَصَلَ طَالُوْتُ بِالْجُنُوْدِ ۙ— قَالَ اِنَّ اللّٰهَ مُبْتَلِیْكُمْ بِنَهَرٍ ۚ— فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَیْسَ مِنِّیْ ۚ— وَمَنْ لَّمْ یَطْعَمْهُ فَاِنَّهٗ مِنِّیْۤ اِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِیَدِهٖ ۚ— فَشَرِبُوْا مِنْهُ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ— فَلَمَّا جَاوَزَهٗ هُوَ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ ۙ— قَالُوْا لَا طَاقَةَ لَنَا الْیَوْمَ بِجَالُوْتَ وَجُنُوْدِهٖ ؕ— قَالَ الَّذِیْنَ یَظُنُّوْنَ اَنَّهُمْ مُّلٰقُوا اللّٰهِ ۙ— كَمْ مِّنْ فِئَةٍ قَلِیْلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِیْرَةً بِاِذْنِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟
ஆக, தாலூத் படைகளுடன் புறப்பட்டபோது, அவர் கூறினார்: “நிச்சயமாக அல்லாஹ் ஓர் ஆற்றின் மூலம் உங்களைச் சோதிப்பான். ஆகவே, எவர் அதிலிருந்து குடித்தாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை. எவர் அதைச் சுவைக்கவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சேர்ந்தவர். தன் கரத்தால் கையளவு நீர் அள்ளி குடித்தவரைத் தவிர. (அந்தளவு குடிப்பது அவர் மீது குற்றமில்லை.)” ஆக, அவர்களில் குறைவானவர்களைத் தவிர (எல்லோரும்) அதிலிருந்து (அதிகம்) குடித்தார்கள். அவரும் அவருடன் நம்பிக்கை கொண்ட (கையளவு தண்ணீர் குடித்த)வர்களும் அதைக் கடந்தபோது, (அதிகம் பருகியவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய படைகளுடனும் (போர் புரிய) இன்று எங்களுக்கு அறவே சக்தியில்லை என்று கூறி (போரில் கலந்து கொள்ளாமல் விலகி)னார்கள். எவர்கள், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்பவர்கள் என அறிந்தார்களோ, அவர்கள் கூறினார்கள்: “அதிகமான கூட்டத்தை எத்தனையோ குறைவான கூட்டம் அல்லாஹ்வின் அனுமதியினால் வென்றுள்ளன. அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.’’
அரபு விரிவுரைகள்:
وَلَمَّا بَرَزُوْا لِجَالُوْتَ وَجُنُوْدِهٖ قَالُوْا رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟ؕ
இன்னும், அவர்கள் (-தாலூத்தும் அவரின் படையும்) ஜாலூத்திற்கும் அவனுடைய படைகளுக்கும் முன்னால் வந்தபோது, “எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையை இறக்கு! இன்னும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து! இன்னும், நிராகரிப்பாளர்களாகிய மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு’’ என்று கூறினார்கள்.
அரபு விரிவுரைகள்:
فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ۫— وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰىهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا یَشَآءُ ؕ— وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰكِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟
ஆக, அல்லாஹ்வின் அனுமதியினால் (தாலூத்தின் படையினர்) அவர்களைத் தோற்கடித்தார்கள். தாவூது, ஜாலூத்தை கொன்றார். இன்னும், அல்லாஹ் அவருக்கு ஆட்சியையும் ஞானத்தையும் கொடுத்தான். இன்னும், அவன் தான் நாடியதிலிருந்து அவருக்கு கற்பித்தான். அல்லாஹ் - மக்களை அவர்களில் (உள்ள நல்லோர்) சிலரின் மூலம் (பாவம் செய்த) சிலரை (தண்டனையிலிருந்து) - பாதுகாக்க வில்லையென்றால் இப்பூமி அழிந்திருக்கும். எனினும், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார்கள் மீது (பெரும்) அருளுடையவன் ஆவான்.
அரபு விரிவுரைகள்:
تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ؕ— وَاِنَّكَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟
இவை, அல்லாஹ்வுடைய (கண்ணியமான குர்ஆன்) வசனங்களாகும். இவற்றை உமக்கு உண்மையுடன் நாம் ஓதிக் காண்பிக்கிறோம். இன்னும் நிச்சயமாக நீர் (நாம் அனுப்பிய) தூதர்களில் உள்ளவர்தான்.
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்பகரா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் - மொழிபெயர்ப்பு அட்டவணை

அஷ்ஷெய்க் உமர் ஷரீப் அப்துல் சலாம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.

மூடுக