Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் * - மொழிபெயர்ப்பு அட்டவணை

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு அத்தியாயம்: தாஹா   வசனம்:
قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّیْ فِیْ كِتٰبٍ ۚ— لَا یَضِلُّ رَبِّیْ وَلَا یَنْسَی ۟ؗ
(மூஸா) கூறினார்: அவர்களைப் பற்றிய ஞானம் என் இறைவனிடம் ஒரு பதிவுப்புத்தகத்தில் (பாதுகாப்பாக) இருக்கிறது. என் இறைவன் தவறிழைக்க மாட்டான். இன்னும், மறக்கமாட்டான்.
அரபு விரிவுரைகள்:
الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَكُمْ فِیْهَا سُبُلًا وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ— فَاَخْرَجْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰی ۟
அவன் எத்தகையவன் என்றால் உங்களுக்கு பூமியை (தொட்டிலாகவும்) விரிப்பாக(வும்) ஆக்கி உங்களுக்கு அதில் (பல) பாதைகளை (அவற்றில் நீங்கள் சென்றுவருவதற்காக) ஏற்படுத்தினான். இன்னும், வானத்திலிருந்து மழையை இறக்கினான். ஆக, அதன் மூலம் பலதரப்பட்ட தாவரங்களிலிருந்து பல வகை(உணவு வகை)களை நாம் உற்பத்தி செய்கிறோம்.
அரபு விரிவுரைகள்:
كُلُوْا وَارْعَوْا اَنْعَامَكُمْ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّاُولِی النُّهٰی ۟۠
(அந்த உணவுகளிலிருந்து நீங்களும்) சாப்பிடுங்கள்! உங்கள் கால்நடைகளையும் மேய்த்துக் கொள்ளுங்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
அரபு விரிவுரைகள்:
مِنْهَا خَلَقْنٰكُمْ وَفِیْهَا نُعِیْدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً اُخْرٰی ۟
அதிலிருந்துதான் உங்களைப் படைத்தோம். இன்னும், அதில்தான் உங்களை திரும்பக் கொண்டுவருவோம். இன்னும், அதிலிருந்துதான் மற்றொரு முறை உங்களை வெளியேற்றுவோம்.
அரபு விரிவுரைகள்:
وَلَقَدْ اَرَیْنٰهُ اٰیٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَاَبٰی ۟
அவனுக்கு (நாம் காட்டவேண்டிய) நமது அத்தாட்சிகள் அனைத்தையும் காண்பித்தோம். எனினும், அவன் (அவற்றை) பொய்ப்பித்தான். இன்னும், (அவற்றை) ஏற்க மறுத்தான்.
அரபு விரிவுரைகள்:
قَالَ اَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ اَرْضِنَا بِسِحْرِكَ یٰمُوْسٰی ۟
அவன் கூறினான்: “மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை நீர் வெளியேற்றுவதற்காக எங்களிடம் வந்தீரா?”அவன் கூறினான்: “மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை நீர் வெளியேற்றுவதற்காக எங்களிடம் வந்தீரா?”
அரபு விரிவுரைகள்:
فَلَنَاْتِیَنَّكَ بِسِحْرٍ مِّثْلِهٖ فَاجْعَلْ بَیْنَنَا وَبَیْنَكَ مَوْعِدًا لَّا نُخْلِفُهٗ نَحْنُ وَلَاۤ اَنْتَ مَكَانًا سُوًی ۟
ஆக, நிச்சயமாக நாமும் அதுபோன்ற ஒரு சூனியத்தை உம்மிடம் கொண்டு வருவோம். ஆகவே, எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் ஒரு சமமான இடத்தில் (நாம் ஒன்று சேர) குறிப்பிட்ட ஒரு நேரத்தை முடிவு செய்வீராக! நாமும் அதை மீற மாட்டோம். நீயும் அதை மீறக் கூடாது.
அரபு விரிவுரைகள்:
قَالَ مَوْعِدُكُمْ یَوْمُ الزِّیْنَةِ وَاَنْ یُّحْشَرَ النَّاسُ ضُحًی ۟
அவர் கூறினார்: உங்களுக்கு குறிக்கப்பட்ட நேரம் “யவ்முஸ் ஸீனா” (என்ற உங்கள் பெருநாள்) ஆகும். இன்னும், (அந்த நாளில்) மக்கள் முற்பகலில் ஒன்று திரட்டப்பட வேண்டும்!
அரபு விரிவுரைகள்:
فَتَوَلّٰی فِرْعَوْنُ فَجَمَعَ كَیْدَهٗ ثُمَّ اَتٰی ۟
ஆக, ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்றான். இன்னும், (மூஸாவை தோற்கடிக்க) தனது தந்திர யுக்திகளை ஒன்றிணைத்தான். பிறகு (குறிக்கப்பட்ட நேரத்தில் அந்த இடத்திற்கு சூனியக்காரர்களுடன்) வந்தான்.
அரபு விரிவுரைகள்:
قَالَ لَهُمْ مُّوْسٰی وَیْلَكُمْ لَا تَفْتَرُوْا عَلَی اللّٰهِ كَذِبًا فَیُسْحِتَكُمْ بِعَذَابٍ ۚ— وَقَدْ خَابَ مَنِ افْتَرٰی ۟
அவர்களுக்கு மூஸா கூறினார்: “உங்களுக்கு கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள்! அவன் உங்களை (கடுமையான) தண்டனையால் அழித்து விடுவான். (அல்லாஹ்வின் மீது பொய்யை) இட்டுக்கட்டியவன் திட்டமாக நஷ்டமடைந்து விட்டான்.”
அரபு விரிவுரைகள்:
فَتَنَازَعُوْۤا اَمْرَهُمْ بَیْنَهُمْ وَاَسَرُّوا النَّجْوٰی ۟
ஆக, (மூஸாவை எதிர்த்து சூனியம் செய்வதற்காக அழைத்து வரப்பட்ட) அவர்கள் தங்களுக்கு மத்தியில் தங்கள் காரியத்தில் விவாதித்தனர். இன்னும், அவர்கள் இரகசியமாக பேசினர்.
அரபு விரிவுரைகள்:
قَالُوْۤا اِنْ هٰذٰنِ لَسٰحِرٰنِ یُرِیْدٰنِ اَنْ یُّخْرِجٰكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهِمَا وَیَذْهَبَا بِطَرِیْقَتِكُمُ الْمُثْلٰی ۟
அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக இந்த இருவரும் சூனியக்காரர்கள்தான். அவ்விருவரும் தங்கள் சூனியத்தினால் உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்றுவதற்கும்; உங்கள் சிறந்த தலைவர்களை அவ்விருவரும் மிகைத்து விடுவதற்கும் நாடுகிறார்கள்.”
அரபு விரிவுரைகள்:
فَاَجْمِعُوْا كَیْدَكُمْ ثُمَّ ائْتُوْا صَفًّا ۚ— وَقَدْ اَفْلَحَ الْیَوْمَ مَنِ اسْتَعْلٰی ۟
“ஆகவே, உங்கள் தந்திர யுக்திகளை உறுதிப்படுத்தி, பிறகு ஓர் அணியாக (அவரை எதிர்க்க) வாருங்கள். இன்றைய தினம் யார் (மற்றவரை) மிகைப்பாரோ அவர் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார்.”
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: தாஹா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் - மொழிபெயர்ப்பு அட்டவணை

அஷ்ஷெய்க் உமர் ஷரீப் அப்துல் சலாம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.

மூடுக