Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் * - மொழிபெயர்ப்பு அட்டவணை

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அத்தவ்பா   வசனம்:
كَیْفَ یَكُوْنُ لِلْمُشْرِكِیْنَ عَهْدٌ عِنْدَ اللّٰهِ وَعِنْدَ رَسُوْلِهٖۤ اِلَّا الَّذِیْنَ عٰهَدْتُّمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ— فَمَا اسْتَقَامُوْا لَكُمْ فَاسْتَقِیْمُوْا لَهُمْ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ ۟
அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் இணைவைப்பவர்களுக்கு உடன்படிக்கை எப்படி (நீடித்து) இருக்கும்? (ஆயினும்) புனித மஸ்ஜிதுக்கு அருகில் நீங்கள் உடன்படிக்கை செய்தவர்களைத் தவிர. அவர்கள் உங்களுடன் ஒழுங்காக நேர்மையாக நடக்கும் வரை நீங்களும் அவர்களுடன் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ், தன்னை அஞ்சுபவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
அரபு விரிவுரைகள்:
كَیْفَ وَاِنْ یَّظْهَرُوْا عَلَیْكُمْ لَا یَرْقُبُوْا فِیْكُمْ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ— یُرْضُوْنَكُمْ بِاَفْوَاهِهِمْ وَتَاْبٰی قُلُوْبُهُمْ ۚ— وَاَكْثَرُهُمْ فٰسِقُوْنَ ۟ۚ
எவ்வாறு (அவர்களை நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டால் உங்களுடன் (அவர்களுக்கு இருக்கின்ற வமிச, குடும்ப இரத்த) உறவையும் (அவர்கள் உங்களுடன் செய்த) உடன்படிக்கையையும் பொருட்படுத்தமாட்டார்கள். தங்கள் வாய் (வார்த்தை)களால் உங்களைத் திருப்திப்படுத்துகிறார்கள்; இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் (உங்களை ஏற்க) மறுக்கின்றன. அவர்களில் அதிகமானோர் (சட்டங்களை மீறுகின்ற) பாவிகள் ஆவர்.
அரபு விரிவுரைகள்:
اِشْتَرَوْا بِاٰیٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِیْلًا فَصَدُّوْا عَنْ سَبِیْلِهٖ ؕ— اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப விலையை வாங்கினார்கள். இன்னும், (மக்களை) அவனுடைய பாதையை விட்டுத் தடுத்தனர். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக் கெட்டதாகும்.
அரபு விரிவுரைகள்:
لَا یَرْقُبُوْنَ فِیْ مُؤْمِنٍ اِلًّا وَّلَا ذِمَّةً ؕ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُعْتَدُوْنَ ۟
அவர்கள், நம்பிக்கையாளர்கள் விஷயத்தில் (வமிச, குடும்ப இரத்த) உறவையும் (அவர்கள் உங்களுடன் செய்த) உடன்படிக்கையையும் பொருட்படுத்தமாட்டார்கள். இன்னும், அவர்கள்தான் (உடன்படிக்கைகளை) மீறக் கூடியவர்கள் ஆவார்கள்.
அரபு விரிவுரைகள்:
فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَاِخْوَانُكُمْ فِی الدِّیْنِ ؕ— وَنُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
ஆக, அவர்கள் (தங்கள் குற்றங்களில் இருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம் திரும்பி மன்னிப்புக் கோரி) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுத்தால் (அவர்கள்) மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள். (தங்களுக்கு விவரிக்கப்படுவதை) அறிந்து கொள்கின்ற மக்களுக்கு நாம் வசனங்களை (இந்த வேதத்தில்) விவரித்து கூறுகிறோம்.
அரபு விரிவுரைகள்:
وَاِنْ نَّكَثُوْۤا اَیْمَانَهُمْ مِّنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوْا فِیْ دِیْنِكُمْ فَقَاتِلُوْۤا اَىِٕمَّةَ الْكُفْرِ ۙ— اِنَّهُمْ لَاۤ اَیْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ یَنْتَهُوْنَ ۟
இன்னும், அவர்கள் தங்கள் உடன்படிக்கைக்குப் பின்னர் தங்கள் சத்தியங்களை முறித்தால்: இன்னும், உங்கள் மார்க்கத்தில் குறை கூறி குத்திப் பேசினால், அவர்கள் (இக்குற்றத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்புடைய (இத்தகைய) தலைவர்களிடம் போரிடுங்கள். நிச்சயமாக அவர்களுக்கு சத்தியங்கள் அறவே இல்லை. (இவர்கள் தங்கள் சத்தியங்களை மதித்து நடக்க மாட்டார்கள்.)
அரபு விரிவுரைகள்:
اَلَا تُقَاتِلُوْنَ قَوْمًا نَّكَثُوْۤا اَیْمَانَهُمْ وَهَمُّوْا بِاِخْرَاجِ الرَّسُوْلِ وَهُمْ بَدَءُوْكُمْ اَوَّلَ مَرَّةٍ ؕ— اَتَخْشَوْنَهُمْ ۚ— فَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشَوْهُ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
தங்கள் சத்தியங்களை முறித்து, தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றுவதற்கு முடிவெடுத்த மக்களிடம் நீங்கள் போர்புரிய மாட்டீர்களா? அவர்கள்தான் (கலகத்தை) உங்களிடம் முதல் முறையாக ஆரம்பித்தனர். நீங்கள் அவர்களைப் பயப்படுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்தான் நீங்கள் பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன் ஆவான்.
அரபு விரிவுரைகள்:
 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அத்தவ்பா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - தமிழ் மொழிபெயர்ப்பு - உமர் ஷரீப் - மொழிபெயர்ப்பு அட்டவணை

அஷ்ஷெய்க் உமர் ஷரீப் அப்துல் சலாம் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள்.

மூடுக