పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - అనువాదాల విషయసూచిక


భావార్ధాల అనువాదం వచనం: (60) సూరహ్: సూరహ్ అల్-ఇస్రా
وَاِذْ قُلْنَا لَكَ اِنَّ رَبَّكَ اَحَاطَ بِالنَّاسِ ؕ— وَمَا جَعَلْنَا الرُّءْیَا الَّتِیْۤ اَرَیْنٰكَ اِلَّا فِتْنَةً لِّلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُوْنَةَ فِی الْقُرْاٰنِ ؕ— وَنُخَوِّفُهُمْ ۙ— فَمَا یَزِیْدُهُمْ اِلَّا طُغْیَانًا كَبِیْرًا ۟۠
17.60. -தூதரே!- நாம் உம்மிடம் கூறியதை நினைவு கூர்வீராக: “உம் இறைவன் தன் வல்லமையால் மக்கள் அனைவரையும் சூழ்ந்துள்ளான். அவர்கள் அவனுடைய பிடியில்தான் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அல்லாஹ் உம்மைப் பாதுகாப்பான். எனவே உமக்குக் கட்டளையிடப்பட்டதை எடுத்துரைத்து விடுவீராக. மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது நிராகரிக்கிறார்களா? என்பதைச் சோதிப்பதற்கே இராப்பயணத்தில் நீர் கண்டவற்றை உமக்குக் காட்டினோம். நிச்சயமாக நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் என்று நாம் குர்ஆனில் கூறிய ஸக்கூம் என்னும் மரத்தையும் அவர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். அவர்கள் இந்த இரண்டு அத்தாட்சிகளையும் நம்பவில்லையெனில் மற்றவற்றை நம்ப மாட்டார்கள். நாம் சான்றுகளை இறக்கி அவர்களை அச்சமூட்டுகின்றோம். ஆனால் அத்தாட்சிகளை இறக்கி அச்சுறுத்தினாலும் அவர்கள் மென்மேலும் நிராகரிப்பிலும் வழிகேட்டில் பிடிவாதமாகவுமே உள்ளனர்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• من رحمة الله بالناس عدم إنزاله الآيات التي يطلبها المكذبون حتى لا يعاجلهم بالعقاب إذا كذبوا بها.
1. பொய்பிப்பவர்கள் கோரும் சான்றுகளை இறக்காமலிருப்பது அல்லாஹ் மனிதர்கள் மேல் கொண்ட கருணையாகும். அவ்வாறு இறக்கப்பட்டு அவர்கள் அவற்றை மறுத்தால் அவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட்டு விடுவார்கள்.

• ابتلى الله العباد بالشيطان الداعي لهم إلى معصية الله بأقواله وأفعاله.
2. தன் சொல்லாலும் செயலாலும் பாவத்தின்பால் அழைக்கும் ஷைத்தானைக்கொண்டு அல்லாஹ் அடியார்களை சோதிக்கிறான்.

• من صور مشاركة الشيطان للإنسان في الأموال والأولاد: ترك التسمية عند الطعام والشراب والجماع، وعدم تأديب الأولاد.
3. மனிதனின் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் ஷைத்தான் பங்குபெறுவதின் சில வடிவங்கள், சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் உடலுறவுகொள்ளும் போதும் அல்லாஹ்வின் பெயரை கூறாமை, பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்காமை என்பனவாகும்.

 
భావార్ధాల అనువాదం వచనం: (60) సూరహ్: సూరహ్ అల్-ఇస్రా
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - అనువాదాల విషయసూచిక

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

మూసివేయటం