Check out the new design

పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం * - అనువాదాల విషయసూచిక


భావార్ధాల అనువాదం సూరహ్: అల్-బఖరహ్   వచనం:
وَاِذْ نَجَّیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ یُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ— وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟
2.49. இஸ்ராயீலின் மக்களே! ஃபிர்அவ்னைப் பின்பற்றியவர்களிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். அவர்கள் உங்களை பல்வேறு வேதனைகளில் ஆழ்த்தியிருந்தார்கள். உங்கள் ஆண்மக்கள் எவரையும் விட்டுவைக்கமால் கொன்று கொண்டிருந்தார்கள். உங்களை மென்மேலும் இழிவுபடுத்த வேண்டுமென்பதற்காக தமக்குச் சேவை புரிய உங்களின் பெண்மக்களை உயிருடன் விட்டுவந்தார்கள். ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனைப் பின்பற்றியவர்களிடமிருந்தும் அல்லாஹ் உங்களைக் காப்பாற்றியமை, நீங்கள் நன்றி செலுத்துகிறீர்களா என்பதற்கான உங்கள் இறைவனின் பெரும் பரீட்சையாகும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَاَنْجَیْنٰكُمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟
2.50. நாம் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்களுக்காக கடலைப் பிளந்து அதில் நீங்கள் செல்லும் காய்ந்த பாதையை உருவாக்கினோம். உங்களைக் காப்பாற்றி நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களின் கண்முன்னால் ஃபிர்அவ்னையும் அவனைப் பின்பற்றியவர்களையும் மூழ்கடித்தோம்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاِذْ وٰعَدْنَا مُوْسٰۤی اَرْبَعِیْنَ لَیْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ۟
2.51. நாம் மூசாவுக்கு, ஒளி மற்றும் நேர்வழியை உள்ளடக்கிய தவ்ராத்தை அருளுவதற்காக நாற்பது இரவுகளை வாக்களித்ததையும் நினைத்துப் பாருங்கள். இருந்தும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள்ளேயே நீங்கள் காளைக்கன்றைக் கடவுளாக்கிக் கொண்டீர்கள். இந்த செயலின் மூலம் நீங்கள் அக்கிரமக்காரர்களாக இருந்தீர்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
2.52. பிறகு நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதனால் நாம் உங்களை மன்னித்துவிட்டோம். நீங்கள் அல்லாஹ்வை நல்லமுறையில் வழிபட்டு அவனுக்குக் கீழ்ப்படிந்து நன்றிசெலுத்துவதற்காக நாம் உங்களைத் தண்டிக்கவில்லை.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاِذْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟
2.53. பின்வரும் அருட்கொடையையும் நினைத்துப் பாருங்கள், நீங்கள் நேர்வழியை அடையும் பொருட்டு நாம் மூசாவுக்கு தவ்ராத்தை வழங்கினோம். அது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக்கூடியதாகவும், நேர்வழியையும் வழிகேட்டையும் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் இருந்தது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْۤا اِلٰی بَارِىِٕكُمْ فَاقْتُلُوْۤا اَنْفُسَكُمْ ؕ— ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ عِنْدَ بَارِىِٕكُمْ ؕ— فَتَابَ عَلَیْكُمْ ؕ— اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
2.54. பின்வரும் அருட்கொடையையும் நினைத்துப் பாருங்கள், காலைக் கன்று வணக்கதிலிருந்து பாவமன்னிப்புக் கோருவதற்கு அல்லாஹ் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கினான், உங்களைப் பார்த்து மூஸா (அலை) அவர்கள் பின்வருமாறு கூறினார் நீங்கள் காளைக்கன்றை வணங்கி உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொண்டதனால், உங்களில் சிலர் சிலரைக் கொன்று உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் பக்கமே திரும்புங்கள். இவ்வாறு பாவமன்னிப்புக் கோருவது நிரந்தர நரகில் இட்டுச்செல்லும் நிராகரிப்பைத் தொடர்வதை விடச் சிறந்ததாகும். அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் அவ்வாறு செய்தீர்கள். அவன் உங்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். அவன் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் தன் அடியார்கள் விஷயத்தில் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاِذْ قُلْتُمْ یٰمُوْسٰی لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰی نَرَی اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْكُمُ الصّٰعِقَةُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟
2.55,56. பின்வரும் சம்பவத்தையும் நினைத்துப் பாருங்கள், உங்களின் முன்னோர்கள் மூசாவிடம், நாங்கள் அல்லாஹ்வை கண்ணால் காணும்வரை நம்ப மாட்டோம் என்று துணிந்து கூறியபோது நெருப்பு உங்களைத் தாக்கியது. உங்களில் சிலர் சிலரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது உங்களைப் பொசுக்கிவிட்டது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
2.56.பிறகு அல்லாஹ் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக, நீங்கள் இறந்த பின்னரும் நாம் உங்களுக்கு உயிர் கொடுத்தோம்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَظَلَّلْنَا عَلَیْكُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ— كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ— وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
2.57. நாம் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்று, பூமியில் நீங்கள் தடுமாறித் திரிந்தபோது சூரிய வெப்பத்திலிருந்து உங்களைக்காக்க மேகத்தை உங்கள்மீது நிழலிடச் செய்தோம். உங்கள்மீது தேனைப்போன்று இனிப்பான பானமான "மன்னு" வையும் காடையை ஒத்த தூய்மையான இறைச்சியைக்கொண்ட "சல்வா" என்னும் பறவையையும் இறக்கினோம். நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள் என்று நாம் உங்களிடம் கூறினோம். இந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றிகெட்டத்தனமாக நடந்துகொண்டதன் மூலம் அவர்கள் நமக்கு எந்தக் குறையையும் ஏற்படுத்திவிடவில்லை. மாறாக தமக்குக் கிடைக்கவிருந்த கூலியை இழந்து தம்மை தண்டனைக்குற்படுத்திக் கொண்டதன் மூலம் தமக்குத்தாமே அநியாயம் இழைத்துக்கொண்டனர்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• عِظَمُ نعم الله وكثرتها على بني إسرائيل، ومع هذا لم تزدهم إلا تكبُّرًا وعنادًا.
1. இஸ்ராயீலின் மக்களுக்கு அல்லாஹ் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியபோதும் அது அவர்களுக்கு கர்வத்தையும் பிடிவாதத்தையும் தவிர வேறொன்றையும் அதிகப்படுத்தவில்லை.

• سَعَةُ حِلم الله تعالى ورحمته بعباده، وإن عظمت ذنوبهم.
2. அல்லாஹ் தன் அடியார்கள் விஷயத்தில் பொறுமையாளனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான், அடியார்கள் பெரும் பாவங்களைச் செய்தாலும் சரியே.

• الوحي هو الفَيْصَلُ بين الحق والباطل.
3. சத்தியத்தையும் அசத்தியத்தையும் நிர்ணயிப்பது வஹியே ஆகும்.

 
భావార్ధాల అనువాదం సూరహ్: అల్-బఖరహ్
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం - అనువాదాల విషయసూచిక

ఇది తఫ్సీర్ అధ్యయన కేంద్రం ద్వారా విడుదల చేయబడింది.

మూసివేయటం