Check out the new design

పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం * - అనువాదాల విషయసూచిక


భావార్ధాల అనువాదం సూరహ్: అత్-తూర్   వచనం:
اَفَسِحْرٌ هٰذَاۤ اَمْ اَنْتُمْ لَا تُبْصِرُوْنَ ۟
52.15. நீங்கள் காணும் இந்த வேதனையும் சூனியமா? அல்லது நீங்கள் அதனைப் பார்க்கவில்லையா?
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اِصْلَوْهَا فَاصْبِرُوْۤا اَوْ لَا تَصْبِرُوْا ۚ— سَوَآءٌ عَلَیْكُمْ ؕ— اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
52.16. இந்த நெருப்பின் வெப்பத்தைச் சுவைத்து அனுபவியுங்கள். நீங்கள் அதன் வெப்பத்தை பொறுமையாக சகித்துக் கொள்ளுங்கள் அல்லது சகித்துக் கொள்ளாமலிருங்கள். பொறுமைகொள்வதும் பொறுமை கொள்ளாமல் இருப்பதும் இரண்டும் உங்களுக்கு ஒன்றுதான். இன்றைய தினம் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவற்றுக்குத்தான் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَعِیْمٍ ۟ۙ
52.17. நிச்சயமாக தங்கள் இறைவனின் -கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி- அவனை அஞ்சக்கூடியவர்கள் சுவனங்களிலும் என்றும் முடிவுறாத மகத்தான அருட்கொடையிலும் இருப்பார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
فٰكِهِیْنَ بِمَاۤ اٰتٰىهُمْ رَبُّهُمْ ۚ— وَوَقٰىهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِیْمِ ۟
52.18. அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய உணவுப் பொருள்கள், பானங்கள் மற்றும் மண உறவுகளின் இன்பங்களைக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் இறைவன் அவர்களை நரக வேதனையிலிருந்து பாதுகாப்பான். அவர்கள் தாங்கள் விரும்பிய இன்பங்களைப் பெற்று கலங்கம் ஏற்படுத்துபவற்றிலிருந்து பாதுகாவல் பெற்று வெற்றி பெறுவார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۙ
52.19. அவர்களிடம் கூறப்படும்: “உங்கள் மனம் விரும்புவதை மகிழ்ச்சியாக உண்ணுங்கள், பருகுங்கள், உண்ணுபவற்றினாலோ, பருகுபவற்றினாலோ தீங்கோ, பாதிப்போ ஏற்பட்டு விடும் என்று பயப்படாதீர்கள். இவைகள் நீங்கள் உலகில் செய்த நற்செயல்களுக்கான கூலியாகும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
مُتَّكِـِٕیْنَ عَلٰی سُرُرٍ مَّصْفُوْفَةٍ ۚ— وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟
52.20. அவர்கள் அலங்கரிக்கப்பட்ட, ஒன்றை ஒன்று முன்னோக்கியதாக இருக்கும் சாய்வு இருக்கைகளில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். நாம் அவர்களை விசாலமான விழிகளையுடைய வெண்மையான பெண்களுக்கு மணமுடித்து வைப்போம்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّیَّتُهُمْ بِاِیْمَانٍ اَلْحَقْنَا بِهِمْ ذُرِّیَّتَهُمْ وَمَاۤ اَلَتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَیْءٍ ؕ— كُلُّ امْرِىۢ بِمَا كَسَبَ رَهِیْنٌ ۟
52.21. நம்பிக்கையாளர்களையும் நம்பிக்கையில் அவர்களைப் பின்பற்றிய அவர்களின் சந்ததியினரையும் அவர்களின் சந்ததியினால் அவர்கள் கண்குளிர்ச்சியடையும் பொருட்டு நாம் ஒன்றுசேர்த்து வைப்போம். அந்த சந்ததியினர் தங்கள் செயல்களின் மூலம் முந்தையவர்களின் நிலையை அடையாவிட்டாலும் சரியே. நாம் அவர்களின் நற்செயல்களின் கூலியில் எதையும் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் செய்த தீய செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான். அவனைத்தவிர யாரும் அவனது செயல்களில் எந்த ஒன்றையும் சுமக்க முடியாது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاَمْدَدْنٰهُمْ بِفَاكِهَةٍ وَّلَحْمٍ مِّمَّا یَشْتَهُوْنَ ۟
52.22. இந்த சுவனவாசிகளுக்கு பல வகையான பழங்களையும் அவர்கள் விரும்பும் அனைத்துவிதமான மாமிசத்தையும் நாம் வழங்குவோம்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
یَتَنَازَعُوْنَ فِیْهَا كَاْسًا لَّا لَغْوٌ فِیْهَا وَلَا تَاْثِیْمٌ ۟
52.23. அங்கு அவர்களுக்கிடையே மதுக்கிண்ணங்கள் பரிமாறப்படும். அதனைக் குடிப்பதால் உலகில் ஏற்படுவதுபோன்று போதையின் காரணமாக வீணான பேச்சு, பாவமான காரியங்கள் எதுவும் நடைபெறாது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَیَطُوْفُ عَلَیْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُوْنٌ ۟
52.24. அவர்களுக்குப் பணிவிடைக்காக நியமிக்கப்பட்ட சிறுவர்கள் அவர்களைச் சுற்றி சுற்றி வருவார்கள். தோல் வெண்மையிலும் தெளிவிலும் அவர்கள் சிப்பியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முத்துகளைப் போன்றிருப்பார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
52.25. சுவனவாசிகள் ஒருவரையொருவர் முன்னோக்குவார்கள். ஒருவர் மற்றவரிடம் உலகில் அவர்களின் நிலையைக் குறித்துக் கேட்பார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
قَالُوْۤا اِنَّا كُنَّا قَبْلُ فِیْۤ اَهْلِنَا مُشْفِقِیْنَ ۟
52.26. அவர்கள் பதிலளிப்பார்கள்: “நிச்சயமாக நாங்கள் உலகில் எங்கள் குடும்பத்தினரிடையே அல்லாஹ்வின் வேதனையை அஞ்சக்கூடியவர்களாக இருந்தோம்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
فَمَنَّ اللّٰهُ عَلَیْنَا وَوَقٰىنَا عَذَابَ السَّمُوْمِ ۟
52.27. அல்லாஹ் எங்கள்மீது அருள்புரிந்து எங்களுக்கு இஸ்லாம் என்னும் நேரான வழியைக் காட்டினான். வெப்பம் மிகுந்த வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றினான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُ ؕ— اِنَّهٗ هُوَ الْبَرُّ الرَّحِیْمُ ۟۠
52.28. நிச்சயமாக நாங்கள் எங்களின் உலக வாழ்வில் அவனையே வணங்கிக் கொண்டிருந்தோம். நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றும்படி அவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம். நிச்சயமாக அவன் தன் அடியார்களுக்கு வழங்கிய வாக்குறுதியை சிறந்த முறையில் நிறைவேற்றுபவனாகவும் உண்மையாளனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எம்மீது அவனது நலவு, கருணையினால்தான் அவன் எங்களுக்கு நம்பிக்கையின்பால் வழிகாட்டி எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தான். நரகத்தைவிட்டும் தூரமாக்கினான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
فَذَكِّرْ فَمَاۤ اَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَّلَا مَجْنُوْنٍ ۟ؕ
52.29. -தூதரே!- குர்ஆனைக் கொண்டு நினைவூட்டுவீராக. அல்லாஹ் உம்மீது நம்பிக்கை மற்றும் அறிவு ஆகியவற்றை அருளியிருப்பதால் நீர் ஜின்னை வைத்து சோதிடம் பார்ப்பவராகவும் இல்லை. பைத்தியகாரராகவும் இல்லை.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَمْ یَقُوْلُوْنَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهٖ رَیْبَ الْمَنُوْنِ ۟
52.30. அல்லது இந்த பொய்ப்பிப்பாளர்கள் “நிச்சயமாக முஹம்மது தூதர் அல்ல. மாறாக அவர் ஒரு கவிஞர். மரணம் வந்து அவரை வாரிச் சென்றுவிடும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதனால் அவரிலிருந்து நாம் விடைபெற்றுவிடலாம்” என்று கூறுகிறார்களா?
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
قُلْ تَرَبَّصُوْا فَاِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُتَرَبِّصِیْنَ ۟ؕ
52.31. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என் மரணத்தை எதிர்பாருங்கள். என்னை நீங்கள் பொய்ப்பித்ததனால் நானும் உங்கள் மீது இறங்கப்போகும் வேதனையை எதிர்பார்க்கிறேன்.”
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• الجمع بين الآباء والأبناء في الجنة في منزلة واحدة وإن قصر عمل بعضهم إكرامًا لهم جميعًا حتى تتم الفرحة.
1. தந்தையரும் அவர்களின் சந்ததியினரும் செயல்களின் அடிப்படையில் சிலர் குறைவானவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் கௌரவித்து, சந்தோசம் முழுமையடைவதற்காக சுவர்க்கத்தில் ஒரே படித்தரத்தில் ஒன்றுசேர்க்கப்படுவார்கள்.

• خمر الآخرة لا يترتب على شربها مكروه.
2. மறுமையில் வழங்கப்படும் மதுவை அருந்துவதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

• من خاف من ربه في دنياه أمّنه في آخرته.
3. யார் உலகில் தம் இறைவனை அஞ்சினாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் பாதுகாப்பு வழங்குவான்.

 
భావార్ధాల అనువాదం సూరహ్: అత్-తూర్
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం - అనువాదాల విషయసూచిక

ఇది తఫ్సీర్ అధ్యయన కేంద్రం ద్వారా విడుదల చేయబడింది.

మూసివేయటం