Check out the new design

పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం * - అనువాదాల విషయసూచిక


భావార్ధాల అనువాదం సూరహ్: అత్-తౌబహ్   వచనం:
یُرِیْدُوْنَ اَنْ یُّطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَیَاْبَی اللّٰهُ اِلَّاۤ اَنْ یُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟
9.32. இந்த நிராகரிப்பாளர்களும் அந்நிய மதத்தினர்களும் தமது இட்டுக்கட்டல்கள் மூலமும் முஹம்மது கொண்டு வந்ததை நிராகரிப்பதன் மூலமும் இஸ்லாத்தையும் அதிலுள்ள ‘அல்லாஹ்வின் ஏகத்துவம், அவனுடைய தூதர் கொண்டுவந்தது உண்மை’ என்பதற்கான தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் அழித்துவிட நாடுகிறார்கள். ஆனால் அல்லாஹ் தன் மார்க்கத்தை முழுமைப்படுத்தியே தீருவான். நிராகரிப்பாளர்கள் வெறுத்தபோதிலும் மற்ற மார்க்கங்களைவிட அதனை மேலோங்கச் செய்தே தீருவான். நிச்சயமாக அல்லாஹ் அதனை பூர்த்தி செய்து, வெளிப்படுத்தி, மேலோங்கச் செய்வான். அல்லாஹ் ஏதேனும் ஒன்றை நாடிவிட்டால் மற்றவர்களின் நாட்டம் நடைபெறாது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
هُوَ الَّذِیْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰی وَدِیْنِ الْحَقِّ لِیُظْهِرَهٗ عَلَی الدِّیْنِ كُلِّهٖ ۙ— وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ ۟
9.33. அல்லாஹ்தான் தன் தூதர் முஹம்மதை மக்களுக்கு, வழிகாட்டும் குர்ஆன் என்னும் நேர்வழியைக் கொண்டும் இஸ்லாம் என்னும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அதிலுள்ள ஆதாரங்கள் மற்றும் சட்டங்களைக் கொண்டு எல்லா மார்க்கங்களை விடவும் மேலோங்கச் செய்வதற்காக அனுப்பினான். அதனை நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ كَثِیْرًا مِّنَ الْاَحْبَارِ وَالرُّهْبَانِ لَیَاْكُلُوْنَ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ— وَالَّذِیْنَ یَكْنِزُوْنَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا یُنْفِقُوْنَهَا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۙ— فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ
9.34. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மைப்படுத்தி அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்களே! யூத அறிஞர்கள் மற்றும் கிறிஸ்தவ துறவிகளில் பெரும்பாலோர் மக்களின் செல்வங்களை இலஞ்சமாகவும் இன்னபிற வழிகளின் மூலமாகவும் உரிமையின்றிப் பெறுகிறார்கள். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் மக்களைத் தடுக்கிறார்கள். -தூதரே!- தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைத்து, அதில் தம் மீது கடமையான ஸகாத்தை வழங்காதோருக்கு மறுமை நாளில் அவர்களைக் கவலையூட்டும் வேதனைமிக்க தண்டனை உண்டு என்று கூறுவீராக.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
یَّوْمَ یُحْمٰی عَلَیْهَا فِیْ نَارِ جَهَنَّمَ فَتُكْوٰی بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ ؕ— هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ ۟
9.35. வழங்க வேண்டிய உரிமையை வழங்காமல் அவர்கள் சேர்த்து வைத்தவை மறுமை நாளில் நரக நெருப்பில் பழுக்க காய்ச்சப்படும். அது நன்கு கொதித்தவுடன் அதைக் கொண்டு அவர்களின் நெற்றிகளிலும் விலாப் புறங்களிலும் முதுகுகளிலும் சூடு இடப்படும். கண்டிக்கும் விதத்தில் அவர்களிடம் “இதுதான் கடமையான உரிமைகளை வழங்காமல் நீங்கள் சேகரித்து வைத்த செல்வங்கள். உரிய கடமைகளைச் செய்யாமல் நீங்கள் சேகரித்து வைத்தவற்றின் விளைவை அனுபவியுங்கள்.” என்று கூறப்படும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِیْ كِتٰبِ اللّٰهِ یَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ ؕ— ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ ۙ۬— فَلَا تَظْلِمُوْا فِیْهِنَّ اَنْفُسَكُمْ ۫— وَقَاتِلُوا الْمُشْرِكِیْنَ كَآفَّةً كَمَا یُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً ؕ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ ۟
9.36. அல்லாஹ்வின் தீர்ப்பிலும் ஏற்பாட்டிலும் வருடம் பன்னிரண்டு மாதங்களைக் கொண்டதாகும். வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த போதே லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் பதிவேட்டில் அவ்வாறே அல்லாஹ் பதிந்து வைத்துள்ளான். அதில் நான்கு மாதங்களில் போர்புரிவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். (அவை, துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய தொடராக வரும் மூன்று மாதங்களும் தனியாக இடம்பெறும் ரஜப் மாதமும் ஆகும்). வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள், அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்று மேற்கூறப்பட்ட விடயமே நேரான மார்க்கமாகும். எனவே தடைசெய்யப்பட்ட மாதங்களில் போர் செய்து, அதன் புனிதத்தை சீர்குழைத்து அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துவிடாதீர்கள். இணைவைப்பாளர்கள் உங்கள் அனைவருடனும் போரிடுவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போரிடுங்கள். தன் கட்டளைகளைச் செயல்படுத்தி, தான் தடுத்தவற்றிலிருந்து விலகி தன்னை அஞ்சுவோருக்கு உதவிசெய்தல், அவர்களை உறுதிப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் அவர்களுடன் இருக்கின்றான். யாருடன் அல்லாஹ் இருக்கின்றானோ அவரை யாராலும் வெல்ல முடியாது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
ఈ పేజీలోని వచనాల ద్వారా లభించే ప్రయోజనాలు:
• دين الله ظاهر ومنصور مهما سعى أعداؤه للنيل منه حسدًا من عند أنفسهم.
1. எதிரிகள் தம்மிடமுள்ள பொறாமையினால் எவ்வளவுதான் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு தீங்கு செய்ய முயற்சி செய்தாலும் அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்கியதாகவே இருக்கும்.

• تحريم أكل أموال الناس بالباطل، والصد عن سبيل الله تعالى.
2. மக்களின் செல்வங்களை தவறானமுறையில் உண்ணக்கூடாது. அல்லாஹ்வின் பாதையை விட்டும் அவர்களைத் தடுக்கக் கூடாது.

• تحريم اكتناز المال دون إنفاقه في سبيل الله.
3. அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்காமல் செல்வங்களை சேர்த்து வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

• الحرص على تقوى الله في السر والعلن، خصوصًا عند قتال الكفار؛ لأن المؤمن يتقي الله في كل أحواله.
4. இரகசியத்திலும், பகிரங்கத்திலும் குறிப்பாக நிராகரிப்போருடன் போரிடும் போதும் இறையச்சத்தில் கவனம் செலுத்த வேண்டும். நிச்சயமாக முஃமின் இறைவனை சகல நிலைமைகளிலும் அஞ்சுவான்.

 
భావార్ధాల అనువాదం సూరహ్: అత్-తౌబహ్
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - అల్ ఖుర్ఆన్ అల్ కరీమ్ యొక్క సంక్షిప్త తఫ్సీర్ వ్యాఖ్యానం - అనువాదాల విషయసూచిక

ఇది తఫ్సీర్ అధ్యయన కేంద్రం ద్వారా విడుదల చేయబడింది.

మూసివేయటం