Check out the new design

పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - ఉమర్ షరీఫ్ * - అనువాదాల విషయసూచిక

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

భావార్ధాల అనువాదం సూరహ్: అల్-ఇస్రా   వచనం:
وَبِالْحَقِّ اَنْزَلْنٰهُ وَبِالْحَقِّ نَزَلَ ؕ— وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِیْرًا ۟ۘ
இன்னும், உண்மையுடன் இ(ந்த வேதத்)தை இறக்கினோம். மேலும், உண்மையுடனேயே இ(ந்த வேதமான)து இறங்கியது. இன்னும், (நபியே!) நற்செய்தி கூறுபவராகவும் (அச்சமூட்டி) எச்சரிப்பவராகவுமே தவிர நாம் உம்மை அனுப்பவில்லை.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَقُرْاٰنًا فَرَقْنٰهُ لِتَقْرَاَهٗ عَلَی النَّاسِ عَلٰی مُكْثٍ وَّنَزَّلْنٰهُ تَنْزِیْلًا ۟
(நபியே!) குர்ஆனை நாம் தெளிவுபடுத்தி (இறக்கி)னோம், மக்களுக்கு இதை நீர் கவனத்துடன் (தெளிவாக) நிதானமாக ஓதுவதற்காக. இன்னும், இதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
قُلْ اٰمِنُوْا بِهٖۤ اَوْ لَا تُؤْمِنُوْا ؕ— اِنَّ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهٖۤ اِذَا یُتْلٰی عَلَیْهِمْ یَخِرُّوْنَ لِلْاَذْقَانِ سُجَّدًا ۟ۙ
(நபியே!) கூறுவீராக! “(மக்களே) நீங்கள் (இதை) நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லது, நம்பிக்கை கொள்ளாதீர்கள். நிச்சயமாக இதற்கு முன்னர் (முந்திய வேதங்களின் உண்மையான) கல்வி கொடுக்கப்பட்(டு அதன்படி இதை நம்பிக்கை கொண்)டவர்கள், - அவர்கள் மீது (இந்த வேதம்) ஓதப்பட்டால் அவர்கள் (அல்லாஹ்விற்கு) சிரம் பணிந்தவர்களாக தாடைகள் மீது விழுவார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَّیَقُوْلُوْنَ سُبْحٰنَ رَبِّنَاۤ اِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُوْلًا ۟
இன்னும், கூறுவார்கள்: “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; நிச்சயமாக எங்கள் இறைவனின் வாக்கு நிறைவேறக்கூடியதாகவே இருக்கிறது.”
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَیَخِرُّوْنَ لِلْاَذْقَانِ یَبْكُوْنَ وَیَزِیْدُهُمْ خُشُوْعًا ۟
இன்னும், அழுதவர்களாக தாடைகள் மீது விழுவார்கள். மேலும் இ(ந்த வேதமான)து அவர்களுக்கு (அல்லாஹ்விற்கு முன்) உள்ளச்சத்தை அதிகப்படுத்துகிறது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ ؕ— اَیًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰی ۚ— وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَیْنَ ذٰلِكَ سَبِیْلًا ۟
(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது, ரஹ்மான் என்று அழையுங்கள்; (அவ்விரு பெயர்களில்) எதை (கூறி) நீங்கள் (அவனை) அழைத்தாலும் அவனுக்கு (இன்னும்) மிக அழகிய (பல) பெயர்கள் உள்ளன.” மேலும், (நபியே!) உமது தொழுகையில் (அதில் ஓதப்படும் குர்ஆனையும் பிரார்த்தனையையும்) மிக சப்தமிட்டு ஓதாதீர்! இன்னும், அதில் மிக மெதுவாகவும் ஓதாதீர்! அதற்கிடையில் (மிதமான) ஒரு வழியைத் தேடுவீராக!
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ لَمْ یَتَّخِذْ وَلَدًا وَّلَمْ یَكُنْ لَّهٗ شَرِیْكٌ فِی الْمُلْكِ وَلَمْ یَكُنْ لَّهٗ وَلِیٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِیْرًا ۟۠
இன்னும், (நபியே!) கூறுவீராக! “புகழனைத்தும் அல்லாஹ்விற்குரியதே! அவன் (யாரையும் தனக்கு) குழந்தையாக எடுக்கவில்லை. மேலும், ஆட்சியில் அவனுக்கு அறவே இணை இல்லை. இன்னும், பலவீனத்தினால் அவனுக்கு நண்பன் யாரும் அறவே இல்லை.” மேலும், (நபியே!) அவனை மிக மிகப் பெருமைப்படுத்துவீராக!
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
 
భావార్ధాల అనువాదం సూరహ్: అల్-ఇస్రా
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - ఉమర్ షరీఫ్ - అనువాదాల విషయసూచిక

షేఖ్ ఉమర్ షరీఫ్ బిన్ అబ్దుల్ సలామ్ దాని అనువాదము.

మూసివేయటం