Check out the new design

పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - ఉమర్ షరీఫ్ * - అనువాదాల విషయసూచిక

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

భావార్ధాల అనువాదం సూరహ్: అన్-నూర్   వచనం:

அந்நூர்

سُوْرَةٌ اَنْزَلْنٰهَا وَفَرَضْنٰهَا وَاَنْزَلْنَا فِیْهَاۤ اٰیٰتٍۢ بَیِّنٰتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
இது ஓர் அத்தியாயமாகும். இதை நாம் இறக்கினோம். இ(திலுள்ள சட்டங்களை பின்பற்றி நடப்ப)தை நாம் கடமையாக்கினோம். இன்னும், நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக தெளிவான பல அத்தாட்சிகளை இதில் நாம் இறக்கினோம்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَلزَّانِیَةُ وَالزَّانِیْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۪— وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِیْ دِیْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ۚ— وَلْیَشْهَدْ عَذَابَهُمَا طَآىِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِیْنَ ۟
விபச்சாரி; இன்னும், விபச்சாரன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு பிரம்படி அடியுங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தில் (அதன் சட்டத்தை நிறைவேற்றும்போது) அந்த இருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் வந்துவிட வேண்டாம், நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால். இன்னும், நம்பிக்கையாளர்களில் ஒரு பெரும் கூட்டம் அவ்விருவரின் தண்டனை (நிறைவேறுகின்ற இடத்து)க்கு ஆஜராகட்டும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اَلزَّانِیْ لَا یَنْكِحُ اِلَّا زَانِیَةً اَوْ مُشْرِكَةً ؗ— وَّالزَّانِیَةُ لَا یَنْكِحُهَاۤ اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ ۚ— وَحُرِّمَ ذٰلِكَ عَلَی الْمُؤْمِنِیْنَ ۟
விபச்சாரன், ஒரு விபச்சாரியுடன்; அல்லது, இணைவைப்பவளுடன் தவிர (மற்றவளுடன்) உ(டலு)றவு வைக்க மாட்டான். இன்னும், விபச்சாரியாக இருப்பவள், - அவளுடன் ஒரு விபச்சாரன்; அல்லது, இணைவைப்பவன் ஒருவனைத் தவிர (மற்றவர்) உ(டலு)றவு வைக்க மாட்டான். இது (-விபச்சாரம் செய்வது) நம்பிக்கையாளர்களுக்கு ஹராம் - தடுக்கப்பட்டுள்ளது.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَالَّذِیْنَ یَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ یَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِیْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا ۚ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟ۙ
எவர்கள் பத்தினிகள் மீது விபச்சார குற்றம் சுமத்துவார்களோ, பிறகு, அவர்கள் (தாங்கள் கூறியதற்கு) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லை என்றால் அவர்களை எண்பது பிரம்படி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்காதீர்கள். அவர்கள்தான் பாவிகள் (பொய்யர்கள்) ஆவார்கள்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا ۚ— فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
எவர்கள் அதற்குப் பின்னர் திருந்திவிட்டார்களோ; இன்னும், (தங்களை) சீர்படுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் பாவிகள் அல்லர்.) ஆக, நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَالَّذِیْنَ یَرْمُوْنَ اَزْوَاجَهُمْ وَلَمْ یَكُنْ لَّهُمْ شُهَدَآءُ اِلَّاۤ اَنْفُسُهُمْ فَشَهَادَةُ اَحَدِهِمْ اَرْبَعُ شَهٰدٰتٍۢ بِاللّٰهِ ۙ— اِنَّهٗ لَمِنَ الصّٰدِقِیْنَ ۟
இன்னும், எவர்கள் தங்களது மனைவிகள் மீது விபச்சார குற்றம் சுமத்துகிறார்களோ; இன்னும், அவர்களிடம் அவர்களைத் தவிர சாட்சிகள் (வேறு) இல்லையோ, ஆக, அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக தான் உண்மை கூறுபவர்களில் உள்ளவன்தான்” என்று நான்கு முறை சாட்சி சொல்ல வேண்டும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَالْخَامِسَةُ اَنَّ لَعْنَتَ اللّٰهِ عَلَیْهِ اِنْ كَانَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
ஐந்தாவது முறை, “நிச்சயமாக அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும், தான் பொய் கூறுபவர்களில் ஒருவனாக இருந்தால்” (என்று கூறவேண்டும்).
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَیَدْرَؤُا عَنْهَا الْعَذَابَ اَنْ تَشْهَدَ اَرْبَعَ شَهٰدٰتٍۢ بِاللّٰهِ ۙ— اِنَّهٗ لَمِنَ الْكٰذِبِیْنَ ۟ۙ
இன்னும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக (எனது கணவராகிய) அவர் பொய் கூறுபவர்களில் உள்ளவர் என்று நான்கு முறை அவள் சாட்சி சொல்வது அவளை விட்டும் (விபச்சாரத்தின்) தண்டனையை தடுக்கும்.
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَالْخَامِسَةَ اَنَّ غَضَبَ اللّٰهِ عَلَیْهَاۤ اِنْ كَانَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
இன்னும், ஐந்தாவது முறை, “அவர் உண்மை கூறுபவர்களில் இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்” (என்று அவள் சொல்ல வேண்டும்).
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِیْمٌ ۟۠
அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை அங்கீகரிப்பவனாகவும் ஞானவானாகவும் இல்லாதிருந்தால் (அவன் உங்களை உடனே தண்டித்திருப்பான்).
అరబీ భాషలోని ఖుర్ఆన్ వ్యాఖ్యానాలు:
 
భావార్ధాల అనువాదం సూరహ్: అన్-నూర్
సూరాల విషయసూచిక పేజీ నెంబరు
 
పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - ఉమర్ షరీఫ్ - అనువాదాల విషయసూచిక

షేఖ్ ఉమర్ షరీఫ్ బిన్ అబ్దుల్ సలామ్ దాని అనువాదము.

మూసివేయటం