Check out the new design

แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) * - สารบัญ​คำแปล


แปลความหมาย​ สูเราะฮ์: Al-Baqarah   อายะฮ์:
وَمَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَتَثْبِیْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَیْنِ ۚ— فَاِنْ لَّمْ یُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
2.265. அல்லாஹ்வின் திருப்தியை நாடியும் அவனுடைய வாக்குறுதியின் மீது திருப்தியடைந்தவர்களாகவும் வெறுப்பின்றி தங்கள் செல்வங்களை செலவு செய்பவர்களுக்கு உதாரணம் உயரமான வளமுள்ள இடத்தில் இருக்கும் தோட்டத்தைப் போன்றதாகும். அது நல்ல மழையைப் பெற்றதால் பலமடங்கு விளைச்சலைத் தந்தது. அது வளமான நிலம் என்பதால் நல்ல மழையைப் பெறாவிட்டாலும் அங்கு பெய்யக்கூடிய சிறுதூறலே அதற்குப் போதுமானதாகும். இவ்வாறே அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டும் செலவு செய்பவர்களின் தர்மங்களை அவன் ஏற்றுக்கொள்கிறான். அது குறைவாக இருந்தாலும் அதற்கு பன்மடங்கு கூலி வழங்குகிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். உளத்தூய்மையுடையவர்கள் முகஸ்துதியுடையோர் ஆகிய எவரது நிலமையும் அவனைவிட்டு மறைவாக இல்லை. ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை அவன் வழங்கிடுவான்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
اَیَوَدُّ اَحَدُكُمْ اَنْ تَكُوْنَ لَهٗ جَنَّةٌ مِّنْ نَّخِیْلٍ وَّاَعْنَابٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ— لَهٗ فِیْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ ۙ— وَاَصَابَهُ الْكِبَرُ وَلَهٗ ذُرِّیَّةٌ ضُعَفَآءُ ۖۚ— فَاَصَابَهَاۤ اِعْصَارٌ فِیْهِ نَارٌ فَاحْتَرَقَتْ ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ ۟۠
2.266. நீங்கள் பின்வரும் விஷயத்தை விரும்புவீர்களா?: உங்களுக்குப் பேரீச்சைகளும் திராட்சைகளும் அடங்கிய ஒரு தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தின் நடுவில் சுவையான நீர் ஓடுகிறது. அதில் எல்லா வகையான நல்ல கனிகளும் உங்களுக்குக் கிடைக்கின்றன. உங்களுக்கு வயதாகிவிடுகிறது. நீங்கள் வேலைசெய்ய முடியாத கிழவராகி விடுகிறீர்கள். இந்நிலையில் உங்களுக்கு வேலைசெய்ய முடியாத பலவீனமான சிறுகுழந்தைகளும் இருக்கின்றனர். உங்களின் முதுமை, குழந்தைகளின் பலவீனம் ஆகிய காரணங்களினால் அதன்பால் அதிக தேவையுடையவர்களாக நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் நெருப்பை உள்ளடக்கிய கடுமையான காற்று அந்தத் தோட்டத்தைத் தாக்கி அனைத்தையும் அழித்துவிடுகிறது. மக்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக தன் செல்வத்தை செலவுசெய்பவனின் நிலையும் இவ்வாறுதான் அமையும். நன்மையின் பக்கம் மிகவும் தேவையுள்ள மறுமைநாளில் அவன் அல்லாஹ்வை சந்திக்கும்போது எந்த நன்மையையும் பெறமாட்டான். இவ்வாறு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்குப் பயன்தரக்கூடியவற்றை நீங்கள் சிந்திக்கும்பொருட்டு தெளிவுபடுத்துகிறான்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِنْ طَیِّبٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّاۤ اَخْرَجْنَا لَكُمْ مِّنَ الْاَرْضِ ۪— وَلَا تَیَمَّمُوا الْخَبِیْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاٰخِذِیْهِ اِلَّاۤ اَنْ تُغْمِضُوْا فِیْهِ ؕ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَنِیٌّ حَمِیْدٌ ۟
2.267. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் சம்பாதித்த தூய்மையான, ஹலாலான செல்வங்களிலிருந்தும், நாம் பூமியின் தாவரங்களிலிருந்து உங்களுக்காக வெளிப்படுத்தியவற்றிலிருந்தும் செலவு செய்யுங்கள். மட்டமான பொருள்களை செலவுசெய்ய எண்ணாதீர்கள். உங்களுக்கு அத்தகைய பொருள்கள் வழங்கப்பட்டால் முகம்சுளித்தவர்களாகத்தானே அவற்றை ஏற்றுக்கொள்வீர்கள். உங்களுக்கு விரும்பாததை எவ்வாறு நீங்கள் அல்லாஹ்வுக்கு விரும்புகிறீர்கள்? அறிந்துகொள்ளுங்கள், உங்களின் செலவீனங்களை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்; அவன் தன் உள்ளமையிலும் செயல்களிலும் புகழுக்குரியவன்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
اَلشَّیْطٰنُ یَعِدُكُمُ الْفَقْرَ وَیَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ ۚ— وَاللّٰهُ یَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ؕ— وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
2.268. ஷைத்தான் வறுமையைக்கொண்டு உங்களை அச்சுறுத்துகிறான்; கஞ்சத்தனம் செய்ய உங்களைத் தூண்டுகிறான்; பாவங்களிலும் குற்றங்களிலும் ஈடுபட உங்களை அழைக்கிறான். உங்கள் பாவங்களை மன்னிப்பேன் என்றும் தாராளமாக அளிப்பேன் என்றும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமாக வழங்கக்கூடியவன்; தன் அடியார்களின் நிலைமைகளை நன்கறிந்தவன்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
یُّؤْتِی الْحِكْمَةَ مَنْ یَّشَآءُ ۚ— وَمَنْ یُّؤْتَ الْحِكْمَةَ فَقَدْ اُوْتِیَ خَیْرًا كَثِیْرًا ؕ— وَمَا یَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ ۟
2.269. அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு சீரான சொல்லையும் சரியான செயலையும் வழங்குகிறான். யாருக்கு இது வழங்கப்பட்டதோ அவர் பெரும் நன்மைகளைப் பெற்றவராவார். அல்லாஹ்வின் ஒளியின் மூலம் பயன்பெற்று அவனது நேர்வழியையும் பெற்ற முழுமையான சிந்தனையுடையோரே அவனது வசனங்களைக் கொண்டு அறிவுரை பெற்றுக்கொள்வர்.
ตัฟสีรต่างๆ​ ภาษาอาหรับ:
ประโยชน์​ที่​ได้รับ​:
• المؤمنون بالله تعالى حقًّا واثقون من وعد الله وثوابه، فهم ينفقون أموالهم ويبذلون بلا خوف ولا حزن ولا التفات إلى وساوس الشيطان كالتخويف بالفقر والحاجة.
1. அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ் அளித்த வாக்குறுதியையும் நன்மையையும் உறுதியாக நம்புபவார்கள். அவர்கள் அச்சமோ கவலையோ இன்றி தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்கள். ஏழ்மை மற்றும் தேவை போன்றவற்றைக் கொண்டு அச்சமூட்டும் சைதானின் ஊசலாட்டங்களுக்கு அவர்கள் இடமளிக்கவும்மாட்டார்கள்.

• الإخلاص من أعظم ما يبارك الأعمال ويُنمِّيها.
2. நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வுக்காக மட்டும் செலவுசெய்தால் அவர்கள் செலவுசெய்தவற்றில் அவன் பரக்கத் செய்கிறான். இது அவனுடைய அருளில் உள்ளவையாகும்.

• أعظم الناس خسارة من يرائي بعمله الناس؛ لأنه ليس له من ثواب على عمله إلا مدحهم وثناؤهم.
3. தனது செயல்களை மக்களுக்குக் காட்டுவதற்காகச் செய்பவனே மிகப்பெரும் இழப்புக்குரியவர்கள். ஏனெனில் மனிதர்களது புகழைத் தவிர வேறு எந்த விதமான கூலியும் அவர்களது செயல்களுக்குக் கிடையாது.

 
แปลความหมาย​ สูเราะฮ์: Al-Baqarah
สารบัญสูเราะฮ์ หมายเลข​หน้า​
 
แปล​ความหมาย​อัลกุรอาน​ - คำแปลภาษาทมิฬ สำหรับหนังสืออรรถาธิบายอัลกุรอานอย่างสรุป (อัลมุคตะศ็อร ฟีตัฟซีร อัลกุรอานิลกะรีม) - สารบัญ​คำแปล

โดย ศูนย์ตัฟซีรเพื่อการศึกษาอัลกุรอาน

ปิด