Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Ayah: (16) Surah: Yūnus
قُلْ لَّوْ شَآءَ اللّٰهُ مَا تَلَوْتُهٗ عَلَیْكُمْ وَلَاۤ اَدْرٰىكُمْ بِهٖ ۖؗۗ— فَقَدْ لَبِثْتُ فِیْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
10.16. -தூதரே!- நீர் கூறுவீராக: “நான் உங்களுக்குக் குர்ஆனை எடுத்துரைக்கக் கூடாது என்று அல்லாஹ் நாடியிருந்தால் நான் உங்களுக்கு அதனை உங்களிடம் ஓதியிருக்கவும் மாட்டேன். அதனை உங்களுக்கு எடுத்துரைத்திருக்கவும் மாட்டேன். அவன் நாடியிருந்தால் என் மூலமாக குர்ஆனை உங்களுக்குக் கற்றுத் தந்திருக்க மாட்டான். நான் உங்களிடையே நீண்ட காலம் - நாற்பது வருடம் - தங்கியுள்ளேன். எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. நாம் இப்பொழுது பெற்றிருக்கும் இந்த பணியையும் நான் தேடவில்லை. நான் உங்களிடம் கொண்டு வந்துள்ளது அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான், எனக்கு அதில் எந்த தலையீடும் இல்லை என்பதை உங்களின் அறிவைக் கொண்டு அறிந்துகொள்ள மாட்டீர்களா?
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• عظم الافتراء على الله والكذب عليه وتحريف كلامه كما فعل اليهود بالتوراة.
1. யூதர்கள் தவ்ராத்தை திரித்தது போல அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டி பொய்யுரைத்து அவனது வார்த்தையைத் திரிவுபடுத்துவது மாபெரும் தவறாகும்.

• النفع والضر بيد الله عز وجل وحده دون ما سواه.
2. பலனளிப்பதும் தீங்கிழைப்பதும் அல்லாஹ்வின் கைவசம் மாத்திரமே உள்ளது. அவனைத் தவிர வேறு யாாிடமும் இல்லை.

• بطلان قول المشركين بأن آلهتهم تشفع لهم عند الله.
3. தங்களின் சிலைகள் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்ற இணைவைப்பாளர்களின் வாதம் தவறானதாகும்.

• اتباع الهوى والاختلاف على الدين هو سبب الفرقة.
4. மனஇச்சையைப் பின்பற்றுவதும் மார்க்கத்தில் கருத்து வேறுபாடு கொள்வதும் பிரிவினைக்கான காரணங்களாகும்.

 
Salin ng mga Kahulugan Ayah: (16) Surah: Yūnus
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Indise ng mga Salin

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Isara