Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

அல்பீல்

Ilan sa mga Layon ng Surah:
بيان قدرة الله وبطشه بالكائدين لبيته المحرّم.
அல்லாஹ்வின் ஆற்றலையும், தனது புனித ஆலயத்துக்கு சூழ்ச்சிசெய்வோரைத் தண்டிப்பதையும் தெளிவுபடுத்தல் info

external-link copy
1 : 105

اَلَمْ تَرَ كَیْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِیْلِ ۟ؕ

105.1. -தூதரே!- அப்ரஹாவும் அவனது தோழர்களான யானைப் படையினரும் கஅபாவை இடிக்க நாடியபோது உமது இறைவன் அவர்களை என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா? info
التفاسير:

external-link copy
2 : 105

اَلَمْ یَجْعَلْ كَیْدَهُمْ فِیْ تَضْلِیْلٍ ۟ۙ

105.2. அதனை இடிப்பதற்கான அவர்களின் தீய சூழ்ச்சியை அல்லாஹ் தோல்வியடையச்செய்தான். அதனால் கஅபாவை விட்டும் மக்களைத் திருப்பிவிட வேண்டும் என்ற அவர்களின் ஆசை நிறைவேறவில்லை. அதில் எதனையும் அவர்களால் தொடக்கூட முடியவில்லை. info
التفاسير:

external-link copy
3 : 105

وَّاَرْسَلَ عَلَیْهِمْ طَیْرًا اَبَابِیْلَ ۟ۙ

105.3. அல்லாஹ் அவர்களுக்கு எதிராக பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான். info
التفاسير:

external-link copy
4 : 105

تَرْمِیْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّیْلٍ ۟ۙ

105.4. அது களிமண் கற்களை அவர்கள்மீது எறிந்தன. info
التفاسير:

external-link copy
5 : 105

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ ۟۠

105.5. அல்லாஹ் அவர்களை விலங்குகள் தின்று மிதித்துவிட்ட வைக்கோலைப் போன்று ஆக்கிவிட்டான். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• خسران من لم يتصفوا بالإيمان وعمل الصالحات، والتواصي بالحق، والتواصي بالصبر.
1. யார் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிதல், சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுதல், பொறுமையாக இருக்கும்படி ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுதல். ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கவில்லையோ அவர் நஷ்டமடைந்துவிட்டார். info

• تحريم الهَمْز واللَّمْز في الناس.
2. மக்களைக்குறித்து புறம்பேசி குறைகூறிக் கொண்டு திரிவது தடுக்கப்பட்டுள்ளது. info

• دفاع الله عن بيته الحرام، وهذا من الأمن الذي قضاه الله له.
3. தன் புனித இல்லத்தை அல்லாஹ் பாதுகாத்தல். இது அதற்காக அல்லாஹ் முடிவுசெய்துள்ள பாதுகாப்பில் உள்ளதாகும். info