Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
109 : 11

فَلَا تَكُ فِیْ مِرْیَةٍ مِّمَّا یَعْبُدُ هٰۤؤُلَآءِ ؕ— مَا یَعْبُدُوْنَ اِلَّا كَمَا یَعْبُدُ اٰبَآؤُهُمْ مِّنْ قَبْلُ ؕ— وَاِنَّا لَمُوَفُّوْهُمْ نَصِیْبَهُمْ غَیْرَ مَنْقُوْصٍ ۟۠

11.109. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்கள் வணங்குவது தீயது என்பதில் சந்தேகம் கொண்டு விடாதீர். அது சரியானது என்பதற்கு அவர்களிடம் மார்க்க ரீதியான, அறிவு பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை. தங்கள் முன்னோர்களை குருட்டுத்தனமாக பின்பற்றுவதே அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதற்கான காரணமாகும். நாம் அவர்களுக்கு அளிக்கும் வேதனையின் பங்கை குறைவின்றி நிறைவாக வழங்கிடுவோம். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• وجوب الاستقامة على دين الله تعالى.
1. இறைமார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருப்பது கடமையாகும். info

• التحذير من الركون إلى الكفار الظالمين بمداهنة أو مودة.
2. நிராகரிக்கும் அநியாயக்காரர்களின் பக்கம் அவர்களுக்கு விட்டுக் கொடுத்தோ அவர்களுடன் உறவாடியோ சாய்ந்து விடுவதை விட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. info

• بيان سُنَّة الله تعالى في أن الحسنة تمحو السيئة.
3. நன்மை தீமையை அழித்து விடும் என்ற அல்லாஹ்வின் வழிமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info

• الحث على إيجاد جماعة من أولي الفضل يأمرون بالمعروف، وينهون عن الفساد والشر، وأنهم عصمة من عذاب الله.
4. நன்மையை ஏவி தீமையை, குழப்பம் செய்வதை தடுக்கும் நல்ல மக்களைக் கொண்ட ஒரு கூட்டத்தை உருவாக்குமாறு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. நிச்சயமாக அவர்களே அல்லாஹ்வின் தண்டனையை விட்டும் பாதுகாப்பு பெறுபவர்கள். info