Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Ayah: (28) Surah: An-Nahl
الَّذِیْنَ تَتَوَفّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ظَالِمِیْۤ اَنْفُسِهِمْ ۪— فَاَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِنْ سُوْٓءٍ ؕ— بَلٰۤی اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
16.28. மரணத்தின் வானவரும் அவருடைய உதவியாளர்களும் அல்லாஹ்வை நிராகரித்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது தங்களைத் தாக்கும் மரணத்தைக் கண்டு அவர்கள் முழுமையாக சரணடைந்து விடுவார்கள். தமது நிராகரிப்பையும் பாவங்களையும் மறுப்பது தமக்குப் பயனளிக்கும் என நினைத்து அவற்றை அவர்கள் மறுப்பார்கள். அப்போது அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் பொய் கூறுகிறீர்கள். பாவங்கள் புரியும் நிராகரிப்பாளர்களாக இருந்தீர்கள். நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• فضيلة أهل العلم، وأنهم الناطقون بالحق في الدنيا ويوم يقوم الأشهاد، وأن لقولهم اعتبارًا عند الله وعند خلقه.
1. அறிஞர்களின் சிறப்பு தெளிவாகிறது. அவர்கள் இவ்வுலகிலும் சாட்சிகள் நிலை பெறும் மறுமை நாளிலும் சத்தியத்தைக் கொண்டு பேசுவார்கள். அவர்களின் வார்த்தைக்கு அல்லாஹ்விடத்திலும் படைப்புகளிடத்திலும் மதிப்பு உண்டு.

• من أدب الملائكة مع الله أنهم أسندوا العلم إلى الله دون أن يقولوا: إنا نعلم ما كنتم تعملون، وإشعارًا بأنهم ما علموا ذلك إلا بتعليم من الله تعالى.
2. நீங்கள் செய்துகொண்டிருந்ததை நாங்கள் அறிவோம் என்று வானவர்கள் கூறாமல் அல்லாஹ் அறிந்துவைத்துள்ளான் எனக் கூறியமை அல்லாஹ்வுடன் அவர்கள் பேணும் ஒழுக்கமாகும். நிச்சயமாக அதை அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தாலே தவிர அவர்கள் அறிந்து கொள்ள முடியாது என்பதை உணர்த்தும் விதமாகவே அவ்வாறு கூறுகின்றனர்.

• من كرم الله وجوده أنه يعطي أهل الجنة كل ما تمنوه عليه، حتى إنه يُذَكِّرهم أشياء من النعيم لم تخطر على قلوبهم.
3. சுவனவாதிகள் ஆசைவைக்கும் அனைத்தையும் அவர்களுக்கு அல்லாஹ் வழங்குவது அவனது கொடையாகும். எந்தளவுக்கெனில் அவர்களது உள்ளங்களில் தோன்றாத இன்பங்களையும் அவர்களுக்கு அவன் நினைவூட்டுவான்.

• العمل هو السبب والأصل في دخول الجنة والنجاة من النار، وذلك يحصل برحمة الله ومنَّته على المؤمنين لا بحولهم وقوتهم.
4. சுவனத்தில் நுழைவதற்கும் நரகில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் அடிப்படையும் காரணமாக அமைவதும் செயல்களே. அது நம்பிக்கையாளர்களின் மீது அல்லாஹ் காட்டும் கருணையினாலும் அருளினாலுமே ஏற்படுமே அன்றி அவர்களது பலத்தினாலோ ஆற்றலினாலோ அல்ல.

 
Salin ng mga Kahulugan Ayah: (28) Surah: An-Nahl
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Indise ng mga Salin

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Isara