Check out the new design

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Ayah: (270) Surah: Al-Baqarah
وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ نَّفَقَةٍ اَوْ نَذَرْتُمْ مِّنْ نَّذْرٍ فَاِنَّ اللّٰهَ یَعْلَمُهٗ ؕ— وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
2.270. அல்லாஹ்வின் திருப்தியை நாடி குறைவாகவோ நிறைவாகவோ நீங்கள் செலவுசெய்த செலவீனங்கள் அல்லது உங்கள் மீது கடமையில்லாத ஒரு வணக்கத்தை நீங்களாகவே உங்கள் மீது விதித்து நேர்ச்சை செய்தவைகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். அவற்றில் எதுவும் வீணாகிவிடாது. அவன் உங்களுக்கு மிகச் சிறந்த கூலியை வழங்கிடுவான். தம்மீது கடமையானவற்றை வழங்காத அநியாயக்காரர்களுக்கும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவர்களுக்கும் மறுமைநாளில் வேதனையிலிருந்து காக்கக்கூடிய உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள்.
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• إذا أخلص المؤمن في نفقاته وصدقاته فلا حرج عليه في إظهارها وإخفائها بحسب المصلحة، وإن كان الإخفاء أعظم أجرًا وثوابًا لأنها أقرب للإخلاص.
1. நம்பிக்கையாளன் தான் செய்யும் தர்மங்களை அல்லாஹ்வுக்காக மட்டுமே ஆக்கிக் கொண்டால் பொதுநலவைக்கருத்திற்கொண்டு அவற்றை வெளிப்படையாகச் செய்வதிலோ மறைமுகமாகச் செய்வதிலோ எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆயினும் தர்மங்களை மறைவாகச் செய்வது அதிக நன்மையையும் கூலியையும் பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் அதுவே மனத்தூய்மைக்கு நெருக்கமானதாகும்.

• دعوة المؤمنين إلى الالتفات والعناية بالمحتاجين الذين تمنعهم العفة من إظهار حالهم وسؤال الناس.
2. தன்மானத்தால் மக்களிடம் கையேந்தாமல் தவிர்ந்திருக்கும் ஏழைகளின்பக்கம் கவனம் செலுத்தும்படி நம்பிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

• مشروعية الإنفاق في سبيل الله تعالى في كل وقت وحين، وعظم ثوابها، حيث وعد تعالى عليها بعظيم الأجر في الدنيا والآخرة.
3. அனைத்து நிலமைகளிலும் அல்லாஹ்வின் பாதையில் செலவளிப்பது அனுமதிக்கப்பட்டதாகும். அதற்கு இவ்வுலகிலும் மறுமையிலும் மிகப்பெரும் நன்மைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

 
Salin ng mga Kahulugan Ayah: (270) Surah: Al-Baqarah
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm - Indise ng mga Salin

Inilabas ng Markaz Tafsīr Lid-Dirāsāt Al-Qur’ānīyah (Sentro ng Tafsīr Para sa mga Pag-aaral Pang-Qur’an).

Isara