Check out the new design

Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm * - Indise ng mga Salin


Salin ng mga Kahulugan Surah: Tā-ha   Ayah:
فَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ فَقَالُوْا هٰذَاۤ اِلٰهُكُمْ وَاِلٰهُ مُوْسٰی ۚۙ۬— فَنَسِیَ ۟ؕ
20.88. அந்த ஆபரணங்களிலிருந்து சாமிரி இஸ்ராயீலின் மக்களுக்காக உயிரற்ற ஒரு காளைக்கன்றின் உடலை உருவாக்கினான். அது பசு மாட்டைப் போல் சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. சாமிரியின் செயலால் சோதனைக்குள்ளாக்கப்பட்டவர்கள் கூறினார்கள்: “இதுதான் உங்களின் கடவுள், மூஸாவின் கடவுள். அவர் இதனை மறந்து இங்கே விட்டுச் சென்று விட்டார்.
Ang mga Tafsir na Arabe:
اَفَلَا یَرَوْنَ اَلَّا یَرْجِعُ اِلَیْهِمْ قَوْلًا ۙ۬— وَّلَا یَمْلِكُ لَهُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ۟۠
20.89. காளைக் கன்றால் சோதனைக்குள்ளாக்கப்பட்டு அதனை வணங்கியவர்கள் அது அவர்களுடன் பேசவுமில்லை, அவர்களின் பேச்சுக்குப் பதிலளிக்கவுமில்லை, அவர்களையும் ஏனையவர்களையும் விட்டுத் தீங்கினை அகற்றவோ அவர்களுக்கோ ஏனையவர்களுக்கோ நன்மையை கொண்டுவரவோ சக்திபெறவுமில்லை என்பதைப் பார்க்கவில்லையா?
Ang mga Tafsir na Arabe:
وَلَقَدْ قَالَ لَهُمْ هٰرُوْنُ مِنْ قَبْلُ یٰقَوْمِ اِنَّمَا فُتِنْتُمْ بِهٖ ۚ— وَاِنَّ رَبَّكُمُ الرَّحْمٰنُ فَاتَّبِعُوْنِیْ وَاَطِیْعُوْۤا اَمْرِیْ ۟
20.90. மூஸா திரும்பி வருவதற்கு முன்னால் ஹாரூன் அவர்களிடம் கூறினார்: “ஆபரணங்களிலிருந்து காளைக் கன்று உருவாக்கப்பட்டதும் அது எழுப்பும் சப்தமும் உங்களில் நம்பிக்கையாளர்கள் யார்? நிராகரிப்பாளர்கள் யார்? என்று சோதிப்பதற்காகவே அன்றி வேறில்லை. -என் சமூகமே!- நிச்சயமாக கருணைக்குச் சொந்தக்காரனே உங்களின் இறைவனாவான். உங்களுக்கு கருணை காட்டுவதற்கு முன் உங்களுக்கு எவ்வித தீங்கிழைக்கவோ நன்மை பயக்கவோ கூட ஆற்றலற்றவனல்ல உங்கள் இறைவன். எனவே அவனை மட்டுமே வணங்குவதில் என்னைப் பின்பற்றுங்கள். அவனைத் தவிர மற்றவற்றை வணங்குவதை விட்டுவிட்டு எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்.”
Ang mga Tafsir na Arabe:
قَالُوْا لَنْ نَّبْرَحَ عَلَیْهِ عٰكِفِیْنَ حَتّٰی یَرْجِعَ اِلَیْنَا مُوْسٰی ۟
20.91. காளைக் கன்றை வணங்குவதனால் சோதனைக்குள்ளாக்கப்பட்டவர்கள் கூறினார்கள்: “மூஸா நம்மிடம் திரும்பி வரும் வரை நாங்கள் காளைக் கன்று வணக்கத்தில் இருந்துகொண்டே இருப்போம்.”
Ang mga Tafsir na Arabe:
قَالَ یٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَیْتَهُمْ ضَلُّوْۤا ۟ۙ
20.92. மூஸா தம் சகோதரர் ஹாரூனிடம் கூறினார்: “அவர்கள் அல்லாஹ்வை விடுத்து காளைக் கன்றை வணங்கி வழிதவறியதை நீர் பார்த்த போது ஏன் தடுக்கவில்லை?”
Ang mga Tafsir na Arabe:
اَلَّا تَتَّبِعَنِ ؕ— اَفَعَصَیْتَ اَمْرِیْ ۟
20.93. அவர்களை விட்டு விட்டு என்னுடன் சேர்ந்துகொள்வதை விட்டும் எது உம்மைத் தடுத்தது?” நான் உம்மை அவர்களிடம் என் பிரதிநிதியாக நியமித்த போது என் கட்டளைக்கு மாறுசெய்து விட்டீரா?
Ang mga Tafsir na Arabe:
قَالَ یَبْنَؤُمَّ لَا تَاْخُذْ بِلِحْیَتِیْ وَلَا بِرَاْسِیْ ۚ— اِنِّیْ خَشِیْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَیْنَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِیْ ۟
20.94. மூஸா ஹாரூனின் செயலைக் கண்டிக்கும் விதமாக அவரது தலை முடியையும், தாடியையும் பிடித்து இழுத்தபோது ஹாரூன் அவரிடம் அன்பாக கூறினார்: “என் தாடியையோ, தலை முடியையோ பிடித்து இழுக்காதீர். நிச்சயமாக நான் அவர்களிடம் இருந்ததற்கு தக்க காரணம் உள்ளது. ஏனெனில் நான் அவர்களை தனியே விட்டுவிட்டால் அவர்கள் பிரிந்துவிடுவார்கள். அப்பொழுது “நீர் அவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர். அவர்கள் விஷயத்தில் என் அறிவுரையை பேணி நடக்கவில்லை” என்று நீர் என்னைப் பார்த்து கூறுவீர் என்று அஞ்சினேன்.
Ang mga Tafsir na Arabe:
قَالَ فَمَا خَطْبُكَ یٰسَامِرِیُّ ۟
20.95. மூஸா சாமிரியிடம் கூறினார்: “சாமிரியே! உனது விடயம் என்ன? எது உன்னை இவ்வாறு செய்யத் தூண்டியது?”
Ang mga Tafsir na Arabe:
قَالَ بَصُرْتُ بِمَا لَمْ یَبْصُرُوْا بِهٖ فَقَبَضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِیْ نَفْسِیْ ۟
20.96. சாமிரி மூஸாவிடம் கூறினான்: “அவர்கள் காணாததை நான் கண்டேன். ஜிப்ரீலை ஒரு குதிரையின்மீது கண்டேன். அவருடைய குதிரையின் கால்தடத்திலிருந்து ஒருபிடி மண்ணை எடுத்து அதனை காளைக் கன்றின் வடிவத்தில் உருக்கப்பட்ட ஆபரணத்தில் எறிந்தேன். அதிலிருந்து சப்தம் எழுப்பக்கூடிய காளைக் கன்றின் உடல் தோன்றியது. இவ்வாறு என் மனம் நான் செய்தவற்றை எனக்கு அழகுபடுத்திக் காட்டியது.
Ang mga Tafsir na Arabe:
قَالَ فَاذْهَبْ فَاِنَّ لَكَ فِی الْحَیٰوةِ اَنْ تَقُوْلَ لَا مِسَاسَ ۪— وَاِنَّ لَكَ مَوْعِدًا لَّنْ تُخْلَفَهٗ ۚ— وَانْظُرْ اِلٰۤی اِلٰهِكَ الَّذِیْ ظَلْتَ عَلَیْهِ عَاكِفًا ؕ— لَنُحَرِّقَنَّهٗ ثُمَّ لَنَنْسِفَنَّهٗ فِی الْیَمِّ نَسْفًا ۟
20.97. மூஸா சாமிரியிடம் கூறினார்: “நீ சென்றுவிடு. இனி உயிருடன் இருக்கும்வரை “நிச்சயமாக நான் தீண்டவும் மாட்டேன். தீண்டப்படவும் மாட்டேன்” என்றுதான் கூற வேண்டும். நீ ஒதுக்கப்பட்டவனாகத்தான் வாழ்வாய். உனக்கு மறுமை நாளில் ஒருகுறிப்பிட்ட நேரம் உண்டு. அங்கு நீ விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவாய். அல்லாஹ் ஒருபோதும் இந்த வாக்குறுதிக்கு மாறுசெய்ய மாட்டான். உனது கடவுளாக நீ ஆக்கி, அல்லாஹ்வை விடுத்து எதனை வணங்கினாயோ அந்த காளைக் கன்றைப் பார். நாம் அது உருகும் வரை நெருப்பால் எரித்து அதன் எந்த அடையாளமும் எஞ்சியிருக்காதவாறு கடலில் வீசி விடுவோம்.
Ang mga Tafsir na Arabe:
اِنَّمَاۤ اِلٰهُكُمُ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— وَسِعَ كُلَّ شَیْءٍ عِلْمًا ۟
20.98. -மனிதர்களே!- நிச்சயமாக வணக்கத்திற்குரிய உங்களின் உண்மையான இறைவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர வேறு உண்மையான இறைவன் இல்லை. அவன் எல்லாவற்றையும் அறிவால் சூழ்ந்தவன். எதனைப் பற்றிய அறிவும் அவனை விட்டு தப்பிவிடாது.
Ang mga Tafsir na Arabe:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• خداع الناس بتزوير الحقائق مسلك أهل الضلال.
1. உண்மைகளைத் திரிவுபடுத்தி மக்களை ஏமாற்றுவது வழிகேடர்களின் வழிமுறையாகும்.

• الغضب المحمود هو الذي يكون عند انتهاكِ محارم الله.
அல்லாஹ்வினால் தடைசெய்யப்பட்டவைகள் மீறப்படும் போது ஏற்படும் கோபம் வரவேற்கத்தக்கதாகும்.

• في الآيات أصل في نفي أهل البدع والمعاصي وهجرانهم، وألا يُخَالَطوا.
3. பாவங்கள் புரிவோர் மற்றும் மார்க்கத்தில் இல்லாத புதுமையான காரியங்களைச் செய்பவர்களை விலக்கி வைத்து, அவர்களை வெறுத்து நடப்பது அவர்களுடன் சகவாசம் கொள்ளாதிருப்பது என்பவற்றுக்கான ஆதாரம் மேலுள்ள வசனங்களில் இடம்பெற்றுள்ளது.

• في الآيات وجوب التفكر في معرفة الله تعالى من خلال مفعولاته في الكون.
4. அல்லாஹ்வை அறிந்துகொள்வதற்காக பிரபஞ்சத்தில் நிகழும் அவனுடைய செயல்களைக் குறித்து சிந்திப்பது கட்டாயமாகும் என்பதும் மேலுள்ள வசனங்களில் இடம்பெற்றுள்ளது.

 
Salin ng mga Kahulugan Surah: Tā-ha
Indise ng mga Surah Numero ng Pahina
 
Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm - Indise ng mga Salin

Inilabas ng Markaz Tafsīr Lid-Dirāsāt Al-Qur’ānīyah (Sentro ng Tafsīr Para sa mga Pag-aaral Pang-Qur’an).

Isara