Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

Numero ng Pahina:close

external-link copy
59 : 24

وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْیَسْتَاْذِنُوْا كَمَا اسْتَاْذَنَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟

24.59. உங்கள் குழந்தைகள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களும் வீடுகளில் நுழையும்போது முன்பு பெரியவர்களுக்கு கூறப்பட்டது போன்று எப்பொழுதும் அனுமதி கோர வேண்டும். அல்லாஹ் அனுமதி கோரும் சட்டங்களைத் தெளிவுபடுத்தியது போன்றே தன் வசனங்களையும் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அவன் தன் அடியார்களின் நலன்களை நன்கறிந்தவன். அவன் அவர்களுக்கு வழங்கும் சட்டங்களில் ஞானம் மிக்கவனாக இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
60 : 24

وَالْقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِیْ لَا یَرْجُوْنَ نِكَاحًا فَلَیْسَ عَلَیْهِنَّ جُنَاحٌ اَنْ یَّضَعْنَ ثِیَابَهُنَّ غَیْرَ مُتَبَرِّجٰتٍ بِزِیْنَةٍ ؕ— وَاَنْ یَّسْتَعْفِفْنَ خَیْرٌ لَّهُنَّ ؕ— وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟

24.60. திருமணத்தில் ஆர்வமில்லாத, கர்ப்பிணியாக முடியாத, மாதவிடாய் நின்றுவிட்ட மூதாட்டிகள் தங்களின் மறைக்குமாறு ஏவப்பட்ட மறைவான அலங்காரத்தை வெளிப்படுத்தாமல் மேலாடை முகத்திரை போன்ற சில ஆடைகளைக் களைந்து விடுவதில் எவ்விதக் குற்றமுமில்லை. இவ்வாறு சில ஆடைகளைக் களைவதைக்காட்டிலும் மறைப்பது, பக்குவத்திற்காக அவற்றை அணிந்துகொள்வதே அவர்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் பேசுவதை அல்லாஹ் செவியேற்கக்கூடியவன்; உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். info
التفاسير:

external-link copy
61 : 24

لَیْسَ عَلَی الْاَعْمٰی حَرَجٌ وَّلَا عَلَی الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَی الْمَرِیْضِ حَرَجٌ وَّلَا عَلٰۤی اَنْفُسِكُمْ اَنْ تَاْكُلُوْا مِنْ بُیُوْتِكُمْ اَوْ بُیُوْتِ اٰبَآىِٕكُمْ اَوْ بُیُوْتِ اُمَّهٰتِكُمْ اَوْ بُیُوْتِ اِخْوَانِكُمْ اَوْ بُیُوْتِ اَخَوٰتِكُمْ اَوْ بُیُوْتِ اَعْمَامِكُمْ اَوْ بُیُوْتِ عَمّٰتِكُمْ اَوْ بُیُوْتِ اَخْوَالِكُمْ اَوْ بُیُوْتِ خٰلٰتِكُمْ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗۤ اَوْ صَدِیْقِكُمْ ؕ— لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَاْكُلُوْا جَمِیْعًا اَوْ اَشْتَاتًا ؕ— فَاِذَا دَخَلْتُمْ بُیُوْتًا فَسَلِّمُوْا عَلٰۤی اَنْفُسِكُمْ تَحِیَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَیِّبَةً ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟۠

24.61. பார்வையற்றவர், முடவர், நோயாளி ஆகியோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல் போன்ற தங்களால் நிறைவேற்ற முடியாத கடமைகளை விட்டுவிட்டால் அவர்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் உங்களின் வீடுகளிலோ உங்கள் பிள்ளைகளின் வீடுகளிலோ உங்கள் தந்தையர், அன்னையர், சகோதரர்கள், சகோதரிகள், உங்கள் தந்தையின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், உங்கள் அன்னையரின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஆகியோரின் வீடுகளிலோ தோட்டக் காவல்காரன் போன்ற பாதுகாக்குமாறு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வீடுகளிலோ உண்பதில் எவ்விதக் குற்றமுமில்லை. உங்கள் நண்பர்களின் வீடுகளில் உண்பதிலும் எவ்விதக் குற்றமுமில்லை. ஏனெனில் பொதுவாக அவனது மனம் அதனை விரும்பும். நீங்கள் ஒன்றுசேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ உண்பதிலும் உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் மேற்குறிப்பிட்ட வீடுகளிலோ, பிற வீடுகளிலோ நுழையும் போது அங்குள்ளவர்களுக்கு “அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள் மீது சாந்தி நிலவட்டும்” என்று சலாம் - முகமன் கூறுங்கள். நீங்கள் அங்கு யாரையும் பெறவில்லையெனில் “எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்” என்று உங்களுக்கு நீங்களே சலாம் கூறிக்கொள்ளுங்கள். இது உங்களிடையே அன்பும் பிரியமும் ஏற்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடமிருந்து, அவன் உங்களுக்கு விதித்த அருள்வளமிக்க பிரார்த்தனையாகும். கேட்பவரின் மனதை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் தூய பிரார்த்தனையாகும். நீங்கள் விளங்கிக் கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த அத்தியாயத்திலே முன்னால் தெளிவுபடுத்தியது போல் அவன் வசனங்களை தெளிவுபடுத்துகிறான். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• جواز وضع العجائز بعض ثيابهنّ لانتفاء الريبة من ذلك.
1. மூதாட்டிகள் தங்களின் சில ஆடைகளைக் களைந்து கொள்ளலாம். ஏனெனில் அதில் சந்தேகத்துக்கு வாய்ப்பில்லை என்பதால். info

• الاحتياط في الدين شأن المتقين.
2. மார்க்கத்தில் பேணுதலைக் கடைப்பிடிப்பதே இறையச்சமுடையோரின் வழக்கமாகும். info

• الأعذار سبب في تخفيف التكليف.
3. நியாயங்கள், கடமை தளர்த்தப்படுவதற்கான ஒரு காரணமாகும். info

• المجتمع المسلم مجتمع التكافل والتآزر والتآخي.
4. முஸ்லிம் சமூகம் தங்களிடையே உதவிக்கொள்ளக்கூடிய, சகோதரத்துவமிக்க சமூகமாகும். info