Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
12 : 36

اِنَّا نَحْنُ نُحْیِ الْمَوْتٰی وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْ ؔؕ— وَكُلَّ شَیْءٍ اَحْصَیْنٰهُ فِیْۤ اِمَامٍ مُّبِیْنٍ ۟۠

36.12. நிச்சயமாக மறுமை நாளில் விசாரணை செய்வதற்காக அவர்களை எழுப்புவதன் மூலம் மரணித்தவர்களை நாம் உயிர்ப்பிப்போம். அவர்கள் இவ்வுலக வாழ்வில் செய்கின்ற நற்செயல்களையும் தீய செயல்களையும் நாம் பதிவு செய்கின்றோம். அவர்கள் இவ்வுலக வாழ்வில் விட்டுச்செல்கின்ற நிரந்தர தர்மம் போன்ற நிலையான நற்செயல்களையும் அல்லது நிராகரிப்புப் போன்ற நிலையான தீய செயல்களையும் நாம் பதிவு செய்கின்றோம். நாம் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான புத்தகத்திலே அனைத்தையும் கணக்கிட்டு வைத்துள்ளோம். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• العناد مانع من الهداية إلى الحق.
1. பிடிவாதம் சத்தியத்தின்பால் நேர்வழி பெறுவதற்கு தடையாகும். info

• العمل بالقرآن وخشية الله من أسباب دخول الجنة.
2. குர்ஆனின்படி செயல்படுவது, அல்லாஹ்வை அஞ்சுவது சுவனத்தில் நுழைவதற்கான காரணிகளில் ஒன்றாகும். info

• فضل الولد الصالح والصدقة الجارية وما شابههما على العبد المؤمن.
3. நல்ல குழந்தை, நிலையான தர்மம் மற்றும் அதைப் போன்றவற்றினால் நம்பிக்கையாளனான அடியானுக்குக் கிடைக்கும் சிறப்பு. info