Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
106 : 5

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَیْنِكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ حِیْنَ الْوَصِیَّةِ اثْنٰنِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ اَوْ اٰخَرٰنِ مِنْ غَیْرِكُمْ اِنْ اَنْتُمْ ضَرَبْتُمْ فِی الْاَرْضِ فَاَصَابَتْكُمْ مُّصِیْبَةُ الْمَوْتِ ؕ— تَحْبِسُوْنَهُمَا مِنْ بَعْدِ الصَّلٰوةِ فَیُقْسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِیْ بِهٖ ثَمَنًا وَّلَوْ كَانَ ذَا قُرْبٰی ۙ— وَلَا نَكْتُمُ شَهَادَةَ ۙ— اللّٰهِ اِنَّاۤ اِذًا لَّمِنَ الْاٰثِمِیْنَ ۟

5.106. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு மரணத்திற்கான அறிகுறிகள் தென்பட்டுவிட்டால் உயில் எழுதும்போது முஸ்லிம்களில் நீதியுடன் சாட்சிசொல்லக்கூடிய இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பயணத்தில் இருந்து மரணம் சமீபித்து இரு முஸ்லிமான சாட்சிகள் கிடைக்காவிட்டால் நிராகரிப்பாளர்களிலிருந்து இரு ஆண்களைச் சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்விருவரின் சாட்சியங்களில் சந்தேகம் ஏற்பட்டால் ஒரு தொழுகைக்குப் பின் அவர்களை அமரவைத்து “தங்களின் சாட்சியத்தை எதற்குப் பதிலாகவும் நாங்கள் விற்றுவிட மாட்டோம், எந்த உறவினருக்குச் சார்பாகவும் நடக்கமாட்டோம் தம்மிடமுள்ள அல்லாஹ்வுக்குரிய எந்தவொரு சாட்சியத்தையும் நாங்கள் மறைத்துவிட மாட்டோம், அவ்வாறு செயல்பட்டால் நாம் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்ட பாவிகள்” என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து வாக்குறுதி பெற்றுக் கொள்ளுங்கள். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• إذا ألزم العبد نفسه بطاعة الله، وأمر بالمعروف ونهى عن المنكر بحسب طاقته، فلا يضره بعد ذلك ضلال أحد، ولن يُسْأل عن غيره من الناس، وخاصة أهل الضلال منهم.
1. அடியான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தன்னால் இயன்றவரை நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் செயலில் ஈடுபட்டால் மற்றவர்களின் வழிகேடு அவனுக்கு எந்த தீங்கையும் அளிக்காது. அவனிடம் ஏனைய மனிதர்களைக் குறித்து குறிப்பாக வழிகேடர்களைக் குறித்து விசாரிக்கப்பட மாட்டாது. info

• الترغيب في كتابة الوصية، مع صيانتها بإشهاد العدول عليها.
2. உயிலை எழுதுமாறும் அதற்கு நீதிமிக்க சாட்சிகளை ஏற்படுத்தி அதனைப் பாதுகாக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. info

• بيان الصورة الشرعية لسؤال الشهود عن الوصية.
3. உயிலைக் குறித்து சாட்சிகளிடம் விசாரிக்கும் முறை குறித்து மார்க்க வரையறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info