Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - Salin sa Wikang Tamil ng Al-Mukhtasar fī Tafsīr Al-Qur’an Al-Karīm

external-link copy
74 : 5

اَفَلَا یَتُوْبُوْنَ اِلَی اللّٰهِ وَیَسْتَغْفِرُوْنَهٗ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

5.74. அவர்களின் இந்த வார்த்தையிலிருந்து பாவமன்னிப்புக் கோரியவர்களாக அல்லாஹ்வின்பால் அவர்கள் மீள வேண்டாமா? தமது இணைவைப்பிலிருந்து அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோர வேண்டாமா? என்ன பாவம் செய்திருந்தாலும் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவன், அது அவனை நிராகரிப்பதாக இருந்தாலும் சரியே. அவன் நம்பிக்கையாளர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். info
التفاسير:
Ilan sa mga Pakinabang ng mga Ayah sa Pahinang Ito:
• بيان كفر النصارى في زعمهم ألوهية المسيح عليه السلام، وبيان بطلانها، والدعوةُ للتوبة منها.
1. கிறிஸ்தவர்கள் ஈஸாவுக்கு தெய்வீகத்தன்மை இருப்பதாக வாதிட்டதால் அவர்கள் நிராகரிப்பாளர்கள் என்பதும் அந்த வாதம் தவறு என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிலிருந்து மீளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. info

• من أدلة بشرية المسيح وأمه: أكلهما للطعام، وفعل ما يترتب عليه.
2. ஈஸாவும் அவரது தாயும் மனிதர்களே என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றுதான் அவ்விருவரும் உணவு உண்பதும் அதன் விளைவுகளில் ஈடுபடுவதாகும். info

• عدم القدرة على كف الضر وإيصال النفع من الأدلة الظاهرة على عدم استحقاق المعبودين من دون الله للألوهية؛ لكونهم عاجزين.
3. பலனளிப்பதற்கும் தீங்கைத் தடுப்பதற்கும் சக்தியின்மை அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுபவை வணக்கத்திற்குத் தகுதியானவர்கள் அல்ல என்பதற்கான தெளிவான ஆதாரங்களில் ஒன்றாகும். ஏனெனில் அவர்கள் அதற்கு இயலாதவர்களாவர். info

• النهي عن الغلو وتجاوز الحد في معاملة الصالحين من خلق الله تعالى.
4. அல்லாஹ்வின் படைப்பினங்களில் நல்லோரை மதிப்பதில் வரம்புமீறி மிகைப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. info