Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Numero ng Pahina:close

external-link copy
98 : 11

یَقْدُمُ قَوْمَهٗ یَوْمَ الْقِیٰمَةِ فَاَوْرَدَهُمُ النَّارَ ؕ— وَبِئْسَ الْوِرْدُ الْمَوْرُوْدُ ۟

மறுமை நாளில் தன் மக்களுக்கு (வழிகாட்டியாக) முன் செல்வான்; அவர்களை நரகத்தில் சேர்ப்பான். அது சேரப்படும் கெட்ட சேருமிடமாகும். info
التفاسير:

external-link copy
99 : 11

وَاُتْبِعُوْا فِیْ هٰذِهٖ لَعْنَةً وَّیَوْمَ الْقِیٰمَةِ ؕ— بِئْسَ الرِّفْدُ الْمَرْفُوْدُ ۟

இ(ம்மை வாழ்வாகிய இ)திலும் மறுமை நாளிலும் சாபம் அவர்களைத் தொடர்ந்தது. அது கொடுக்கப்பட்ட மிகக் கெட்ட சன்மானமாகும். info
التفاسير:

external-link copy
100 : 11

ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْقُرٰی نَقُصُّهٗ عَلَیْكَ مِنْهَا قَآىِٕمٌ وَّحَصِیْدٌ ۟

இவை (நிராகரித்த சில) ஊர்(வாசி)களின் சரித்திரங்களில் உள்ளவை. இவற்றை உம் மீது விவரிக்கிறோம். இவற்றில் (சில மீதம்) நிற்கிறது; (சில முற்றிலும் வேர்) அறுக்கப்பட்(டு விட்)டது. info
التفاسير:

external-link copy
101 : 11

وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَمَاۤ اَغْنَتْ عَنْهُمْ اٰلِهَتُهُمُ الَّتِیْ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مِنْ شَیْءٍ لَّمَّا جَآءَ اَمْرُ رَبِّكَ ؕ— وَمَا زَادُوْهُمْ غَیْرَ تَتْبِیْبٍ ۟

நாம் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்கே அநீதி இழைத்தனர். உம் இறைவனின் கட்டளை வந்த போது அல்லாஹ்வை அன்றி அவர்கள் அழைக்கும் அவர்களுடைய தெய்வங்கள் அவர்களுக்கு சிறிதும் பலனளிக்கவில்லை; அவை அவர்களுக்கு அழிவைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தவில்லை! info
التفاسير:

external-link copy
102 : 11

وَكَذٰلِكَ اَخْذُ رَبِّكَ اِذَاۤ اَخَذَ الْقُرٰی وَهِیَ ظَالِمَةٌ ؕ— اِنَّ اَخْذَهٗۤ اَلِیْمٌ شَدِیْدٌ ۟

ஊர்களை உம் இறைவன் (தண்டனையால்) பிடித்தால் -அவையோ அநியாயம் செய்பவையாக இருக்க- (அப்)பிடி இது போன்றுதான் இருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி ஒரு துன்புறுத்தக் கூடியது, மிகக்கடுமையானது. info
التفاسير:

external-link copy
103 : 11

اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّمَنْ خَافَ عَذَابَ الْاٰخِرَةِ ؕ— ذٰلِكَ یَوْمٌ مَّجْمُوْعٌ ۙ— لَّهُ النَّاسُ وَذٰلِكَ یَوْمٌ مَّشْهُوْدٌ ۟

மறுமையின் வேதனையைப் பயந்தவருக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அது, மக்கள் அதில் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும். அது (செயல்கள்) சமர்ப்பிக்கப்படும் நாளாகும். info
التفاسير:

external-link copy
104 : 11

وَمَا نُؤَخِّرُهٗۤ اِلَّا لِاَجَلٍ مَّعْدُوْدٍ ۟ؕ

எண்ணப்பட்ட ஒரு தவணைக்கே தவிர அதை நாம் பிற்படுத்த மாட்டோம். info
التفاسير:

external-link copy
105 : 11

یَوْمَ یَاْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ اِلَّا بِاِذْنِهٖ ۚ— فَمِنْهُمْ شَقِیٌّ وَّسَعِیْدٌ ۟

அது வரும் நாளில் அவனுடைய அனுமதி கொண்டே தவிர எந்த ஓர் ஆன்மாவும் பேசவும் செய்யாது. அவர்களில் ஒரு துர்ப்பாக்கியவானும் இருப்பார். நற்பாக்கியவானும் இருப்பார். info
التفاسير:

external-link copy
106 : 11

فَاَمَّا الَّذِیْنَ شَقُوْا فَفِی النَّارِ لَهُمْ فِیْهَا زَفِیْرٌ وَّشَهِیْقٌ ۟ۙ

ஆகவே, துர்ப்பாக்கியமடைந்தவர்கள் நரகில் (எறியப்படுவார்கள்). அதில் அவர்களுக்கு பெரும் கூச்சலும் இறைச்சலும் உண்டு. info
التفاسير:

external-link copy
107 : 11

خٰلِدِیْنَ فِیْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ ؕ— اِنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا یُرِیْدُ ۟

உம் இறைவன் நாடியதைத் தவிர, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை அதில் அவர்கள் நிரந்தரமானவர்கள். நிச்சயமாக உம் இறைவன், தான் நாடுவதை செய்(து முடிப்)பவன். info
التفاسير:

external-link copy
108 : 11

وَاَمَّا الَّذِیْنَ سُعِدُوْا فَفِی الْجَنَّةِ خٰلِدِیْنَ فِیْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ ؕ— عَطَآءً غَیْرَ مَجْذُوْذٍ ۟

ஆகவே, நற்பாக்கியமடைந்தவர்கள் சொர்க்கத்தில் (நுழைக்கப்படுவார்கள்). உம் இறைவன் நாடியதைத் தவிர, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை முடிவுறாத அருட்கொடையாக அதில் அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள். info
التفاسير: