Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Numero ng Pahina:close

external-link copy
23 : 12

وَرَاوَدَتْهُ الَّتِیْ هُوَ فِیْ بَیْتِهَا عَنْ نَّفْسِهٖ وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَیْتَ لَكَ ؕ— قَالَ مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ رَبِّیْۤ اَحْسَنَ مَثْوَایَ ؕ— اِنَّهٗ لَا یُفْلِحُ الظّٰلِمُوْنَ ۟

அவர் எவள் வீட்டில் இருந்தாரோ அவள் (எல்லாக்) கதவுகளையும் மூடிவிட்டு அவரை (தன்) விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்து “வருவீராக” என்று கூறினாள். “அல்லாஹ்வின் பாதுகாப்பை(க் கோருகிறேன்)! நிச்சயமாக அவர் என் எஜமானர், என் தங்குமிடத்தை அழகுபடுத்தினார். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
24 : 12

وَلَقَدْ هَمَّتْ بِهٖ وَهَمَّ بِهَا لَوْلَاۤ اَنْ رَّاٰ بُرْهَانَ رَبِّهٖ ؕ— كَذٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوْٓءَ وَالْفَحْشَآءَ ؕ— اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِیْنَ ۟

உறுதியாக, அவள் அவரை நாடி விட்டாள்; (இறுதியாக,) அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய ஆதாரத்தை அவர் பார்த்திருக்கவில்லையெனில்... (தவறு நடந்திருக்கும்). இவ்வாறுதான், கெட்டதையும் மானக்கேடானதையும் அவரை விட்டு நாம் திருப்புவதற்காக (நாம் ஆதாரத்தை காட்டுவோம்). நிச்சயமாக, அவர் தூய்மையாக்கப்பட்ட நம் அடியார்களில் இருக்கிறார். info
التفاسير:

external-link copy
25 : 12

وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِیْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَیَا سَیِّدَهَا لَدَا الْبَابِ ؕ— قَالَتْ مَا جَزَآءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْٓءًا اِلَّاۤ اَنْ یُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِیْمٌ ۟

இருவரும், வாசலிற்கு முந்தினர். அவள் அவருடைய சட்டையை பின்புறத்தில் கிழித்தாள். வாசலில் அவளுடைய கணவரை இருவரும் பெற்றனர். “உம் மனைவிக்கு ஒரு கெட்டதை நாடியவனின் தண்டனை, அவன் சிறையிடப்படுவது அல்லது (அவனுக்கு) துன்புறுத்தக்கூடிய ஒரு வேதனை (கொடுக்கப்படுவது) தவிர வேறில்லை” என்று கூறினாள். info
التفاسير:

external-link copy
26 : 12

قَالَ هِیَ رَاوَدَتْنِیْ عَنْ نَّفْسِیْ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَا ۚ— اِنْ كَانَ قَمِیْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِیْنَ ۟

(யூஸுஃப் அதை மறுத்து) “அவள்தான் என்னை (பலவந்தமாக) தன் விருப்பத்திற்கு அழைத்தாள்” என்று கூறினார். அவளுடைய குடும்பத்திலிருந்து ஒரு சாட்சியாளர் சாட்சி கூறினார்: அவருடைய சட்டை முன் புறத்திலிருந்து கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறினாள்; அவர் பொய்யர்களில் உள்ளவர்! info
التفاسير:

external-link copy
27 : 12

وَاِنْ كَانَ قَمِیْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِیْنَ ۟

அவருடைய சட்டை பின் புறத்திலிருந்து கிழிக்கப்பட்டதாக இருந்தால், அவள் பொய் கூறினாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.” info
التفاسير:

external-link copy
28 : 12

فَلَمَّا رَاٰ قَمِیْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَیْدِكُنَّ ؕ— اِنَّ كَیْدَكُنَّ عَظِیْمٌ ۟

அவருடைய சட்டை பின்புறத்திலிருந்து கிழிக்கப்பட்டதாக இருப்பதை (அவளுடைய கணவர்) பார்த்தபோது “நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியிலிருந்து உள்ளதுதான்; நிச்சயமாக உங்கள் சதி மகத்தானது” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
29 : 12

یُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا ٚ— وَاسْتَغْفِرِیْ لِذَنْۢبِكِ ۖۚ— اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِـِٕیْنَ ۟۠

“யூஸுஃபே! நீர் இதை விட்டுப் புறக்கணிப்பீராக! (பிறகு தன் மனைவியை நோக்கி) “நீ உன் பாவத்திற்கு மன்னிப்புத் தேடு, நிச்சயமாக நீ தவறிழைத்தவர்களில் இருக்கிறாய்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
30 : 12

وَقَالَ نِسْوَةٌ فِی الْمَدِیْنَةِ امْرَاَتُ الْعَزِیْزِ تُرَاوِدُ فَتٰىهَا عَنْ نَّفْسِهٖ ۚ— قَدْ شَغَفَهَا حُبًّا ؕ— اِنَّا لَنَرٰىهَا فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

நகரத்திலுள்ள பெண்கள் “அதிபரின் மனைவி தன் (அடிமையான) வாலிபனைத் தன் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைக்கிறாள். அவர் அவளை அன்பால் ஈர்த்து விட்டார்! நிச்சயமாக நாம் அவளை தெளிவானதொரு வழிகேட்டில் காண்கிறோம்”என்று கூறினர். info
التفاسير: