Salin ng mga Kahulugan ng Marangal na Qur'an - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

Numero ng Pahina:close

external-link copy
16 : 48

قُلْ لِّلْمُخَلَّفِیْنَ مِنَ الْاَعْرَابِ سَتُدْعَوْنَ اِلٰی قَوْمٍ اُولِیْ بَاْسٍ شَدِیْدٍ تُقَاتِلُوْنَهُمْ اَوْ یُسْلِمُوْنَ ۚ— فَاِنْ تُطِیْعُوْا یُؤْتِكُمُ اللّٰهُ اَجْرًا حَسَنًا ۚ— وَاِنْ تَتَوَلَّوْا كَمَا تَوَلَّیْتُمْ مِّنْ قَبْلُ یُعَذِّبْكُمْ عَذَابًا اَلِیْمًا ۟

கிராமவாசிகளில் பின்தங்கியவர்களை நோக்கி கூறுவீராக! நீங்கள் கடுமையான பலமுடைய ஒரு கூட்டத்தின் பக்கம் அவர்களிடம் நீங்கள் சண்டை செய்வதற்காக அல்லது அவர்கள் பணிந்து விடுவதற்காக நீங்கள் அழைக்கப்படுவீர்கள். நீங்கள் (அந்த அழைப்புக்கு) கீழ்ப்படிந்தால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய கூலியை கொடுப்பான். இதற்கு முன்பு நீங்கள் விலகியதைப் போன்று (இப்போதும் போர் செய்யாமல்) விலகினால் அவன் உங்களை வலி தரக்கூடிய தண்டனையால் தண்டிப்பான். info
التفاسير:

external-link copy
17 : 48

لَیْسَ عَلَی الْاَعْمٰی حَرَجٌ وَّلَا عَلَی الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَی الْمَرِیْضِ حَرَجٌ ؕ— وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ یُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ— وَمَنْ یَّتَوَلَّ یُعَذِّبْهُ عَذَابًا اَلِیْمًا ۟۠

குருடர் மீது சிரமம் (நெருக்கடி) இல்லை, ஊனமானவர் மீது சிரமம் இல்லை, நோயாளி மீது சிரமம் இல்லை. (அவர்கள் போருக்கு வராமல் இருப்பது அவர்கள் மீது குற்றமாகாது.) எவர் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படி(ந்து போருக்கு அழைக்கப்படும் போது போருக்கு வரு)வாரோ அவரை அவன் சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (உடல் வலிமை இருந்தும்) எவர் (போருக்கு வராமல்) விலகுவாரோ அவரை வலி தரக்கூடிய தண்டனையால் அவன் தண்டிப்பான். info
التفاسير:

external-link copy
18 : 48

لَقَدْ رَضِیَ اللّٰهُ عَنِ الْمُؤْمِنِیْنَ اِذْ یُبَایِعُوْنَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِیْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِیْنَةَ عَلَیْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِیْبًا ۟ۙ

திட்டவட்டமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களை திருப்தி அடைந்தான், அவர்கள் உம்மிடம் மரத்தின் கீழ் விசுவாச வாக்குறுதி செய்தபோது. அவன் அவர்களின் உள்ளங்களில் உள்ளதை (உண்மையான எண்ணத்தையும் வாக்குறுதியை நிறைவேற்றும் பண்பையும்) அறிந்தான். ஆகவே, அவர்கள் மீது அமைதியை (நிம்மதியை, பொறுமையை, கண்ணியத்தை, மார்க்கத்தில் உறுதியாக இருப்பதை) இறக்கினான்; அவர்களுக்கு சமீபமான ஒரு வெற்றியையும் அவன் வெகுமதியாக கொடுத்தான். info
التفاسير:

external-link copy
19 : 48

وَّمَغَانِمَ كَثِیْرَةً یَّاْخُذُوْنَهَا ؕ— وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟

இன்னும் அதிகமான கனீமத்துகளை (அவன் அவர்களுக்கு வெகுமதியாக கொடுப்பான்). அவர்கள் அவற்றை பெறுவார்கள். அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
20 : 48

وَعَدَكُمُ اللّٰهُ مَغَانِمَ كَثِیْرَةً تَاْخُذُوْنَهَا فَعَجَّلَ لَكُمْ هٰذِهٖ وَكَفَّ اَیْدِیَ النَّاسِ عَنْكُمْ ۚ— وَلِتَكُوْنَ اٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ وَیَهْدِیَكُمْ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ۙ

அல்லாஹ் உங்களுக்கு அதிகமான கனீமத்துகளை வாக்களித்தான். அவற்றை நீங்கள் பெறுவீர்கள். (அவற்றில்) இதை (-கைபர் யுத்தத்தின் கனீமத் பொருட்களை) அவன் உங்களுக்கு விரைவாக கொடுத்தான். (பிற) மக்களின் கரங்களை உங்களை (விட்டும் உங்கள் குடும்பத்தை) விட்டும் அவன் தடுத்தான். (நம்பிக்கையாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் அல்லாஹ் பாதுகாத்தது) நம்பிக்கையாளர்களுக்கு ஓர் இறை அத்தாட்சியாக இருப்பதற்காகவும் உங்களை நேரான பாதையில் வழி நடத்துவதற்காகவும் (அவன் உங்களை விட்டும் எதிரிகளின் கரங்களை தடுத்து உங்களை பாதுகாத்தான்). info
التفاسير:

external-link copy
21 : 48

وَّاُخْرٰی لَمْ تَقْدِرُوْا عَلَیْهَا قَدْ اَحَاطَ اللّٰهُ بِهَا ؕ— وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرًا ۟

இன்னும் வேறு பல (நாடுகளையும் அவன் உங்களுக்கு வாக்களித்துள்ளான்). (இப்போது நீங்கள்) அவற்றின் மீது (போர் தொடுத்து அவற்றை வெற்றி கொள்ள) நீங்கள் ஆற்றல் பெறவில்லை. அல்லாஹ் அவற்றை (எல்லாம்) திட்டமாக சூழ்ந்திருக்கின்றான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
22 : 48

وَلَوْ قَاتَلَكُمُ الَّذِیْنَ كَفَرُوْا لَوَلَّوُا الْاَدْبَارَ ثُمَّ لَا یَجِدُوْنَ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟

நிராகரிப்பாளர்கள் உங்களிடம் போருக்கு வந்தால் (கண்டிப்பாக) அவர்கள் புறமுதுகு காட்டியிருப்பார்கள். பிறகு, அவர்கள் (தங்களுக்கு) பாதுகாவலரையும் உதவியாளரையும் காண மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
23 : 48

سُنَّةَ اللّٰهِ الَّتِیْ قَدْ خَلَتْ مِنْ قَبْلُ ۖۚ— وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِیْلًا ۟

இதற்கு முன்னர் சென்ற அல்லாஹ்வின் நடைமுறைப்படிதான் (இவர்களுடனும் அல்லாஹ் நடந்து கொண்டான்). அல்லாஹ்வின் நடைமுறைக்கு (எவ்வித) மாற்றத்தை(யும்) நீர் காணமாட்டீர். info
التفاسير: