Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: تەۋبە   ئايەت:
یَحْلِفُوْنَ بِاللّٰهِ لَكُمْ لِیُرْضُوْكُمْ ۚ— وَاللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَحَقُّ اَنْ یُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِیْنَ ۟
9.62. -நம்பிக்கையாளர்களே!- இந்த நயவஞ்சகர்கள் நீங்கள் அவர்களைக் கொண்டு திருப்தியுறுவதற்காக தாங்கள் நபியவர்களைத் துன்புறுத்தும் எதையும் கூறவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றார்கள். இவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் ஈமான் மற்றும் நற்செயல்களைக் கொண்டு அவர்கள் திருப்திப்படுத்துவதற்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகத் தகுதியானவர்களாவர்.
ئەرەپچە تەپسىرلەر:
اَلَمْ یَعْلَمُوْۤا اَنَّهٗ مَنْ یُّحَادِدِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاَنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خَالِدًا فِیْهَا ؕ— ذٰلِكَ الْخِزْیُ الْعَظِیْمُ ۟
9.63. இந்த நயவஞ்சகர்கள் தங்களின் இச்செயல்களின் மூலம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டுள்ளனர் என்பதையும், அவ்வாறு அவ்விருவரையும் எதிர்ப்போர் மறுமை நாளில் நரக நெருப்பில் நுழைந்து அங்கு நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?! அதுவே அவமானமும் பெரும் இழிவுமாகும்.
ئەرەپچە تەپسىرلەر:
یَحْذَرُ الْمُنٰفِقُوْنَ اَنْ تُنَزَّلَ عَلَیْهِمْ سُوْرَةٌ تُنَبِّئُهُمْ بِمَا فِیْ قُلُوْبِهِمْ ؕ— قُلِ اسْتَهْزِءُوْا ۚ— اِنَّ اللّٰهَ مُخْرِجٌ مَّا تَحْذَرُوْنَ ۟
9.64. தங்கள் உள்ளங்களில் மறைத்துவைத்துள்ள நிராகரிப்பை நம்பிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்தும் ஏதேனும் ஒரு அத்தியாயத்தை அல்லாஹ் தனது தூதரின் மீது இறக்கிவிடுவானோ என நயவஞ்சகர்கள் அஞ்சுகிறார்கள். -தூதரே!- நீர் கூறுவீராக: -“நயவஞ்சகர்களே-, நீங்கள் மார்க்கத்தை பரிகாசம் செய்வதையும், குறைகூறுவதையும் தொடருங்கள். நீங்கள் அஞ்சும் விஷயத்தை ஏதேனும் அத்தியாயத்தை இறக்குவதன் மூலமோ அல்லது தன் தூதருக்கு அறிவித்தோ அல்லாஹ் வெளிப்படுத்திவிடுவான்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ لَیَقُوْلُنَّ اِنَّمَا كُنَّا نَخُوْضُ وَنَلْعَبُ ؕ— قُلْ اَبِاللّٰهِ وَاٰیٰتِهٖ وَرَسُوْلِهٖ كُنْتُمْ تَسْتَهْزِءُوْنَ ۟
9.65. -தூதரே!- நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களை குறைகூறி திட்டிக் கொண்டிருந்தது குறித்து அல்லாஹ் உமக்கு அறிவித்த பிறகு, அவர்களிடம் நீர் அது பற்றி நீர் கேட்டால், “நாங்கள் விளையாட்டாகத்தான் பேசிக் கொண்டிருந்தோம். உண்மையாகவல்ல” என்று கூறுகிறார்கள். -தூதரே! நீர் கேட்பீராக-: “அல்லாஹ்வைக் குறித்தும் அவனுடைய வசனங்களைக் குறித்தும் அவனுடைய தூதரைக் குறித்துமா நீங்கள் பரிகாசம் செய்கிறீர்கள்?!
ئەرەپچە تەپسىرلەر:
لَا تَعْتَذِرُوْا قَدْ كَفَرْتُمْ بَعْدَ اِیْمَانِكُمْ ؕ— اِنْ نَّعْفُ عَنْ طَآىِٕفَةٍ مِّنْكُمْ نُعَذِّبْ طَآىِٕفَةًۢ بِاَنَّهُمْ كَانُوْا مُجْرِمِیْنَ ۟۠
9.66. இதுபோன்ற பொய்யான சாக்குப்போக்குகளைக் கூறாதீர்கள். நீங்கள் மறைத்து வைத்திருந்த நிராகரிப்பை பரிகாசத்தின் மூலம் வெளிப்படுத்தி விட்டீர்கள். உங்களில் ஒரு பிரிவினர் தங்களின் நயவஞ்சகத்தனத்தை விட்டு விட்டு உளத் தூய்மையுடன் பாவமன்னிப்புக் கோரியதனால் நாம் அவர்களை மன்னித்தாலும் பாவமன்னிப்புக் கோராமல் நயவஞ்சகத்தில் நிலைத்திருக்கும் பிரிவினரை நாம் தண்டிப்போம்.
ئەرەپچە تەپسىرلەر:
اَلْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ بَعْضُهُمْ مِّنْ بَعْضٍ ۘ— یَاْمُرُوْنَ بِالْمُنْكَرِ وَیَنْهَوْنَ عَنِ الْمَعْرُوْفِ وَیَقْبِضُوْنَ اَیْدِیَهُمْ ؕ— نَسُوا اللّٰهَ فَنَسِیَهُمْ ؕ— اِنَّ الْمُنٰفِقِیْنَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
9.67. நயவஞ்சகர்களான ஆண்களும் பெண்களும் நயவஞ்சகப் பண்புகளில் ஒன்றுபட்டவர்களே. அவர்கள் தீமை செய்யத் தூண்டுகிறார்கள். நன்மையை விட்டும் தடுக்கிறார்கள். தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் கஞ்சத்தனம் செய்கிறார்கள். அல்லாஹ்வுக்கு வழிபடுதை விட்டுவிட்டார்கள். எனவே அல்லாஹ்வும் அவர்களுக்கு உதவுவதை விட்டுவிட்டான். நிச்சயமாக இந்த நயவஞ்சகர்களே அல்லாஹ்வுக்குக் அடிபணியாதவர்கள். சத்தியப் பாதையிலிருந்து பாவம் மற்றும் வழிகேட்டை நோக்கி வெளியேறியவர்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
وَعَدَ اللّٰهُ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— هِیَ حَسْبُهُمْ ۚ— وَلَعَنَهُمُ اللّٰهُ ۚ— وَلَهُمْ عَذَابٌ مُّقِیْمٌ ۟ۙ
9.68. பாவமன்னிப்புக் கோராத நயவஞ்சகர்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் நரக நெருப்பில் நுழைவிப்பதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். இதுவே அவர்களுக்குப் போதுமான தண்டனையாகும். மேலும் அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களைத் தூரமாக்கிவிட்டான். அவர்களுக்கு தொடரான வேதனையுண்டு.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• قبائح المنافقين كثيرة، ومنها الإقدام على الأيمان الكاذبة، ومعاداة الله ورسوله، والاستهزاء بالقرآن والنبي والمؤمنين، والتخوف من نزول سورة في القرآن تفضح شأنهم، واعتذارهم بأنهم هازلون لاعبون، وهو إقرار بالذنب، بل هو عذر أقبح من الذنب.
1. நயவஞ்சகர்களின் கெட்ட பண்புகள் ஏராளமானவை. அவற்றுள் சில: துணிந்து பொய்ச்சத்தியம் செய்வது, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பது, குர்ஆனையும், இறைத்தூதர், நம்பிக்கையாளர்கள் ஆகியோரையும் பரிகாசம் செய்வது, தமது விடயங்கள் அம்பலப்படுத்தும் ஏதேனும் அத்தியாயம் இறங்கிவிடுமோ என்று அஞ்சுவது, வீண் விளையாட்டுக்காகவே செய்தோம் என சாக்குப்போக்குகள் கூறுவது. விளையாட்டுக்காகச் செய்தோம் எனக் காரணம் கூறுவது பாவம் செய்ததை ஏற்றுக்கொள்வதாகும். இவ்வாறு கூறுவது வெறும் பாவத்தை விட மோசமானதாகும்.

• لا يُقبل الهزل في الدين وأحكامه، ويعد الخوض بالباطل في كتاب الله ورسله وصفاته كفرًا.
2. மார்க்க சட்டதிட்டங்கள் விஷயத்தில் பரிகாசம் செய்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. அல்லாஹ்வைக் குறித்தும் அவனுடைய தூதுரைக் குறித்தும் அவனுடைய பண்புகளைக் குறித்தும் பரிகாசம் செய்வது நிராகரிப்பாகவே கருதப்படும்.

• النّفاق: مرض عُضَال متأصّل في البشر، وأصحاب ذلك المرض متشابهون في كل عصر وزمان في الأمر بالمنكر والنّهي عن المعروف، وقَبْض أيديهم وإمساكهم عن الإنفاق في سبيل الله للجهاد، وفيما يجب عليهم من حق.
3. நயவஞ்சகம் மனிதர்களில் வேரூன்றியுள்ள கடுமையான நோயாகும். இந்நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தீமையை ஏவி நன்மையை விட்டும் தடுத்தல், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காகவும் அவர்கள் மீது கடமையானவற்றிற்காகவும் செலவளிக்காது கஞ்சத்தனம் செய்தல் ஆகிய பண்புகளில் ஒத்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.

• الجزاء من جنس العمل، فالذي يترك أوامر الله ويأتي نواهيه يتركه من رحمته.
4. செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயற்படுத்தாமல் விட்டு விட்டு அவன் தடைசெய்தவற்றில் ஈடுபடுவோருக்கு அல்லாஹ்வும் அருள் புரியாது விட்டு விடுகிறான்.

 
مەنالار تەرجىمىسى سۈرە: تەۋبە
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش