Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: تەۋبە   ئايەت:
رَضُوْا بِاَنْ یَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ وَطُبِعَ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَفْقَهُوْنَ ۟
9.87. பின்தங்குவதற்கு தக்க காரணமுடையோருடன் இந்த நயவஞ்சகர்களும் பின்தங்கிவிடுவதை விரும்பியதனால் தங்களுக்கான இழிவையும் அவமானத்தையும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களின் நிராகரிப்பினாலும் நயவஞ்சத்தினாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் முத்திரையிட்டு விட்டான். எனவே தங்களுக்கு எதில் நன்மையுள்ளது என்பதை அவர்களால் அறிந்துகொள்ள முடியாது.
ئەرەپچە تەپسىرلەر:
لٰكِنِ الرَّسُوْلُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ جٰهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ؕ— وَاُولٰٓىِٕكَ لَهُمُ الْخَیْرٰتُ ؗ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
9.88. ஆனால் தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் இவர்களைப் போன்று அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விட்டும் பின்தங்கவில்லை. தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்தார்கள். அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கான கூலி, வெற்றி, போர்ச் செல்வங்கள் போன்ற இவ்வுலகப் பயன்கள் கிடைப்பதும், சுவனத்தில் நுழைந்து தேவையானதைப் பெற்று அஞ்சியவற்றிலிருந்து தப்புவது போன்ற மறுவுலகப் பயன்கள் கிடைப்பதுமாகும்.
ئەرەپچە تەپسىرلەر:
اَعَدَّ اللّٰهُ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟۠
9.89. அல்லாஹ் அவர்களுக்கு சுவனங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கிருப்பார்கள். அழிவு அவர்களை அண்டாது. இந்த வெகுமதியே ஈடிணையற்ற மிகப் பெரிய வெற்றியாகும்.
ئەرەپچە تەپسىرلەر:
وَجَآءَ الْمُعَذِّرُوْنَ مِنَ الْاَعْرَابِ لِیُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ الَّذِیْنَ كَذَبُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ— سَیُصِیْبُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
9.90. மதீனாவிலும் அதைச் சுற்றிலும் இருக்கின்ற நாட்டுப்புற அரபிகள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியாமல் பின்தங்குவதற்காக சாக்குப்போக்குகள் கூறி அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதிகோர வந்தார்கள். மற்றொரு கூட்டத்தினரோ அல்லாஹ் அளித்த வாக்குறுதியின் மீது நம்பிக்கையின்மையினாலும் தூதரை உண்மைப்படுத்தாததனாலும் சாக்குப்போக்குகள்கூட கூறாமல் பின்தங்கிவிட்டார்கள். இவர்களின் இந்த நிராகரிப்பினால் வேதனைமிக்க தண்டனை இவர்களை அடையும்.
ئەرەپچە تەپسىرلەر:
لَیْسَ عَلَی الضُّعَفَآءِ وَلَا عَلَی الْمَرْضٰی وَلَا عَلَی الَّذِیْنَ لَا یَجِدُوْنَ مَا یُنْفِقُوْنَ حَرَجٌ اِذَا نَصَحُوْا لِلّٰهِ وَرَسُوْلِهٖ ؕ— مَا عَلَی الْمُحْسِنِیْنَ مِنْ سَبِیْلٍ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟ۙ
9.91. பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், முதியோர், குருடர்கள், செலவழிப்பதற்கு எதையும் பெறாத ஏழைகள் ஆகியோர் போரை விட்டுப் பின்தங்கியதனால் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஏனெனில் அவர்கள் தக்க காரணங்களைப் பெற்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமிக்கவர்களாகவும், அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். நல்லமுறையில் செயல்படும் உரிய காரணமுடையவர்களான நல்லோர்கள் தண்டனைக்கு உரியோர்களல்ல. நன்மை செய்வோரின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
ئەرەپچە تەپسىرلەر:
وَّلَا عَلَی الَّذِیْنَ اِذَا مَاۤ اَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَاۤ اَجِدُ مَاۤ اَحْمِلُكُمْ عَلَیْهِ ۪— تَوَلَّوْا وَّاَعْیُنُهُمْ تَفِیْضُ مِنَ الدَّمْعِ حَزَنًا اَلَّا یَجِدُوْا مَا یُنْفِقُوْنَ ۟ؕ
9.92. -தூதரே!- தம்மை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வேண்டியவர்களாக உம்மிடம் வந்த போது, நீர், “உங்களுக்குத் தருவதற்கு என்னிடம் எந்த வாகனமும் இல்லையே!” என்று கூறியதனால் போரை விட்டுப் பின்தங்கியவர்கள் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதற்கு உம்மிடமும் தங்களிடமும் எதுவும் இல்லையே என்ற கவலையில் அழுதவர்களாக அவர்கள் உம்மை விட்டு திரும்பிச் சென்றார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
اِنَّمَا السَّبِیْلُ عَلَی الَّذِیْنَ یَسْتَاْذِنُوْنَكَ وَهُمْ اَغْنِیَآءُ ۚ— رَضُوْا بِاَنْ یَّكُوْنُوْا مَعَ الْخَوَالِفِ ۙ— وَطَبَعَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
9.93. தகுந்த காரணமுடையோரைத் தண்டிக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தி விட்டு தண்டனைக்குரியோர் யார் என்பதைக் குறிப்பிடுகிறான். -தூதரே!- போர் புரிவதற்குத் தேவையான வசதிகளைப் பெற்றிருந்தும் போரை விட்டும் பின்தங்குவதற்கு உம்மிடம் அனுமதி கோருபவர்கள்தாம் தண்டனைக்குரியவர்கள். பின்தங்கி வீடுகளில் இருப்போருடன் தங்கியிருப்பதன் மூலம் இழிவையும் அவமானத்தையும் தமக்கு அவர்கள் விரும்பினார்கள். அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். எனவே அவைகள் அறிவுரையால் பயனடையமாட்டா. இவ்வாறு முத்திரையிடப்பட்டதனால் அவர்களால் தங்களுக்கு நன்மையானதை அறிந்து அதனைத் தேர்ந்தெடுக்கவும் முடியாது; தீமையானதை அறிந்து அதிலிருந்து விலகிக் கொள்ளவும் முடியாது.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• المجاهدون سيحصِّلون الخيرات في الدنيا، وإن فاتهم هذا فلهم الفوز بالجنة والنجاة من العذاب في الآخرة.
1. முஜாஹிதுகள் இவ்வுலகிலேயே நன்மைகளைப் பெறுவார்கள். இவ்வுலகில் அவர்களுக்கு அது தவறினாலும் மறுமையில் அவர்களுக்கு சுவன வெற்றியும் மறுமையின் தண்டனையிலிருந்து பாதுகாப்பும் உண்டு.

• الأصل أن المحسن إلى الناس تكرمًا منه لا يؤاخَذ إن وقع منه تقصير.
2. மேலதிகமாக மக்களுக்கு நன்மை செய்பவர்களிடம் ஏற்படும் குறை தண்டனைக்குரியதல்ல என்பதே அடிப்படையாகும்.

• أن من نوى الخير، واقترن بنيته الجازمة سَعْيٌ فيما يقدر عليه، ثم لم يقدر- فإنه يُنَزَّل مَنْزِلة الفاعل له.
3. ஒருவர் நன்மையை உறுதியாக செய்ய நாடி அதற்காக தன்னாலான முயற்சியும் செய்தும் அவரால் அந்த செயலைச் செய்ய முடியவில்லையெனில் அவர் அந்த செயலைச் செய்தவரைப் போன்றே கணக்கிடப்படுவார்.

• الإسلام دين عدل ومنطق؛ لذلك أوجب العقوبة والمأثم على المنافقين المستأذنين وهم أغنياء ذوو قدرة على الجهاد بالمال والنفس.
4. இஸ்லாம் நீதியான தர்க்க ரீதியான மார்க்கமாகும். எனவேதான் செல்வங்களாலும் உயிர்களாலும் போரிடுவதற்கு வசதியும் வலிமையும் இருந்தும் பின்தங்குவதற்கு அனுமதி கேட்கும் நயவஞ்சகர்களுக்கு தண்டனையையும் பாவத்தையும் அது விதியாக்கியுள்ளது.

 
مەنالار تەرجىمىسى سۈرە: تەۋبە
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش