Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ * - تەرجىمىلەر مۇندەرىجىسى

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

مەنالار تەرجىمىسى سۈرە: ئەئراپ   ئايەت:
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَنُخْرِجَنَّكَ یٰشُعَیْبُ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْیَتِنَاۤ اَوْ لَتَعُوْدُنَّ فِیْ مِلَّتِنَا ؕ— قَالَ اَوَلَوْ كُنَّا كٰرِهِیْنَ ۟ۚ
அவருடைய சமுதாயத்தில் பெருமையடித்(து நம்பிக்கையை புறக்கணித்)த முக்கிய பிரமுகர்கள், “ஷுஐபே! உம்மையும் உம்முடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நிச்சயம் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது, நீங்கள் (அனைவரும்) எங்கள் கொள்கைக்கு நிச்சயம் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள். “நாங்கள் (அந்த கொள்கையை தவறு என்று தெரிந்து அதை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று (ஷுஐபு) கூறினார்.
ئەرەپچە تەپسىرلەر:
قَدِ افْتَرَیْنَا عَلَی اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِیْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰىنَا اللّٰهُ مِنْهَا ؕ— وَمَا یَكُوْنُ لَنَاۤ اَنْ نَّعُوْدَ فِیْهَاۤ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ رَبُّنَا ؕ— وَسِعَ رَبُّنَا كُلَّ شَیْءٍ عِلْمًا ؕ— عَلَی اللّٰهِ تَوَكَّلْنَا ؕ— رَبَّنَا افْتَحْ بَیْنَنَا وَبَیْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَاَنْتَ خَیْرُ الْفٰتِحِیْنَ ۟
“உங்கள் கொள்கைக்கு நாங்கள் திரும்பினால் - அல்லாஹ் எங்களை அதிலிருந்து பாதுகாத்த பின்னர் - நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டி(யவர்களாகி) விடுவோம். இன்னும், எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடியே தவிர நாங்கள் அதில் திரும்புவது எங்களால் முடியாது. எங்கள் இறைவன் ஞானத்தால் எல்லாவற்றையும் விட விசாலமானவன். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) இருந்தோம். எங்கள் இறைவா! எங்களுக்கிடையிலும் எங்கள் சமுதாயத்திற்கிடையிலும் நியாயமாக தீர்ப்பளி! நீ தீர்ப்பளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”
ئەرەپچە تەپسىرلەر:
وَقَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ لَىِٕنِ اتَّبَعْتُمْ شُعَیْبًا اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ ۟
அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த முக்கிய பிரமுகர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) “நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் அப்போது நஷ்டவாளிகள்தான்” என்று கூறினார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟
ஆக, அவர்களை (கடும்) நிலநடுக்கம் பிடித்தது. ஆக, அவர்கள் தங்கள் பூமியில் இறந்தவர்களாக காலையை அடைந்தனர்.
ئەرەپچە تەپسىرلەر:
الَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ۛۚ— اَلَّذِیْنَ كَذَّبُوْا شُعَیْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِیْنَ ۟
ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் (அழிந்துபோய்) அதில் வசிக்காதவர்கள்போல் ஆகி விட்டனர். ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் அவர்கள்தான் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ ۚ— فَكَیْفَ اٰسٰی عَلٰی قَوْمٍ كٰفِرِیْنَ ۟۠
ஆக, (ஷுஐப்) அவர்களை விட்டு விலகினார். இன்னும் கூறினார்: “என் சமுதாயமே! என் இறைவனின் தூது செய்திகளை திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துரைத்தேன். இன்னும், உங்களுக்கு உபதேசித்தேன். ஆகவே நிராகரிப்பாளர்களான சமுதாயத்தின் மீது எவ்வாறு நான் துக்கப்படுவேன்.”
ئەرەپچە تەپسىرلەر:
وَمَاۤ اَرْسَلْنَا فِیْ قَرْیَةٍ مِّنْ نَّبِیٍّ اِلَّاۤ اَخَذْنَاۤ اَهْلَهَا بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ یَضَّرَّعُوْنَ ۟
நாம் எந்த ஒரு நபியையும் ஓர் ஊரில் (வசிக்கும் மக்களுக்கு) அனுப்பவில்லை, - அதில் வசிப்பவர்கள் (அந்த தூதரை நிராகரித்தால் அவர்கள்) பணி(ந்து, திருந்தி நம்மிடம் வரு)வதற்காக வறுமையினாலும், நோயினாலும் அவர்களை நாம் பிடித்தே தவிர.
ئەرەپچە تەپسىرلەر:
ثُمَّ بَدَّلْنَا مَكَانَ السَّیِّئَةِ الْحَسَنَةَ حَتّٰی عَفَوْا وَّقَالُوْا قَدْ مَسَّ اٰبَآءَنَا الضَّرَّآءُ وَالسَّرَّآءُ فَاَخَذْنٰهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
பிறகு, துன்பத்தின் இடத்தில் இன்பத்தை மாற்றினோம். இறுதியாக அவர்கள் (எண்ணிக்கை) அதிகரிக்கவே, “எங்கள் மூதாதைகளை நோயும், சுகமும் (இப்படித்தான்) அடைந்திருக்கிறது” என்று கூறினர். ஆகவே, அவர்கள் உணராமல் இருந்த நிலையில் அவர்களைத் திடீரெனப் பிடித்தோம்.
ئەرەپچە تەپسىرلەر:
 
مەنالار تەرجىمىسى سۈرە: ئەئراپ
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ - تەرجىمىلەر مۇندەرىجىسى

شەيخ ئۆمەر شەرىپ ئىبنى ئابدۇسالام تەرجىمىسى.

تاقاش