Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ * - تەرجىمىلەر مۇندەرىجىسى

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

مەنالار تەرجىمىسى سۈرە: ئەئراپ   ئايەت:
حَقِیْقٌ عَلٰۤی اَنْ لَّاۤ اَقُوْلَ عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ— قَدْ جِئْتُكُمْ بِبَیِّنَةٍ مِّنْ رَّبِّكُمْ فَاَرْسِلْ مَعِیَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
“அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) நான் கூறாமலிருப்பதற்கு (நான்) பேராசை உள்ளவன் (அதற்கு முழுமையான தகுதியுள்ளவன்). உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உங்களிடம் திட்டமாக கொண்டு வந்துவிட்டேன். ஆகவே, இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை.”
ئەرەپچە تەپسىرلەر:
قَالَ اِنْ كُنْتَ جِئْتَ بِاٰیَةٍ فَاْتِ بِهَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
(ஃபிர்அவ்ன்) கூறினான்: “நீர் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருந்தால், நீர் உண்மையாளர்களில் இருந்தால் (எங்களிடம்) அதைக் கொண்டு வாரீர்!”
ئەرەپچە تەپسىرلەر:
فَاَلْقٰی عَصَاهُ فَاِذَا هِیَ ثُعْبَانٌ مُّبِیْنٌ ۟ۚۖ
ஆக, (மூஸா) தன் தடியை எறிந்தார். அப்போது, அது தெளிவான பெரிய பாம்பாக ஆகியது.
ئەرەپچە تەپسىرلەر:
وَّنَزَعَ یَدَهٗ فَاِذَا هِیَ بَیْضَآءُ لِلنّٰظِرِیْنَ ۟۠
இன்னும், அவர் தன் கையை (சட்டைப் பையிலிருந்து) வெளியில் எடுத்தார். அப்போது, பார்ப்பவர்களுக்கு அது மிக வெண்மையானதாக மாறி இருந்தது..
ئەرەپچە تەپسىرلەر:
قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِیْمٌ ۟ۙ
ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக இவர் (மந்திரத்தை) கற்றறிந்த (திறமையான) சூனியக்காரர்.”
ئەرەپچە تەپسىرلەر:
یُّرِیْدُ اَنْ یُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ ۚ— فَمَاذَا تَاْمُرُوْنَ ۟
“இவர் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற நாடுகிறார். ஆகவே, (எனக்கு) என்ன யோசனை கூறுகிறீர்கள்?” (என்று ஃபிர்அவ்ன் தனது சபையோரிடம் கேட்டான்).
ئەرەپچە تەپسىرلەر:
قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَاَرْسِلْ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۙ
அவர்கள் கூறினார்கள்: “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடு! இன்னும், நகரங்களில் (சூனியக்காரர்களை) ஒன்றுதிரட்டி கொண்டுவருபவர்(களான காவலாளி)களை அனுப்பிவை!”
ئەرەپچە تەپسىرلەر:
یَاْتُوْكَ بِكُلِّ سٰحِرٍ عَلِیْمٍ ۟
“அவர்கள் கற்றறிந்த சூனியக்காரர் எல்லோரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்.”
ئەرەپچە تەپسىرلەر:
وَجَآءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوْۤا اِنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِیْنَ ۟
சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். இன்னும் கூறினார்கள்: “நாங்களே (மூஸாவை மிகைத்து) வெற்றி பெற்றவர்களாக ஆகிவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) கூலி திட்டமாக உண்டு அல்லவா?”
ئەرەپچە تەپسىرلەر:
قَالَ نَعَمْ وَاِنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِیْنَ ۟
(ஃபிர்அவ்ன்) கூறினான்: “ஆம்! (வெகுமதி உண்டு.) இன்னும், நிச்சயமாக நீங்கள் (என் அரசவையில் எனக்கு) நெருக்கமானவர்களில் இருப்பீர்கள்.”
ئەرەپچە تەپسىرلەر:
قَالُوْا یٰمُوْسٰۤی اِمَّاۤ اَنْ تُلْقِیَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ نَحْنُ الْمُلْقِیْنَ ۟
(சூனியக்காரர்கள்) கூறினார்கள்: “மூஸாவே! (முதலில் தடியை) நீர் எறிகிறீரா? அல்லது நாங்களே (முதலில்) எறிபவர்களாக இருக்கவா?”
ئەرەپچە تەپسىرلەر:
قَالَ اَلْقُوْا ۚ— فَلَمَّاۤ اَلْقَوْا سَحَرُوْۤا اَعْیُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَآءُوْ بِسِحْرٍ عَظِیْمٍ ۟
“(நீங்கள்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். ஆக, அவர்கள் எறிந்தபோது மக்களுடைய கண்களை மயக்கினார்கள். இன்னும், அவர்களை திடுக்கிடச் செய்தனர். இன்னும், ஒரு பெரிய சூனியத்தை செய்து காட்டினர்.
ئەرەپچە تەپسىرلەر:
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَلْقِ عَصَاكَ ۚ— فَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْنَ ۟ۚ
“நீர் உம் தடியை எறிவீராக” என்று மூஸாவிற்கு வஹ்யி அறிவித்தோம். (அவர் எறியவே) அப்போது அது அவர்கள் போலியாக செய்தவற்றை விழுங்கி விட்டது.
ئەرەپچە تەپسىرلەر:
فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟ۚ
ஆக, உண்மை (உறுதியாக) நிகழ்ந்தது. அவர்கள் செய்து கொண்டிருந்த (சூனியமான)து பொய்ப்பித்து விட்டது (-செயலற்றதாக ஆகிவிட்டது).
ئەرەپچە تەپسىرلەر:
فَغُلِبُوْا هُنَالِكَ وَانْقَلَبُوْا صٰغِرِیْنَ ۟ۚ
ஆக, அவர்கள் அங்கே தோற்கடிக்கப்பட்டனர். இன்னும், (ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும்) தாழ்ந்தவர்களாக (-சிறுமைப்பட்டவர்களாக இழிவானவர்களாக மைதானத்தை விட்டு) திரும்பினர்.
ئەرەپچە تەپسىرلەر:
وَاُلْقِیَ السَّحَرَةُ سٰجِدِیْنَ ۟ۙ
சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக தள்ளப்பட்டனர்.
ئەرەپچە تەپسىرلەر:
 
مەنالار تەرجىمىسى سۈرە: ئەئراپ
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ - تەرجىمىلەر مۇندەرىجىسى

شەيخ ئۆمەر شەرىپ ئىبنى ئابدۇسالام تەرجىمىسى.

تاقاش