قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

بەت نومۇرى:close

external-link copy
154 : 2

وَلَا تَقُوْلُوْا لِمَنْ یُّقْتَلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ— بَلْ اَحْیَآءٌ وَّلٰكِنْ لَّا تَشْعُرُوْنَ ۟

அல்லாஹ்வுடைய பாதையில் (எதிரிகளால்) கொல்லப்படுபவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிருள்ளவர்கள். எனினும், (நீங்கள்) அறியமாட்டீர்கள். info
التفاسير:

external-link copy
155 : 2

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ ؕ— وَبَشِّرِ الصّٰبِرِیْنَ ۟ۙ

பயம், பசியைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள், விளைச்சல்களில் (சிறிது) நஷ்டத்தைக் கொண்டும் நிச்சயமாக உங்களைச் சோதிப்போம். (நபியே!) பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! info
التفاسير:

external-link copy
156 : 2

الَّذِیْنَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌ ۙ— قَالُوْۤا اِنَّا لِلّٰهِ وَاِنَّاۤ اِلَیْهِ رٰجِعُوْنَ ۟ؕ

அவர்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் "நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்புகிறவர்கள்" எனக் கூறுவார்கள். info
التفاسير:

external-link copy
157 : 2

اُولٰٓىِٕكَ عَلَیْهِمْ صَلَوٰتٌ مِّنْ رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۫— وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُهْتَدُوْنَ ۟

அவர்கள் மீதுதான் அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்புகளும் கருணையும் இறங்குகின்றன. இன்னும், அவர்கள்தான் நேர்வழிபெற்றவர்கள். info
التفاسير:

external-link copy
158 : 2

اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآىِٕرِ اللّٰهِ ۚ— فَمَنْ حَجَّ الْبَیْتَ اَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَیْهِ اَنْ یَّطَّوَّفَ بِهِمَا ؕ— وَمَنْ تَطَوَّعَ خَیْرًا ۙ— فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِیْمٌ ۟

நிச்சயமாக ஸஃபா, மர்வா (மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. ஆகவே, கஅபாவை ஹஜ்ஜு அல்லது உம்றா செய்பவர் அவ்விரண்டையும் சுற்றி வருவது அவர் மீது அறவே குற்றமில்லை. எவர் நன்மையை உபரியாகச் செய்தாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றி பாராட்டுபவன், நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
159 : 2

اِنَّ الَّذِیْنَ یَكْتُمُوْنَ مَاۤ اَنْزَلْنَا مِنَ الْبَیِّنٰتِ وَالْهُدٰی مِنْ بَعْدِ مَا بَیَّنّٰهُ لِلنَّاسِ فِی الْكِتٰبِ ۙ— اُولٰٓىِٕكَ یَلْعَنُهُمُ اللّٰهُ وَیَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَ ۟ۙ

தெளிவான சான்றுகள் இன்னும் நேர்வழியிலிருந்து நாம் இறக்கி, அவற்றை மக்களுக்காக வேதத்தில் நாம் தெளிவுபடுத்திய பின்னர் எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
160 : 2

اِلَّا الَّذِیْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَیَّنُوْا فَاُولٰٓىِٕكَ اَتُوْبُ عَلَیْهِمْ ۚ— وَاَنَا التَّوَّابُ الرَّحِیْمُ ۟

எவர்கள் மன்னிப்புக்கோரி, சீர்திருத்தி, (தாங்கள் மறைத்ததை) தெளிவுபடுத்தினார்களோ அவர்களைத் தவிர. அவர்களை மன்னிப்பேன். நான் மகா மன்னிப்பாளன்; மகா கருணையாளன். info
التفاسير:

external-link copy
161 : 2

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ اُولٰٓىِٕكَ عَلَیْهِمْ لَعْنَةُ اللّٰهِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟ۙ

எவர்கள் நிராகரித்து, அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தார்களோ, அவர்கள் மீதுதான் அல்லாஹ், வானவர்கள், மக்கள் (ஆகிய) அனைவரின் சாப(மு)ம் உண்டாகிறது. info
التفاسير:

external-link copy
162 : 2

خٰلِدِیْنَ فِیْهَا ۚ— لَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟

அ(ச்சாபத்)தில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். (மறுமையில்) அவர்களை விட்டு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் (மன்னிப்புக்கோர) அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
163 : 2

وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِیْمُ ۟۠

(மனிதர்களே!) உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவனே. பேரருளாளன், பேரன்பாளன் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் (வேறு யாரும்) அறவே இல்லை. info
التفاسير: