Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ آیت: (15) سورت: یونس
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیَاتُنَا بَیِّنٰتٍ ۙ— قَالَ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا ائْتِ بِقُرْاٰنٍ غَیْرِ هٰذَاۤ اَوْ بَدِّلْهُ ؕ— قُلْ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اُبَدِّلَهٗ مِنْ تِلْقَآئِ نَفْسِیْ ۚ— اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ ۚ— اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
10.15. அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய குர்ஆனின் தெளிவான வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் நற்கூலியை விரும்பாத, தண்டனையை அஞ்சாத மறுமையை மறுப்பவர்கள், -“முஹம்மதே!- சிலை வணக்கத்தைக் குறைகூறும் இந்தக் குர்ஆன் அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டுவாரும். அல்லது எங்களின் மனவிருப்பங்களுக்கு உடன்படும் விதத்தில் இதில் சிலதை அல்லது முழுதையும் மாற்றிவிடுவீராக” என்று கூறுகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என்னால் மாற்றவே முடியாது -என்றிருக்கும் பொழுது- வேறொன்றை என்னால் கொண்டு வருவதும் சாத்தியமற்றதாகும். மாறாக அல்லாஹ்வே தான் நாடியதை மாற்றுகிறான். எனக்கு அல்லாஹ் அறிவிப்பதையே நான் பின்பற்றுகிறேன். நான் உங்களின் கோரிக்கையை ஏற்று அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் மிகப் பெரும் நாளான மறுமை நாளின் வேதனையை அஞ்சுகிறேன்.”
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• عظم الافتراء على الله والكذب عليه وتحريف كلامه كما فعل اليهود بالتوراة.
1. யூதர்கள் தவ்ராத்தை திரித்தது போல அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டி பொய்யுரைத்து அவனது வார்த்தையைத் திரிவுபடுத்துவது மாபெரும் தவறாகும்.

• النفع والضر بيد الله عز وجل وحده دون ما سواه.
2. பலனளிப்பதும் தீங்கிழைப்பதும் அல்லாஹ்வின் கைவசம் மாத்திரமே உள்ளது. அவனைத் தவிர வேறு யாாிடமும் இல்லை.

• بطلان قول المشركين بأن آلهتهم تشفع لهم عند الله.
3. தங்களின் சிலைகள் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்ற இணைவைப்பாளர்களின் வாதம் தவறானதாகும்.

• اتباع الهوى والاختلاف على الدين هو سبب الفرقة.
4. மனஇச்சையைப் பின்பற்றுவதும் மார்க்கத்தில் கருத்து வேறுபாடு கொள்வதும் பிரிவினைக்கான காரணங்களாகும்.

 
معانی کا ترجمہ آیت: (15) سورت: یونس
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں