Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: کہف   آیت:
وَاِذِ اعْتَزَلْتُمُوْهُمْ وَمَا یَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ فَاْوٗۤا اِلَی الْكَهْفِ یَنْشُرْ لَكُمْ رَبُّكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَیُهَیِّئْ لَكُمْ مِّنْ اَمْرِكُمْ مِّرْفَقًا ۟
18.16. நீங்கள் உங்கள் சமூகத்தை விட்டு ஒதுங்கி, அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கும் தெய்வங்களை விட்டு விட்டு அவனை மட்டுமே வணங்கிய போது உங்கள் மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த குகையில் சென்று தஞ்சமடையுங்கள். உங்கள் இறைவன் தன் அருளினால் எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வான். உங்களின் சமூகத்தினரிடையே வாழ்ந்த வாழ்க்கைக்குப் பகரமாக உங்களுக்குப் பயனுள்ளவாறு உங்கள் காரியங்களை எளிதாக்கித் தருவான்.
عربی تفاسیر:
وَتَرَی الشَّمْسَ اِذَا طَلَعَتْ تَّزٰوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْیَمِیْنِ وَاِذَا غَرَبَتْ تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِیْ فَجْوَةٍ مِّنْهُ ؕ— ذٰلِكَ مِنْ اٰیٰتِ اللّٰهِ ؕ— مَنْ یَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ ۚ— وَمَنْ یُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهٗ وَلِیًّا مُّرْشِدًا ۟۠
18.17. அவர்கள் தங்களுக்கு கட்டளையிடப்பட்டதை செயல்படுத்தினார்கள். அல்லாஹ் அவர்களை தூங்க வைத்தான். எதிரிகளிடமிருந்து அவர்களைப் பாதுகாத்தான். -அவர்களை பார்க்கக்கூடியவரே!- சூரியன் கிழக்கிலிருந்து உதிக்கும் போது அது அவர்களின் குகையைவிட்டு அதிலே நுழைபவருக்கு வலப்பக்கமாகச் சாய்வதையும் அது மறையும்போது அவர்கள் மீது விழாமல் இடப்பக்கமாகச் சாய்வதையும் காண்பீர். அவர்கள் நிரந்தர நிழலில் இருந்தார்கள். சூரிய வெப்பம் அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள் குகையில் அவர்களுக்குத் தேவையான காற்றுக் கிடைக்குமளவு விசாலமான இடத்தில் இருந்தார்கள். குகையில் அவர்கள் தஞ்சமடைந்தது, அங்கு அவர்கள் மீது தூக்கம் சாட்டப்பட்டது, சூரியன் அவர்கள் மீது விழாமல் இருந்தது, விசாலமான இடத்தைப் பெற்றது, தங்கள் சமூகத்தவரிடமிருந்து தப்பித்தது ஆகியவை அனைத்தும் அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய ஆச்சரியமான சான்றுகளாகும். அல்லாஹ் யாருக்கு நேரான வழியைக் காட்டினானோ அவரே உண்மையில் நேர்வழி பெற்றவராவார். அவன் யாரைக் கைவிட்டு வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு நேரான வழியைக்காட்டும் எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர். ஏனெனில் நேர்வழி அளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அது வேறு எவரிடத்திலும் இல்லை.
عربی تفاسیر:
وَتَحْسَبُهُمْ اَیْقَاظًا وَّهُمْ رُقُوْدٌ ۖۗ— وَّنُقَلِّبُهُمْ ذَاتَ الْیَمِیْنِ وَذَاتَ الشِّمَالِ ۖۗ— وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَیْهِ بِالْوَصِیْدِ ؕ— لَوِ اطَّلَعْتَ عَلَیْهِمْ لَوَلَّیْتَ مِنْهُمْ فِرَارًا وَّلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا ۟
18.18. -அவர்களைப் பார்க்கக்கூடியவரே!- அவர்களின் கண்கள் திறந்திருப்பதால் நீர் அவர்கள் விழித்திருக்கிறார்கள் என்றே எண்ணுவீர். உண்மையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மண் அவர்களின் உடலைத் தின்றுவிடாமல் இருக்க நாம் அவர்களை வலதுபுறமும் இடதுபுறமும் புரட்டிக்கொண்டே இருக்கின்றோம். அவர்களின் நாய் குகையின் நுழைவாயிலில் தன் முன்னங்கால்களை நீட்டியவாறு உள்ளது. நீர் அவர்களை எட்டிப் பார்த்தால் பயந்து அவர்களை விட்டு பின்வாங்கி ஓடிவிடுவீர். உம் உள்ளம் அவர்களை கண்டு பயத்தால் நிரம்பி விடும்.
عربی تفاسیر:
وَكَذٰلِكَ بَعَثْنٰهُمْ لِیَتَسَآءَلُوْا بَیْنَهُمْ ؕ— قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ ؕ— قَالُوْا لَبِثْنَا یَوْمًا اَوْ بَعْضَ یَوْمٍ ؕ— قَالُوْا رَبُّكُمْ اَعْلَمُ بِمَا لَبِثْتُمْ ؕ— فَابْعَثُوْۤا اَحَدَكُمْ بِوَرِقِكُمْ هٰذِهٖۤ اِلَی الْمَدِیْنَةِ فَلْیَنْظُرْ اَیُّهَاۤ اَزْكٰی طَعَامًا فَلْیَاْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ  وَلَا یُشْعِرَنَّ بِكُمْ اَحَدًا ۟
18.19. நாம் குறிப்பிட்ட வியக்கத்தக்க நம்முடைய வல்லமைகளை அவர்கள் விடயத்தில் நிகழ்த்தியது போன்று நீண்ட காலத்திற்குப் பிறகு நாம் அவர்களை எழுப்பினோம், அவர்கள் ஒருவருக்கொருவர் தூக்கத்தில் கழித்த காலத்தைப் பற்றி விசாரிப்பதற்காக. அவர்களில் சிலர் கூறினார்கள்: “நாம் ஒரு நாளோ அதற்கு குறைவான நாளோ தூங்கியவாறு கழித்திருப்போம்.” அவர்கள் தங்கியிருந்த காலத்தை சரியாக கணிக்க முடியாத சிலர் கூறினார்கள்: “நீங்கள் தூங்கியவாறு தங்கியிருந்த காலத்தை உங்கள் இறைவனே நன்கறிந்தவன். எனவே இதுகுறித்த விஷயத்தை அவனிடமே ஒப்படைத்துவிடுங்கள். உங்களுக்குச் சம்பந்தமுள்ளவற்றில் ஈடுபடுங்கள். இந்த வெள்ளி நாணயங்களைக்கொண்டு நம்முடைய நமது நகரத்திற்கு உங்களில் ஒருவரை அனுப்புங்கள். அவர், தூய்மையான, நல்ல உழைப்புடையவரிடமுள்ள உணவைப் பார்த்து வாங்கிவரட்டும். அவர் அங்கு செல்லும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் கொடுக்கல் வாங்கல் செய்யும் போதும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளட்டும். விவேகமாக நடந்து கொள்ளட்டும். எவரும் உங்களின் இடத்தை அறியவிடவேண்டாம். ஏனெனில் அதனால் பாரிய தீங்குகள் ஏற்படும்.
عربی تفاسیر:
اِنَّهُمْ اِنْ یَّظْهَرُوْا عَلَیْكُمْ یَرْجُمُوْكُمْ اَوْ یُعِیْدُوْكُمْ فِیْ مِلَّتِهِمْ وَلَنْ تُفْلِحُوْۤا اِذًا اَبَدًا ۟
18.20. உங்களின் சமூகத்தினர் நீங்கள் இருக்கும் இடத்தை அறிந்து உங்களைக் கண்டுபிடித்தால் கல்லால் எறிந்து உங்களைக் கொன்றுவிடுவார்கள் அல்லது உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிந்து சத்திய மார்க்கத்தின்பால் நேர்வழி பெறுவதற்கு முன்னர் இருந்த அவர்களின் வழிகெட்ட மார்க்கத்தின்பால் உங்களைத் திருப்பி விடுவார்கள். நீங்கள் அதனை மீண்டும் ஏற்றுக்கொண்டால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. மாறாக அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய சத்தியத்தை விட்டுவிட்டு அவர்களின் வழிகெட்ட மார்க்கத்தின்பால் திரும்பியதனால் ஈருலகிலும் பெரும் இழப்பிற்குள்ளாகி விடுவீர்கள்.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• من حكمة الله وقدرته أن قَلَّبهم على جنوبهم يمينًا وشمالًا بقدر ما لا تفسد الأرض أجسامهم، وهذا تعليم من الله لعباده.
1. அல்லாஹ்வின் ஞானத்திலும் அவனது வல்லமையிலும் உள்ளதுதான் பூமி அவர்களின் உடல்களைக் கெடுத்துவிடாமலிருக்கும் அளவுக்கு அவன் வலதுபுறமும் இடதுபுறமும் அவர்களின் உடல்களை புரட்டிக்கொண்டே இருந்தான். இது அல்லாஹ் தன் அடியார்களுக்குக் கற்பிக்கும் போதனையாகும்.

• جواز اتخاذ الكلاب للحاجة والصيد والحراسة.
2. தேவைக்காகவும், வேட்டையாடுவதற்காகவும், பாதுகாப்புப் பணிக்காகவும் நாய்களைப் பயன்படுத்தலாம்.

• انتفاع الإنسان بصحبة الأخيار ومخالطة الصالحين حتى لو كان أقل منهم منزلة، فقد حفظ ذكر الكلب لأنه صاحَبَ أهل الفضل.
3. மனிதன் நல்லவர்களின் தொடர்பால், அவர்களோடு சேர்ந்து இருப்பதால் பயனடைகிறான். அவர்களை விட அவன் அந்தஸ்தில் குறைவானவனாக இருந்தாலும் சரியே. எனவேதான் நல்லவர்களுடன் இருந்த நாயைப் பற்றிய குறிப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

• دلت الآيات على مشروعية الوكالة، وعلى حسن السياسة والتلطف في التعامل مع الناس.
4. பொறுப்பாளராக நியமித்தல் சட்டபூர்வமானது, மக்களுடன் நல்லமுறையிலும் மிருதுவாகவும் நடந்துகொள்ளவேண்டும் என்பவற்றுக்கு மேலுள்ள வசனங்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.

 
معانی کا ترجمہ سورت: کہف
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں