قرآن کریم کے معانی کا ترجمہ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ آیت: (184) سورت: سورۂ بقرہ
اَیَّامًا مَّعْدُوْدٰتٍ ؕ— فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِیْضًا اَوْ عَلٰی سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَیَّامٍ اُخَرَ ؕ— وَعَلَی الَّذِیْنَ یُطِیْقُوْنَهٗ فِدْیَةٌ طَعَامُ مِسْكِیْنٍ ؕ— فَمَنْ تَطَوَّعَ خَیْرًا فَهُوَ خَیْرٌ لَّهٗ ؕ— وَاَنْ تَصُوْمُوْا خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
2.184. வருடத்தில் சில நாட்களே உங்கள்மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் நோன்பு நோற்க முடியாத நோயாளியாகவோ, பயணம் செய்யக்கூடியவராகவோ இருந்தால் அந்த நாட்களில் நோன்பு நோற்காமல் மற்ற நாட்களில் விட்டவற்றை கணக்கிட்டு நோற்றுக் கொள்ளட்டும். நோன்பு நோற்க சக்திபெற்றவர் நோன்பு நோற்கவில்லையெனில் அதற்குரிய பரிகாரத்தை அளித்துவிடட்டும். அது நோன்பை விடுகின்ற ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளித்தலாகும். நீங்கள் நோன்பின் சிறப்புகளை அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்காமல் பரிகாரம் வழங்குவதை விட நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இது அல்லாஹ் முதல் கட்டமாக நோன்பை விதியாக்கிய நேரத்தில் இருந்த சட்டமாகும். அதாவது விரும்பியவர் நோன்பு நோற்கலாம், விரும்பியவர் நோன்பை விட்டுவிட்டு அதற்குப் பகரமாக உணவளிக்கலாம். பின்னர் அல்லாஹ் வயதுவந்த சக்தியுள்ள அனைவரின்மீதும் நோன்பு நோற்பதை கடமையாக்கினான்.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• فَضَّلَ الله شهر رمضان بجعله شهر الصوم وبإنزال القرآن فيه، فهو شهر القرآن؛ ولهذا كان النبي صلى الله عليه وسلم يتدارس القرآن مع جبريل في رمضان، ويجتهد فيه ما لا يجتهد في غيره.
1. குர்ஆனை இறக்கி நோன்பை விதியாக்கி அல்லாஹ் ரமலான் மாதத்தை சிறப்பித்துள்ளான். இது குர்ஆனுடைய மாதமாகும். எனவேதான் நபியவர்கள் இந்த மாதத்தில் ஜீப்ரீலுடன் சேர்ந்து குர்ஆனைப் படிப்பவர்களாக இருந்தார்கள். ஏனைய மாதங்களில் செய்யாதளவு அதிக வணக்கங்களில் இந்த மாதத்தில் ஈடுபடுவார்கள்.

• شريعة الإسلام قامت في أصولها وفروعها على التيسير ورفع الحرج، فما جعل الله علينا في الدين من حرج.
2. இஸ்லாமிய அடிப்படைகளும் கிளைச்சட்டங்களும் இலகுபடுத்தலையும் மற்றும் சங்கடங்களை அகற்றுவதையும் அடிப்படையாகக்கொண்டே அமைந்துள்ளன. அல்லாஹ் இந்த மார்க்கத்தில் நமக்கு எந்த சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை.

• قُرْب الله تعالى من عباده، وإحاطته بهم، وعلمه التام بأحوالهم؛ ولهذا فهو يسمع دعاءهم ويجيب سؤالهم.
3. அல்லாஹ் தன் அடியார்களுக்கு மிக நெருக்கமாக அவர்களைச் சூழ்ந்துள்ளான். மேலும் அவர்களது விடயங்களை நுணுக்கமாக அறிந்து வைத்துள்ளான். எனவேதான் அவர்களது பிரார்த்தனையை செவியேற்று அவர்களது வேண்டுதலுக்கு பதிலளிக்கின்றான்.

 
معانی کا ترجمہ آیت: (184) سورت: سورۂ بقرہ
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - ترجمے کی لسٹ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

بند کریں