Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ آیت: (283) سورت: بقرہ
وَاِنْ كُنْتُمْ عَلٰی سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ ؕ— فَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْیُؤَدِّ الَّذِی اؤْتُمِنَ اَمَانَتَهٗ وَلْیَتَّقِ اللّٰهَ رَبَّهٗ ؕ— وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ؕ— وَمَنْ یَّكْتُمْهَا فَاِنَّهٗۤ اٰثِمٌ قَلْبُهٗ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟۠
2.283. நீங்கள் பயணத்தில் இருந்து கடன் பத்திரத்தை உங்களுக்காக எழுதக்கூடியவரைப் பெற்றுக்கொள்ளவில்லையெனில் கடனாளி கடனளிப்பவருக்கு அடமானமாக எதையாவது கொடுக்கட்டும். கடனை நிறைவேற்றும் வரை அவருக்கு அது உத்தரவாதமாக அமையும். நீங்கள் ஒருவர் மற்றவரை நம்பினால் எழுதவோ சாட்சியோ அடமானமோ தேவையில்லை. அச்சமயத்தில் கடனைப் பெற்றவரின் பொறுப்பில் அமானிதமாக அது இருக்கும். அதனை முழுமையாக நிறைவேற்றுவது அவர் மீது கடமையாகிவிடுகிறது. இந்த அமானிதத்தில் அவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதிலிருந்து எதையும் மறுத்துவிட வேண்டாம். அவ்வாறு மறுத்தால் சாட்சியாளர்கள் சாட்சியத்தை மறைக்காது அதனை நிறைவேற்றிவிட வேண்டும். சாட்சியை மறைப்பவரின் உள்ளம் பாவியின் உள்ளமாகும். நீங்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• جواز أخذ الرهن لضمان الحقوق في حال عدم القدرة على توثيق الحق، إلا إذا وَثِقَ المتعاملون بعضهم ببعض.
1. கடனை எழுதிவைத்துக் கொள்ள முடியவில்லையெனில் உரிமைகளின் உத்தரவாதத்திற்காக அடமானப் பொருளைப் பெற்றுக் கொள்ளலாம். ஒருவர் மற்றவரை நம்பினால் அடமானமாகவும் எதையும் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை.

• حرمة كتمان الشهادة وإثم من يكتمها ولا يؤديها.
2. சாட்சியத்தை மறைக்கக்கூடாது. சாட்சியத்தை மறைப்பது பாவமாகும்.

• كمال علم الله تعالى واطلاعه على خلقه، وقدرته التامة على حسابهم على ما اكتسبوا من أعمال.
3. படைப்புகளைக் குறித்த அனைத்து விஷயங்களையும் அல்லாஹ் முழுமையாக அறிவான். அவர்களது செயல்களை விசாரணை செய்வதற்கும் அவன் முழு ஆற்றலுடையவன்.

• تقرير أركان الإيمان وبيان أصوله.
ஈமானின் தூண்களை உறுதிப்படுத்தி அதன் அடிப்படைகளைத் தெளிவுபடுத்தல்

• قام هذا الدين على اليسر ورفع الحرج والمشقة عن العباد، فلا يكلفهم الله إلا ما يطيقون، ولا يحاسبهم على ما لا يستطيعون.
5. மார்க்கம் இலகுவானது. அதில் அடியார்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் எந்த ஒன்றும் இல்லை. அவர்களால் தாங்க முடியாததை அல்லாஹ் அவர்கள் மீது சாட்டுதுமில்லை. அவர்களால் செய்ய ஆற்றலில்லாதவற்றுக்கு அவன் அவர்களிடம் கணக்குக் கேட்பதுமில்லை.

 
معانی کا ترجمہ آیت: (283) سورت: بقرہ
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں