Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: نساء   آیت:
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— لَیَجْمَعَنَّكُمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَا رَیْبَ فِیْهِ ؕ— وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِیْثًا ۟۠
4.87. உண்மையாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை. அவன் உங்களில் முதலாமவர், இறுதியானவர் என அனைவரையும் நீங்கள் செய்த செயல்களுக்குக் கூலி வழங்குவதற்காக எவ்வித சந்தேகமுமற்ற மறுமைநாளில் ஒன்றுதிரட்டுவான். அல்லாஹ்வைவிட உண்மை பேசுபவன் வேறுயாரும் இல்லை.
عربی تفاسیر:
فَمَا لَكُمْ فِی الْمُنٰفِقِیْنَ فِئَتَیْنِ وَاللّٰهُ اَرْكَسَهُمْ بِمَا كَسَبُوْا ؕ— اَتُرِیْدُوْنَ اَنْ تَهْدُوْا مَنْ اَضَلَّ اللّٰهُ ؕ— وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِیْلًا ۟
4.88. நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு என்னவாயிற்று? நீங்கள் நயவஞ்சகர்களின் விஷயத்தில் இரு பிரிவினராகி விட்டீர்களே? உங்களில் ஒரு பிரிவினர் அந்த நயவஞ்சகர்கள் நிராகரித்துவிட்டதால் அவர்களுடன் போர் புரிய வேண்டும் என்று கூறுகின்றனர். மற்றொரு பிரிவினர் அவர்கள் ஈமான் கொண்டுள்ளதால் அவர்களை விட்டுவிட வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களின் விவகாரங்களில் கருத்துவேறுபாடு கொள்வது உங்களுக்கு உகந்ததல்ல. அவர்களின் செயல்களினால் அல்லாஹ் அவர்களை நிராகரிப்பின் பக்கமும் வழிகேட்டின் பக்கமும் திருப்பிவிட்டான். அல்லாஹ் யாருக்கு நேர்வழிகாட்டவில்லையோ அவர்களுக்கு நீங்கள் நேர்வழிகாட்ட நாடுகிறீர்களா? அல்லாஹ் யாரை வழிகெடுத்துவிட்டானோ அவருக்கு யாராலும் நேர்வழிகாட்ட முடியாது.
عربی تفاسیر:
وَدُّوْا لَوْ تَكْفُرُوْنَ كَمَا كَفَرُوْا فَتَكُوْنُوْنَ سَوَآءً فَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ اَوْلِیَآءَ حَتّٰی یُهَاجِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ— فَاِنْ تَوَلَّوْا فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَیْثُ وَجَدْتُّمُوْهُمْ ۪— وَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟ۙ
4.89. நயவஞ்சகர்கள் நிராகரித்ததுபோல நீங்கள் உங்களுக்கு இறக்கப்பட்டதை நிராகரித்து நீங்களும் அவர்களும் நிராகரிப்பில் சமமாகிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கைகொண்டார்கள் என்பதற்கு ஆதாரமாக அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் இணைவைப்பு நாட்டிலிருந்து இஸ்லாமிய நாடுகளுக்கு புலம்பெயரும்வரை அவர்களை அவர்களின் விரோதத்தினால் நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் இதனைப் புறக்கணித்து தமது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் நீடித்தால் அவர்களைக் கண்ட இடத்தில் பிடித்து அவர்களைக் கொன்றுவிடுங்கள். உங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பாளர்களாகவோ உங்களின் எதிரிகளுக்கு எதிராக உதவும் உதவியாளர்களாகவோ அவர்களை ஆக்கிவிடாதீர்கள்.
عربی تفاسیر:
اِلَّا الَّذِیْنَ یَصِلُوْنَ اِلٰی قَوْمٍ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ اَوْ جَآءُوْكُمْ حَصِرَتْ صُدُوْرُهُمْ اَنْ یُّقَاتِلُوْكُمْ اَوْ یُقَاتِلُوْا قَوْمَهُمْ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ لَسَلَّطَهُمْ عَلَیْكُمْ فَلَقٰتَلُوْكُمْ ۚ— فَاِنِ اعْتَزَلُوْكُمْ فَلَمْ یُقَاتِلُوْكُمْ وَاَلْقَوْا اِلَیْكُمُ السَّلَمَ ۙ— فَمَا جَعَلَ اللّٰهُ لَكُمْ عَلَیْهِمْ سَبِیْلًا ۟
4.90. ஆயினும் நீங்கள் யாருடன் போர் நிறுத்தத்திற்கான உறுதியான ஒப்பந்தம் செய்துகொண்டீர்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டவர்களைத்தவிர. அல்லது மனநெருக்கடியால் உங்களுடனோ தங்கள் கூட்டத்துடனோ போரிட விரும்பாமல் உங்களிடம் வந்தவர்களைதவிர. அல்லாஹ் நாடினால் அவர்களை உங்கள்மீது ஆதிக்கம் செலுத்த வைத்திருப்பான். அவர்கள் உங்களுடன் போரிட்டிருப்பார்கள். அல்லாஹ் வழங்கிய ஆரோக்கியத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களைக் கொலைசெய்யவோ கைதிகளாகப் பிடிக்கவோ வேண்டாம். அவர்கள் உங்களைவிட்டும் ஒதுங்கி உங்களுக்கு எதிராகப் போரிடாமல், சமாதானம் கோரியோராக உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அவர்களைக் கொலை செய்யவோ கைதிகளாகப் பிடிக்கவோ அல்லாஹ் உங்களுக்கு எந்த வழியையும் ஏற்படுத்தவில்லை.
عربی تفاسیر:
سَتَجِدُوْنَ اٰخَرِیْنَ یُرِیْدُوْنَ اَنْ یَّاْمَنُوْكُمْ وَیَاْمَنُوْا قَوْمَهُمْ ؕ— كُلَّ مَا رُدُّوْۤا اِلَی الْفِتْنَةِ اُرْكِسُوْا فِیْهَا ۚ— فَاِنْ لَّمْ یَعْتَزِلُوْكُمْ وَیُلْقُوْۤا اِلَیْكُمُ السَّلَمَ وَیَكُفُّوْۤا اَیْدِیَهُمْ فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَیْثُ ثَقِفْتُمُوْهُمْ ؕ— وَاُولٰٓىِٕكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَیْهِمْ سُلْطٰنًا مُّبِیْنًا ۟۠
4.91. நம்பிக்கையாளர்களே! நயவஞ்சகர்களில் ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் தமது உயிர்களைக் காத்துக்கொள்வதற்காக உங்களிடம் ஈமானை வெளிப்படுத்துகிறார்கள். தங்கள் சமூகத்தவரிடம் தப்பித்துக்கொள்வதற்காக அவர்களிடம் செல்லும்போது நிராகரிப்பை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதன் பக்கமும், அவனுக்கு இணைகற்பிப்பதன் பக்கமும் அழைக்கப்பட்டால் உடனே பதிலளித்துவிடுகிறார்கள். இவர்கள் உங்களுக்கு எதிராகப் போரிடாமல் விலகவில்லை; சமாதானம் கோரி உங்களிடம் அடிபணிந்தவர்களாக வரவில்லை; உங்களை விட்டும் தங்கள் கைகளைத் தடுத்துக்கொள்ளவில்லை. எனவே இவர்களைக் கண்ட இடத்தில் பிடித்துக் கொலை செய்யுங்கள். இப்படிப்பட்ட பண்புடையவர்களை அவர்களின் துரோகம், சூழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக நீங்கள் பிடித்துக் கொலை செய்வதற்கு தெளிவான ஆதாரத்தை நாம் வழங்கிவிட்டோம்.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• خفاء حال بعض المنافقين أوقع الخلاف بين المؤمنين في حكم التعامل معهم.
1.சில நயவஞ்சகர்களின் நிலை தெளிவற்றதாக இருந்ததனால் முஃமின்களுக்கு மத்தியில் அவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டது.

• بيان كيفية التعامل مع المنافقين بحسب أحوالهم ومقتضى المصلحة معهم.
2. நயவஞ்சகர்களின் நிலமைகளைக் கவனத்திற்கொண்டு நலவுகள் ஏற்படும் விதத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற விஷயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• عدل الإسلام في الكف عمَّن لم تقع منه أذية متعدية من المنافقين.
3. நயவஞ்சகர்களில் தீங்கிழைக்காதவர்களை விட்டும் தவிர்ந்திருக்குமாறு இஸ்லாம் கூறுவதில் இருந்து அதன் நீதி தௌிவாகின்றது.

• يكشف الجهاد في سبيل الله أهل النفاق بسبب تخلفهم عنه وتكلُّف أعذارهم.
4. அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் புனிதப் போர் நயவஞ்சகர்களை இனம்காட்டும். அவர்கள் போரைவிட்டுப் பின்தங்கிவிடுவார்கள்; வீணான சாக்குப்போக்குகளைக் கூறுவார்கள்.

 
معانی کا ترجمہ سورت: نساء
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں