Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: نساء   آیت:
وَالَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْیَوْمِ الْاٰخِرِ ؕ— وَمَنْ یَّكُنِ الشَّیْطٰنُ لَهٗ قَرِیْنًا فَسَآءَ قَرِیْنًا ۟
4.38. அல்லாஹ்வின்மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் மக்களுக்குக் காட்ட வேண்டும், அவர்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக தங்கள் செல்வங்களைச் செலவுசெய்பவர்களுக்கு நாம் இழிவுதரும் வேதனையைத் தயார்படுத்தி வைத்துள்ளோம். ஷைத்தானை அவர்கள் பின்பற்றியதனால்தான் வழிதவறினார்கள். ஷைத்தான் யாருக்கு உற்ற தோழனாக இருப்பானோ அவனே கெட்ட தோழமையுடையவனாவான்.
عربی تفاسیر:
وَمَاذَا عَلَیْهِمْ لَوْ اٰمَنُوْا بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقَهُمُ اللّٰهُ ؕ— وَكَانَ اللّٰهُ بِهِمْ عَلِیْمًا ۟
4.39. அவர்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் உண்மையாகவே நம்பிக்கைகொண்டு, தங்களின் செல்வங்களை அவனுடைய பாதையில் அவனுக்காகவே செலவழித்தால் அவர்களுக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது? மாறாக அதில்தான் அவர்களுக்கு அனைத்து நன்மைகளும் அடங்கியுள்ளன. அல்லாஹ் அவர்களைக் குறித்து நன்கறிந்தவன். அவர்களது நிலமை அவனைவிட்டு மறைவானதல்ல. ஒவ்வொருவருக்கும் அவரது செயலுக்கேற்ற கூலியை அவன் வழங்குவான்.
عربی تفاسیر:
اِنَّ اللّٰهَ لَا یَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ۚ— وَاِنْ تَكُ حَسَنَةً یُّضٰعِفْهَا وَیُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِیْمًا ۟
4.40. அல்லாஹ் நீதி செலுத்தக்கூடியவன். தன் அடியார்களில் யார்மீதும் அவன் அநீதி இழைக்க மாட்டான். அவர்களின் நன்மைகளில் அணுவளவுகூட குறைத்துவிடவோ தீமைகளில் எதையும் அதிகரித்துவிடவோ மாட்டான். அணுவளவு நன்மை இருந்தாலும் தனது அருளினால் அதனை பன்மடங்காக்கித் தருவான். அத்துடன் தன் புறத்திலிருந்து பெரும் கூலியையும் வழங்கிடுவான்.
عربی تفاسیر:
فَكَیْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍ بِشَهِیْدٍ وَّجِئْنَا بِكَ عَلٰی هٰۤؤُلَآءِ شَهِیْدًا ۟ؕؔ
4.41. மறுமைநாளில் நாம் ஒவ்வொரு தூதரையும் அவரவர் சமூகம் செய்தவற்றுக்குச் சாட்சியாகவும் உம்மை உமது சமூகத்துக்கு சாட்சியாளராகவும்கொண்டுவரும் போது நிலைமை என்னவாகும்?
عربی تفاسیر:
یَوْمَىِٕذٍ یَّوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا وَعَصَوُا الرَّسُوْلَ لَوْ تُسَوّٰی بِهِمُ الْاَرْضُ ؕ— وَلَا یَكْتُمُوْنَ اللّٰهَ حَدِیْثًا ۟۠
4.42. அந்த மகத்தான நாளில் அல்லாஹ்வை நிராகரித்து தூதருக்கு மாறுசெய்தவர்கள் தாங்கள் மண்ணோடு மண்ணாக பூமியோடு சங்கமமாகி விடக்கூடாதா என்று ஏங்குவார்கள். அவர்கள் செய்த எதனையும் அல்லாஹ்வைவிட்டும் அவர்களால் மறைக்க முடியாது. ஏனெனில் அல்லாஹ் அவர்களின் நாவுகளுக்கு முத்திரையிட்டுவிடுவான். எனவே அவற்றால் பேச முடியாது. உறுப்புகளுக்கு பேசவதற்கு அனுமதியளிப்பான். எனவே அவை அவர்களுக்கெதிராக அவர்களது செயல்களைப் பற்றி சாட்சிகூறும்.
عربی تفاسیر:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْتُمْ سُكٰرٰی حَتّٰی تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِیْ سَبِیْلٍ حَتّٰی تَغْتَسِلُوْا ؕ— وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا ۟
4.43. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் போதையில் இருக்கும்போது போதைதெளியும்வரை, நீங்கள் கூறுவதை அறிந்துகொள்ளும்வரை தொழாதீர்கள். இது மது தடைசெய்யப்படுவதற்கு முன்னால் உள்ள நிலை. நீங்கள் குளிப்பு அவசியமான நிலையில் இருக்கும்போது குளிக்கும் வரை தொழவோ, தரிக்காமல் கடந்துசெல்வதற்காகவே தவிர பள்ளிவாயில்களில் நுழையவோ வேண்டாம். நீங்கள் நோய்வாய்ப்பட்டு உங்களால் தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லையெனில் அல்லது நீங்கள் பயணத்தில் இருந்தால் அல்லது நீங்கள் மலஜலம் கழித்துவிட்டுவந்தால் அல்லது உங்கள் மனைவியுன் உடலுறவு கொண்டால் அப்போது நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையெனில் தூய்மையான மண்ணை எடுத்து, அதனால் உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக்கொள்ளுங்கள். நிச்சயாக அல்லாஹ் உங்களின் குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடியவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
عربی تفاسیر:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یَشْتَرُوْنَ الضَّلٰلَةَ وَیُرِیْدُوْنَ اَنْ تَضِلُّوا السَّبِیْلَ ۟ؕ
4.44. தூதரே! அல்லாஹ் தவ்ராத்திலிருந்து கொஞ்சம் அறிவைக் கொடுத்த யூதர்களைப் பற்றி உமக்குத் தெரியாதா? அவர்கள் நேர்வழிக்குப் பகரமாக வழிகேட்டை வாங்கிக் கொண்டார்கள். நம்பிக்கையாளர்களே! அவர்களின் கோணல்மிக்க வழியில் நீங்களும் செல்ல வேண்டும் என்பதற்காக, தூதர் கொண்டுவந்த நேரான பாதையைவிட்டும் உங்களை வழிகெடுக்க ஆசை கொண்டுள்ளார்கள்.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• من كمال عدله تعالى وتمام رحمته أنه لا يظلم عباده شيئًا مهما كان قليلًا، ويتفضل عليهم بمضاعفة حسناتهم.
1. அல்லாஹ்வின் பரிபூரண நீதி மற்றும் கருணையின் காரணமாகவே தன் அடியார்களுக்கு சிறிதும் அநீதி இழைப்பதில்லை. மாறாக அவர்களுக்குப் பன்மடங்கு நன்மைகளை வழங்கி அருள்புரிகிறான்.

• من شدة هول يوم القيامة وعظم ما ينتظر الكافر يتمنى أن يكون ترابًا.
2. மறுமை நாளின் திகில் மற்றும் நிராகரிப்பாளனை எதிர்பார்த்திருக்கும் பெரும் தண்டைனைகளின் காரணமாக அவன் தான் மண்ணோடு மண்ணாக ஆகிவிடக்கூடாதா என்று ஆசைகொள்வான்.

• الجنابة تمنع من الصلاة والبقاء في المسجد، ولا بأس من المرور به دون مُكْث فيه.
3. குளிப்பு அவசியமான நிலையில் இருப்பவர் தொழுவதோ பள்ளிவாயிலில் தங்குவதோ கூடாது. அதனைக் கடந்து செல்வது அனுமதிக்கப்பட்டது.

• تيسير الله على عباده بمشروعية التيمم عند فقد الماء أو عدم القدرة على استعماله.
4. தண்ணீர் கிடைக்காதபோது அல்லது அதனைப் பயன்படுத்த முடியாதபோது மண்ணைப் பயன்படுத்தலாம் என்ற சட்டத்தின் மூலம் அல்லாஹ் தன் அடியார்கள் மீது எளிதாக்கியுள்ளான்.

 
معانی کا ترجمہ سورت: نساء
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں