Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: فُصّلت   آیت:

புஸ்ஸிலத்

سورہ کے بعض مقاصد:
بيان حال المعرضين عن الله، وذكر عاقبتهم.
அல்லாஹ்வைப் புறக்கணித்தோரின் நிலையை விளக்கி, அவர்களின் இறுதி முடிவைக் குறிப்பிடுதல்

حٰمٓ ۟ۚ
40.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
عربی تفاسیر:
تَنْزِیْلٌ مِّنَ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۚ
41.2. இந்த குர்ஆன் அளவிலாக் கருணையாளனும் இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாகும்.
عربی تفاسیر:
كِتٰبٌ فُصِّلَتْ اٰیٰتُهٗ قُرْاٰنًا عَرَبِیًّا لِّقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟ۙ
41.3. இதன் வசனங்கள் முழுமையாக தெளிவுபடுத்தப்பட்டு அறிந்துகொள்ளும் மக்களுக்காக அரபி மொழியிலான குர்ஆனாக ஆக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள்தாம் அதன் கருத்துக்களைக் கொண்டும் அதிலுள்ள சத்தியத்துக்கான நேர்வழியைக் கொண்டும் பயனடைவார்கள்.
عربی تفاسیر:
بَشِیْرًا وَّنَذِیْرًا ۚ— فَاَعْرَضَ اَكْثَرُهُمْ فَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟
41.4. அது நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை தயார்படுத்திவைத்துள்ளான் என்று நற்செய்தி கூறுவதாகவும் நிராகரிப்பாளர்களுக்கு அவன் வேதனைமிக்க தண்டனையை தயார்படுத்தி வைத்துள்ளான் என்று எச்சரிக்கை செய்வதாகவும் உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் அதனைப் புறக்கணித்துவிட்டார்கள். அவர்கள் அதிலுள்ள வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளும் நோக்கில் செவியேற்க மாட்டார்கள்.
عربی تفاسیر:
وَقَالُوْا قُلُوْبُنَا فِیْۤ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَیْهِ وَفِیْۤ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْ بَیْنِنَا وَبَیْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ ۟
41.5. அவர்கள் கூறினார்கள்: “எங்களின் உள்ளங்கள் உறையிடப்பட்டுள்ளன. நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கின்றீரோ அதனை அவற்றால் விளங்கிக் கொள்ள முடியாது. எங்களின் செவிகளில் அடைப்பு உள்ளது. எனவே அவற்றால் செவியேற்க முடியாது. எங்களுக்கும் உமக்கும் இடையே திரை உள்ளது. எனவே நீர் கூறும் எதுவும் எங்களை அடையாது. நீர் உம் வழியில் செயல்படும். நிச்சயமாக நாங்களும் எங்களின் வழியில் செயல்படுகின்றோம். நாங்கள் உம்மை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம்.”
عربی تفاسیر:
قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَاسْتَقِیْمُوْۤا اِلَیْهِ وَاسْتَغْفِرُوْهُ ؕ— وَوَیْلٌ لِّلْمُشْرِكِیْنَ ۟ۙ
41.6. -தூதரே!- பிடிவாதம் கொண்ட இவர்களிடம் நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதன்தான். ஆயினும் ‘வணக்கத்திற்குரிய உண்மையான உங்களின் இறைவன் அல்லாஹ் ஒருவன்தான்’ என்று அல்லாஹ் எனக்கு வஹி அறிவிக்கிறான். எனவே அவனின்பால் செல்லும் வழிகளில் பயணியுங்கள். அவனிடமே பாவங்களுக்கு மன்னிப்புக் கோருங்கள். அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவோர் அல்லது யாரையாவது அவனுக்கு இணையாக்குவோருக்கு அழிவும் வேதனையும் உண்டு.”
عربی تفاسیر:
الَّذِیْنَ لَا یُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟
41.7. அவர்கள் தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்க மாட்டார்கள். அவர்கள் -மறுமையையும் அங்கு வழங்கப்படும் நிலையான அருட்கொடையையும் வேதனைமிக்க தண்டனையையும்- மறுக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
عربی تفاسیر:
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠
41.8. நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல்புரிந்தவர்களுக்கு என்றும் முடிவடையாத நிரந்தரமான சுவனம் என்னும் கூலி இருக்கின்றது.
عربی تفاسیر:
قُلْ اَىِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَ بِالَّذِیْ خَلَقَ الْاَرْضَ فِیْ یَوْمَیْنِ وَتَجْعَلُوْنَ لَهٗۤ اَنْدَادًا ؕ— ذٰلِكَ رَبُّ الْعٰلَمِیْنَ ۟ۚ
41.9. -தூதரே!- இணைவைப்பாளர்களைக் கண்டிக்கும் விதமாக நீர் அவர்களிடம் கேட்பீராக: “பூமியை ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்களில் படைத்த அல்லாஹ்வை ஏன் நிராகரிக்கிறீர்கள்? அவனுக்கு இணைகளை ஏற்படுத்தி ஏன் அவனைத் தவிர மற்றவர்களை வணங்குகிறீர்கள்? அவன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனாவான்.
عربی تفاسیر:
وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ مِنْ فَوْقِهَا وَبٰرَكَ فِیْهَا وَقَدَّرَ فِیْهَاۤ اَقْوَاتَهَا فِیْۤ اَرْبَعَةِ اَیَّامٍ ؕ— سَوَآءً لِّلسَّآىِٕلِیْنَ ۟
41.10. அது ஆட்டம் காணாமல் இருப்பதற்காக அதற்கு மேலே அதனை உறுதிப்படுத்தும் உறுதியான மலைகளையும் அமைத்துள்ளான். அதில் அபிவிருத்தி செய்து அதிலுள்ளவர்களுக்கு எப்போதும் நலவு வழங்குதாக ஆக்கியுள்ளான். முந்தைய இரண்டு நாட்களையும் முழுமைப்படுத்தும் செவ்வாய், புதன் ஆகிய நாட்களையும் சேர்த்து சரியாக நான்கு நாட்களில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தேவையான உணவுகளை சீராக அதில் நிர்ணயித்தான். இது குறித்து கேட்க நாடுபவர்களுக்கு (விடை இதுதான்).
عربی تفاسیر:
ثُمَّ اسْتَوٰۤی اِلَی السَّمَآءِ وَهِیَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْاَرْضِ ائْتِیَا طَوْعًا اَوْ كَرْهًا ؕ— قَالَتَاۤ اَتَیْنَا طَآىِٕعِیْنَ ۟
41.11. பின்னர் அல்லாஹ் வானத்தை படைப்பதன்பால் கவனம் செலுத்தினான். அப்போது அது புகையாக இருந்தது. அவன் வானத்திடமும் பூமியிடமும் கூறினான்: “விரும்பியோ அல்லது நிர்பந்தமாகவோ என் கட்டளைக்குக் கட்டுப்படுங்கள். அதைத் தவிர வேறு வழி உங்களுக்கு இல்லை” அவை கூறின: “நாங்கள் விரும்பியே உனக்குக் கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உன் விருப்பத்திற்கு மாற்றாக எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை.”
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• تعطيل الكافرين لوسائل الهداية عندهم يعني بقاءهم على الكفر.
1. நிராகரிப்பாளர்கள் தம்மிடமுள்ள நேர்வழி பெறுவதற்கான சாதனங்களைச் செயலிழக்கச் செய்தமை அவர்களை நிராகரிப்பில் நிலைக்கச் செய்துவிட்டது.

• بيان منزلة الزكاة، وأنها ركن من أركان الإسلام.
2. ஸகாதின் அந்தஸ்தையும் அது இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று என்பதைத் தெளிவுபடுத்தல்.

• استسلام الكون لله وانقياده لأمره سبحانه بكل ما فيه.
3. பிரபஞ்சமும் அதில் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் கட்டளைக்கும் கட்டுப்படுகின்றன.

 
معانی کا ترجمہ سورت: فُصّلت
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں